வரு. 78 இல. 23

ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 11
விரோதி வருடம் தை மாதம் 14ம் திகதி புதன்கிழமை

WEDNESDAY, JANUARY 27, 2010

பனிப்பொழிவுக்கு மத்தியில் மக்கள் அதிகாலையில் வாக்களிப்பு

மலையகத்தில்

பனிப்பொழிவுக்கு மத்தியில் மக்கள் அதிகாலையில் வாக்களிப்பு

மலையகத்தில் கடுமையான பனிப்பொழிவுக்கு மத்தியிலும் மக்கள் அதிகாலை வேளையிலேயே உற்சாகத்துடன் வாக்களிப்பில் கலந்துகொண்டனர்.

குறித்த நேரத்திற்கு முன்பாகவே மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று நீண்ட கியூ வரிசையில் காத்து நின்றதைக் காணமுடிந்தது.

சாமிமலை, நோர்வூட், டிக்கோயா ஆகிய பகுதிகளில் பெருமளவு வாக்காளர்களை காலை வேளையிலேயே வாக்களித்து விட்டனர்.

சாமிமலை பிரதேசத்தில் கவரவில சிங்கள வித்தியாலயம், கவரவில ஆரம்ப கல்வி தமிழ் வித்தியாலயம், கிளனுகி தமிழ் வித்தியாலயம் என்பன பிரதான வாக்களிப்பு நிலையமாக தெரிவு செய்யப்பட்டிருந்தது.

பெருந்தோட்டப் பகுதிகளின் வாக்காளர் வாக்களிப்பில் ஈடுபடுவதற்கு வசதியாக இம்முறை விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இதனால் தொழிலாளர்களும் நேரத்துடனேயே தங்களின் வாக்குகளை அளித்தார்கள்.

எனினும் கடந்த தேர்தல்களில் வாக்களித்த பெருமளவு வாக்காளர்களுக்கு இம்முறை வாக்காளர் அட்டைகள் கிடைக்க பெறாமல் வருத்தம் தெரிவித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மஸ்கெலியா, லக்கம், டெல்ஹவுஸ், மறே, கஸ்கேவத்தை, மெளசாக்கொல்லை, மஸ்கெலியா 2, புளூம்பீல்ட், இராணி தோட்டம், மொக்கா, கார்ட்டுமார், சாமிமலை, கெளரவலை (தமிழ்), கெளரவலை (சிங்களம்), பன்சல, குடாமஸ்கெலியா, ஸ்டொர்கம், கெளரவலை ‘ஏ’ பிரிவு ஆகிய வாக்களிப்பு நிலையங்களில் சுறுசுறுப்புடன் மக்கள் வாக்களித்தனர்.

புதுக்காடு, ராஜமலை, கார்ட் மோர் ஆகிய தூரத்துத் தோட்டங் களிலுள்ள வாக்காளர்கள் யாவரும் விடியற்காலை 5 மணிக்கு எழுத்து வாக்குச்சாவடிகளுக்கு நடந்து செல் வதையும் காணக்கூடியதாக இரு ந்தது. இதுவரை எத்தகைய புகார்களும் வாக்குச்சாவடிக ளிலிருந்து பொலிஸாருக்குக் கிடை க்கவில்லை என்று மஸ்கெலியா பொலிஸ் அதிகாரி அறிவித்துள் ளார்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •