வரு. 78 இல. 23

ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 11
விரோதி வருடம் தை மாதம் 14ம் திகதி புதன்கிழமை

WEDNESDAY, JANUARY 27, 2010

வேட்பாளர் பதிவு செய்யப்பட்ட வாக்காளராக இருக்க வேண்டியதில்லை

வேட்பாளர் பதிவு செய்யப்பட்ட வாக்காளராக இருக்க வேண்டியதில்லை

தேர்தல்கள் ஆணையர்

இலங்கையில் நடைமுறையில் உள்ள தேர்தல் சட்டத்தின்படி தேர்தலொன்றில் வேட்பாளராகுவ தற்கு ஒருவர் பதிவு செய்யபட்ட வாக்காளராக இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை என்று தேர்தல்கள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க கைச்சாத்திட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

வேட்பாளர் ஒருவர் பதிவு செய்யப்பட்ட வாக்காளராக இருந்தாலும் அவர் தனது வாக்கை அளிக்கவேண்டும் என்பதும் அவசியமல்ல. அவர் பதிவு செய்யப்பட்ட வாக்காளராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதையும் தேர்தலில் அவர் தெரிவு செய்யப்படு வதையும் அது எந்த வகையிலும் பாதிக்காது என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப் பட்டுள்ளது.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •