வரு. 68 இல. 47

துர்முகி வருடம் கார்த்திகை மாதம் 05ம் நாள் ​​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1438 ஸபர் பிறை 19

SUNDAY NOVEMBER 20, 2016

 

 

தடை

குஷாலை தடை செய்த கட்டார் நிறுவனத்துக்கு

தடை

இலங்கை கிரிக்கெட் வீரர் குஷல் ஜனித் பெரேராவின் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பரிசோதனையை உறுதி செய்த கட்டார் இராசாயன ஆய்வுகூடத்தின் பரிசோதனை நடவடிக்கைகள் அனைத்தையும் உலக ஊக்கமருந்து தடை நிவாரண நிறுவனம் (WADA) தற்காலிகமாக இடை நிறுத்த தீர்மானித்துள்ளது.

அவ் இராசாயன ஆய்வுகூடத்தின் நடவடிக்கைகள் விசாரணைக்கு உட்படுத்தி நான்கு மாதங்களுக்கு அதனை தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை ஊக்கமருந்து தடுப்பு நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா உறுதி செய்தார்.

இத் தடை தொடர்பாக உலகெங்கிலுமுள்ள ஒலும்பிக் சங்கங்கள் சர்வதேச தேசிய விளையாட்டு சங்கங்கள், தேசிய விளையாட்டு அதிகாரிகள் மற்றும் விளையாட்டு தொடர்பானவர்களுக்கு அறிவிக்க உலக ஊக்க மருந்து தடை நிறுவனம் (WADA) நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கு மேலதிகமாக தற்போது ஆய்வு கூடத்திலுள்ள வீர, வீராங்கனைகளின் இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளை பாதுகாப்பாக பதினான்கு நாட்களுக்குள் உலக ஊக்கமருந்து தடை நிவாரண நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வு கூடத்துக்கு அனுப்பும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி கடந்த வருடம் பாகிஸ்தானுடன் நடத்திய போட்டியின் போது குஷல் ஜனித் பெரேராவிடம் பெற்றுக் கொண்ட சிறுநீர் மாதிரியில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து காணப்பட்டதாக கட்டார் இராசாயன ஆய்வு கூடம் பெற்றுக் கொடுத்த அறிக்கையின்படி தற்காலிகமாக அவருக்கு போட்டி தடை விதித்த்தால் அவர் இழக்க நேரிட்டது.

அச் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில் இலங்கை கிரிக்கெட் தலைவரும் பிரதி சபாநாயகருமான திலங்க சுமதிபாலவின் தலையீட்டுடன் ஜனாதிபதி சட்டத்தரணி தினால் பிலிப்ன, குஷல் ஜனித்தின் முகாமையாளர் ரவி த சில்வா போன்றோரால் கொழும்பு வடக்கு (நாகம) போதனை வைத்தியசாலையின் உயிரியல் இராசாயன நிபுணர் வைத்தியர் பீ.கே.டி.பீ. தயாநாத்திடம் ஆய்வுகூட அறிக்கையை அளித்ததோடு அதில் கட்டார் ஆய்வுகூட அறிக்கையின் பல குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் குஷல் ஜனித் பெரேராவின் கிரிக்கெட் போட்டித் தடை நீக்கப்பட்டது.

இது தொடர்பாக இலங்கை ஊக்கமருந்து தடுப்பு பிரதிநிதித்துவ நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா கட்டார் ஆய்வுகூடம் குஷல் ஜனித்துக்கு கட்டாயமாக நஷ்ட ஈடு வழங்க வேண்டுமெனவும் அதற்காக நிறுவன பணிப்பாளர் நாயகமும் குஷல் நஷ்ட ஈடு பெறுவதற்கு தனிப்பட்ட முறையில் தலையிடுவார் எனக் கூறினார்.

ஆய்வு கூடத்தால் செய்யப்பட்ட தவறு காரணமாகவே இவை அனைத்தும் நிகழ்ந்துள்ளது. (WADA) அமைப்பிற்கும் எதுவும் செய்ய முடியாது போனது. சர்வதேச ஊக்கமருந்து தடை நிவாரண நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் டேவிட் ஹவ்மனை தனிப்பட்ட முறையில் சந்தித்து குஷலுக்கு ஏற்பட்ட அநியாயம் பற்றி முறையிட்டோம்.

அவர்கள் நஷ்டஈடு பெற உதவுவதாகக் கூறினார்கள். அதற்கான குஷல் ஜனித் பெரேராவின் சட்டத்தரணி நடவடிக்கை எடுத்து வருகின்றார். ஆனால் எவ்வளவு பணம் கொடுத்தாலும் அவருக்கு ஏற்பட்ட நட்டத்தை ஈடுசெய்ய முடியாதென பேராசிரியர் அர்ஜுன டி சில்வா கூறுவார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கும் குஷல் ஜனித்துக்கும் தனிப்பட்ட முறையில் சட்டத்தரணிகள் மற்றும் வைத்திய பரிசோதனைகளுக்காக செலவிடப்பட்ட கிட்டத்தட்ட மூன்றரை கோடி ரூபாவை (35,000,000) மீண்டும் வழங்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் நிறைவேற்று குழு முடிவு செய்துள்ளது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.