வரு. 68 இல.39

துர்முகி வருடம் புரட்டாதி மாதம் 09நாள் ​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 துல்ஹஜ் பிறை 23

SUNDAY SEPTEMBER 25, 2016

 

 
அகதிகளின் மீதான ஆதரவை வலுப்படுத்திய குழந்தைகள்

அகதிகளின் மீதான ஆதரவை வலுப்படுத்திய குழந்தைகள்

கென்யா, மெக்சிக்கோ, நெதர்லாந்து, கொரிய குடியரசு, சோமாலியா, இலங்கை, சுவீடன் மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளின் அரசாங்கங்களின் சார்பில் ஓபீ - ஈடி (OP – ED)

ஓராண்டிற்கு முன்னர் துருக்கி நாட்டின் கடற்கரையோரத்தில் கடலில் மூழ்கி இறந்த சிரிய இனத்தைச் சேர்ந்த தத்து நடைபோடும் குழந்தையாகிய ஆயிலான் குர்தியின் மனத்தை உருக்கும் மரணமானது உலகளாவிய ரீதியில் துயர உணர்வை ஏற்படுத்தியதுடன் அகதிகளுக்கும் புலம்பெயர்ந்தவர்களுக்கும் கூடுதலான விளைபயனுள்ளதும் மனிதாபிமானதுமான ஆதரவு வழங்கப்பட வேண்டுமென்ற அழைப்பை விடுத்துள்ளது.

மிகச் சமீபத்தல் அலப்போவில் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலிற்குப் பின்னர் ஓம்ரான் டாக்நீஷ் என்ற பெயரையுடைய மற்றுமொரு சிரிய சிறுவன் நோயாளர் காவு வண்டியொன்றுக்குள் திகைப்பு நிலையில் உட்கார்ந்திருப்பதை காண்பிக்கின்ற நிழற்படமானது போரினால் ஏற்படும் பாரிய நட்டத்தைப் பற்றி மனத்தில் ஆழமான கரிசனையை ஏற்படுத்தியுள்ளதுடன் இந்த துயர நிகழ்வு முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டியதற்கான அழைப்பை மீளவும் ஏற்படுத்தியுள்ளது.

எப்படியிருந்தபோதிலும் துயரமும் துன்பமும் நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையானது சமூகங்கள் வேரோடு சாய்க்கப்பட்டு பொருளாதார சீவனோபாயங்கள் அழிக்கப்பட்டு வன்செயல்கள் காரணமாக சந்ததிகள் இழக்கப்பட்டதன் பின்னரே விடுவிக்கப்படுகின்றது. நன்னெறிக் காரணங்களுக்காகவும் பாதுகாப்புக் காரணங்களுக்காகவும் பொருளாதாரக் காரணங்களுக்காகவும் வன்செயல் மோதல்கள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் நாம் அவற்றைத் தடுப்பதற்கு கூடுதலான விளைபயனுள்ள முறையில் செயலாற்றக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் உறுப்பினர் எதிர்த்தாக்குதல் அணுகு முறைக்குப் பதிலாக தடைப்படுத்தல் அணுகு முறைக்கு திசைமாற்றி நகர்த்த வேண்டியதன் தேவையைப் பற்றியும் கடந்த ஆண்டில் நிலைபேறான அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரலில் சமமின்மை மற்றும் விலக்கிவைத்தல் ஆகியவற்றின் மீதான மோதல்களின் சிக்கல் தன்மை என்பது பெண்கள் மற்றும் இளைஞர்களின் மத்திய வகிபாகம் வகித்தலுடன் தேசிய முயற்சிகளுக்கான ஆதரவுடன் அரசியல், பாதுகாப்பு, நீதி, அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகள் நடவடிக்கைகளைத் தொடர்புபடுத்திய நீண்டகாலத்தன்மையுடையதும் விரிவானதுமான அணுகுமுறையை வேண்டுகின்றது எனப்பொருள்படும்.

இது சருவதேச சமூகத்தினால் நிலையான தீவிர கவனமும் தலைமைத்துவமும் மேற்கொள்ளப்படுவதை வேண்டுகின்றது. ஏப்ரல் மாதத்தில் அங்கத்துவ நாடுகள் முக்கியமான தீர்மானங்களைப் பொதுப்பேரவையில் முன்வைப்பதற்கு உடன்பட்டதுடன் பாதுகாப்புப் பேரவையானது ஐக்கிய நாடுகள் அமைப்பு முறைமையை ஒளிவு மறைவு அணுகுமுறைகளிலிருந்து விலகி நிலைபேறான சமாதானத்தை எய்துவதற்காக ஒன்றிணைந்து செயலாற்றுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

நாம், கென்யா, மெக்சிக்கோ, நெதர்லாந்து, கொரியக் குடியரசு, சோமாலியா, இலங்கை, சுவீடன் மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளின் அரசாங்கங்களாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகத்தின் சமாதானத்தைக் கட்டி எழுப்பும் நிதியத்திற்கான கூட்டு ஆதரவளிக்கும் வாக்குறுதி வழங்கும் மாநாட்டை நடாத்துவதன் மூலம் சமாதான நிகழ்ச்சி நிரலுக்கு உத்வேகம் வழங்கும் நம்பிக்கையைக் கொண்டுள்ளோம்.

செப்டம்பர் 21 ஆந் திகதியன்று நடாத்தப்படும் இந்நிகழ்ச்சியானது கருத்திட்டங்களின் மூன்று ஆண்டுகளுக்கான செலவாக 300 மில்லியன் டொலர்களை வழங்குமாறு கோருகின்றது. 80 சதவீத மனிதாபிமானத் தேவைகள் வன்செயல் மோதல்களினாலேயே ஏற்படுவதைக் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு பார்க்கும்போது அவற்றைத் தடை செய்யக்கூடியதாகவிருந்தால் நாம் பெருமளவு துயரங்களைத் தவிர்க்கவும் தலையீட்டினால் பல பில்லியன் டொலர்களைச் சேமிக்கக்கூடியதாகவுமிருக்கும்.

சமாதானத்தைக் கட்டி எழுப்பும் நிதியமானது வன்செயல் மோதலிலிருந்து அல்லது வன்செயலில் இறங்குவதற்கான ஆபத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும் நாடுகளுக்கு ஆதரவு வழங்குவதற்கான தனிச்சிறப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்திதியமானது மற்றவைகளினால் ஏற்கப்பட முடியாத நிலையிலுள்ள நிதி மற்றும் அரசியல் ஆபத்துகளை எதிர்நோக்கக்கூடிய நிலையிலுள்ளது. இந்நிலையில் இது அடிக்கடி இதைவிட மிகவும் பெரிய நிதியங்கள் கிடைப்பதற்கான அத்திவாரத்தை இடுகின்றது.

இலங்கையில் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் நிதியம் மோதல் இடம்பெற்ற ஆண்டுகளில் காணிகளை இழந்த 7,000 மக்களின் மீள்குடியேற்றத்திற்கு நிதியளித்துள்ளது. மாலி நாட்டில் இந்த நிதியமானது போராளிகள் படையமைப்பிலிருந்து விலகியதன் பின்னர் சமூகத்திற்குள் அவர்கள் மீளச் சேர்த்துக் கொள்ளப்படுவதற்காக 26 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் பொறுப்பை ஏற்குமாறு தூண்டிப் போராளிகளின் ஆயுதங்களை இராணுவ முகாம்களில் அவர்க்ள கையளிப்பதற்கான நடைமுறையை ஆரம்பித்து வைத்துள்ளது. சோமாலியாவில் இந்த நிதியமானது ஒன்றுக்கும் மேற்பட்ட தலைமுறையினர் அனுபவிக்காத சட்ட நிறுவனங்களின் இடங்களில் உள்ளுராட்சி நிறுவனங்களின் நிறுவுதலுக்கு நிதியளித்துக் கொண்டிருக்கின்றது.

எண்ண முடியாத பெருந்தொகையான வன்செயலினால் பாதிக்கப்பட்டவர்களைத் தவிர நிலையானவைகளும் நீதியானவைகளுமான சமூகங்களை உருவாக்கும் நியதிகளில் பாரிய பங்கிலாபங்களை வழங்குகின்றவையும் மற்றும் ஒப்பேற்றத்தக்க பொருளாதாரங்களை அடிக்கோடிட்டுக் காண்பிக்கும் சமூகங்களையும் உருவாக்குவதற்கான முயற்சியில் இந்நிதியத்தை மீள்மூலதனமயப்படுத்தல் என்பது ஓர் சிறிய செலவாகும். இதன் காரணமாகவே நாம் எமது சகபாடி உறுப்பு நாடுகளை இந்நிதியத்தில் முதலீடு செய்யுமாறு கோருகின்றோம்.

நிதிப்பொறுபேற்பிற்கும் அப்பால் நிலைபேற்று சமாதான நிகழ்ச்சிநிரல் இதைப்போன்ற துயரங்களை எதிர்நோக்குகின்ற நாடுகளுக்கிடையே நிபுணத்துவத்தின் பரிமாற்றம் மூலம் அறிவைப் பகிருவதிலும் சமாதானத்தைக் கட்டிஎழுப்புவதிலும் ஒத்துழைப்பு வழங்குமாறும் கோரிக்கை விடுக்கின்றது. ஒவ்வொரு நடிகரும் வகிப்பதற்கான வகிபாகம் ஒன்று உள்ளது.

கடந்த பத்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட சமாதானத்தைக் கட்டி எழுப்புதல் நிதியத்தின் வேலை மற்றும் ஏனைய சமாதானததைக் கட்டி எழுப்பும் கொடை முனைவுகள் காரணமாக மோதலின் மூலவேர்க்காரணிகளை எவ்வண்ணம் கையாள வேண்டும் என்பது பற்றியும் நிலைபேறான சமாதானத்தை எவ்வாறு வளர்த்தெடுக்க வேண்டும் என்பது பற்றியும் நாம் நன்கு தெரிந்து கொண்டுள்ளோம்.

நிலைபேற்று சமாதான நிகழ்ச்சி நிரல் தற்போது ஐக்கிய நாடுகள் அமைப்பின் வேலையின் ஓர் மைய இலக்காகிக் கொண்டிருப்பதுடன் இந்த அமைப்பானது அதன் தாபகப்பட்டயத்தின் முதலாவது வரியில் உள்ள இணை ஆசிரியர்கள். அமினா சி. மொகமட், சிரியக் குடியரசின் வெளிநாட்டு அலுவல்களுக்கான அமைச்சரவைச் செயலாளர்.

குளோடியா ரூயிஸ் மசியுசலினாஸ், மெக்சிக்கோவின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அல்பேர்ட் கொயென்டேர்ஸ், நெதர்லாந்து இராச்சியத்தின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் யுன்பையுங்சே, கொரியக் குடியரசின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அப்துல் சலாம் ஹட்லிஜே ஒமர், சோமாலியா சமஷ்டிக் குடியரசின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர, இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அதிமேதகு ஆள. மார்கொட் வால்ஸ்குறோம், சுவீடன் நாட்டின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பரோனெஸ் அனிலே, ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு மற்றும் பொது நலவாய நாடுகள் அலுவலகத்தின் இராஜாங்க அமைச்சர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.