வரு. 68 இல. 47

துர்முகி வருடம் கார்த்திகை மாதம் 05ம் நாள் ​​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1438 ஸபர் பிறை 19

SUNDAY NOVEMBER 20, 2016

 

 

மீண்டும் அட்லீ இயக்கத்தில் விஜய்

மீண்டும் அட்லீ இயக்கத்தில் விஜய்

'பைரவா' படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் உருவாகவிருக்கும் படத்துக்கு திகதிகள் ஒதுக்கியிருக்கிறார் விஜய்.

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, ராதிகா சரத்குமார், இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'தெறி'. தாணு தயாரிப்பில் வெளியான இப்படம், வசூல் ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அப்படத்தைத் தொடர்ந்து மீண்டும் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. பரதன் இயக்கத்தில் உருவாகி வரும் 'பைரவா' படத்தைத் தொடர்ந்து, மீண்டும் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இக்கூட்டணிக்கான அறிவிப்பை அதிகாரபூர்வ ட்விட்டர் தளத்தில் வெளியிட்டது தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம்.

ஜனவரி இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. தற்போது விஜய்யுடன் நடிக்கவிருக்கும் இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.