வரு. 78 இல. 23

ஹிஜ்ரி வருடம் 1431 ஸபர் பிறை 11
விரோதி வருடம் தை மாதம் 14ம் திகதி புதன்கிழமை

WEDNESDAY, JANUARY 27, 2010

கல்விக்கு அதிக நிதி ஒதுக்க தீர்மானம்

கல்விக்கு அதிக நிதி ஒதுக்க தீர்மானம்

2010 ஆம் ஆண்டில் கல்வித்துறைக்கு அதிக நிதியை ஒதுக்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கு திட்டத்தின் மூலம் கல்வியின் முன்னேற்றத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்துள்ளார்.

கடுவெல போமிரிய மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற பாடசாலை புத்தகங்கள் மற்றும் அப்பியாசக் கொப்பிகள் விநியோக நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு பேசிய அமைச்சர் மேலும் கூறியதாவது; எந்த வகை பயமும் சந்தேகமும் இன்றி சுதந்திரமாக கல்வியை மேற்கொள்வதற்கு சுதந்திரமான நாடொன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டு சிறுவர்களுக்கு பெற்றுக் கொடுத்திருக்கிறார்.

2010 ஆம் ஆண்டுக்காக கல்வித்துறைக்கு அதிக நிதியை ஒதுக்கியிருப்பது சிறுவர்களின் கல்விக்கு தேவையான அனைத்து வசதிகளையும் குறைவின்றி பெற்றுத்தருவதற்காகவேயாகும்.

வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் ஆகிய திட்டங்கள் மூலமும் கல்விக்காக பெரும் பங்கு ஆற்றப்பட்டுள்ளது. மஹிந்த சிந்தனை எதிர்நோக்கு மூலம் அது நன்கு தெளிவாகிறது என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த மேலும் கூறினார்.

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •