வரு. 68 இல.39

துர்முகி வருடம் புரட்டாதி மாதம் 09நாள் ​ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 துல்ஹஜ் பிறை 23

SUNDAY SEPTEMBER 25, 2016

 

 

குதிரைப்பந்தய துறையினரின் அற்புத நிகழ்வு

குதிரைப்பந்தய துறையினரின் அற்புத நிகழ்வு

இலங்கையின் ஆடைகள் வர்த்தகநாம சங்கம் (SLABA) Royal Turf Club உடன் இணைந்து Royal Turf Club SLABA Runway 2016 நிகழ்வை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன. வருடாந்த ஆடைகளின் அணிவகுப்பொன்றில் இலங்கையின் பிரபல ஆடை வர்த்தக நாமங்களை காட்சிப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக இது அமைந்தது.

Royal Turf Club SLABA Runway 2016 நிகழ்வு கடந்த 21ஆம் திகதியன்று மாலை ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. SLABA ஆனது ரீபொன், EKKO, எமரல்ட், சிக்னேச்சர், மன்சாரி, ட்ரென்டி, ரஃப், அரிஸ்டா LICC ஜீன்ஸ், ரெயின்கோ, JEZZA, அவிராத்தே, ஜிபுளொக், டிமக்ஸ், அரோரா, எனேஷன்ஸ், பெர்ரி அலன், வின்டேஜ், அப்டவுன் கண்டி, அன்ரே மற்றும் உள்ளூர் ஃபஷனுடன் தொடர்புடைய 60 இற்கு மேற்பட்ட அங்கத்தவர்களை உள்ளடக்கியதுடன் மிகச்சரியான பொருத்தம் எனும் தொனிப்பொருளில் அவை தமது வர்த்தகச் சின்னங்களை காட்சிப்படுத்தும் முதன்மை அனுசரணையாளரான Royal Turf Club உடன் இணைந்து, உலகளாவிய ரீதியில் ஃபஷன் ஷோக்களும் குதிரைப்பந்தயமும் ஒன்றையொன்று ஒத்தவை என்பதனை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளன.

இந்நிகழ்வு தொடர்பில் கருத்து தெரிவித்த SLABயின் தலைவர் இந்ரத்தா தர்மவர்தன, இலங்கைப் பொருளாதாரத்தில் ஒட்டுமொத்தத்தில் பங்களிக்கும் எண்ணற்ற ஆடை வர்த்தக நாமங்களை SLABA பிரதிநிதித்துவம் செய்கின்றது. தேசமான்ய ஏ.வை.எஸ். ஞானத்தின் சிந்தனையில் உதித்த சில்லறை அடை விற்பனைத் துறையானது தற்போது இலங்கையில் தயாரிக்கப்படும் ஆடைகளின் 50 வீத சந்தைப் பங்குகளுடன் 2 பில்லியன் அமெ. டொலரினும் அதிக பெறுமதிமிக்கதாக உள்ளது. எனவே தனியே ஆடைத்தொழில் துறை மாத்திரமன்றி ஒட்டுமொத்த பொருளாதாரத்துறை மேம்பாட்டுக்காகவும், கைத்தொழில்துறை சார் மற்றும் துரைசாரா தனிநபர்கள் சந்திக்கும், கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் ஒரு வருடாந்த நிகழ்வாக அமைவதை இலக்காகக் கொண்டே இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.

Royal Turf Clubஇன் தலைவர் சுரஞ்ஜித் பிரேமதாச கருத்து தெரிவிக்கையில், ஃபஷனும் குதிரைப்பந்தயமும் ஒன்றையொன்று பிரிக்க முடியாத வகையில் ஒன்றுக்கொன்று உறுதுணையாய் உள்ளதாகத் தெரிவித்தார்.

எமது இரு நிறுவனங்களுக்குள்ளும் நாம்

மேற்கொள்ளும் ஊக்குவிப்புகளிலும் எங்களது இலக்குகளிலும் கூட்டறவு உள்ளமையால் SLABA உடன் பங்குதாரராக Royal Turf Club தீர்மானித்தது. ஆடைத் தொழிற்துறையின் முக்கிய அம்சமாக உள்ளது. ஃபஷனும் தொடர்ச்சியாக மாற்றமடைந்து வரும் அதன் போக்குகளுமேயாகும். அதேவேளை ரோயல் அஸ்கொட், எப்சம் டேர்பி, மெல்பேர்ன் கிண்ணம், துபாய் கிண்ணம் என எதுவாக இருப்பினும் அவற்றில் ஃபஷன் முன்னிலை வகித்தே வந்துள்ளது. அதற்கான ஆர்வமே இப்பங்குடமைக்கான உந்துசக்தியாக அமைந்து இரு தரப்பினருக்குமே பொருத்தமான பங்குடைமையாக உள்ளது என்றார்.

SLABயின் செயலாளர் ஷாகீர் ஹாபிஸ் குறிப்பிடுகையில், ஒரு அமைப்பாக SLABயானது இலங்கை ஆடைத்தொழிற்துறையின் வெவ்வேறுபட்ட உற்பத்தி வரிசைகள் மற்றும் வர்த்தக நாமங்களை ஒன்றிணைக்கின்றன. SLBA ஆனது ஒரு அங்கத்துவ அமைப்பாக இருப்பதுடன் இலங்கையின் ஆடை வர்த்தக நாமத்துறையை மேம்படுத்தவதற்கான அனுசரணையாளராகவும் இருக்கிறது. எம்மிடம் 60 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அத்துடன் உள்ளுூர்ச் சந்தைக்கு உற்பத்தி செய்யும் நூற்றுக்கணக்கான நிறுவனங்களும் இருக்கின்றன. அத்துடன் இலங்கை அரசுடனும் அரசு சாரா நிறுவனங்களுடனும் நெருக்கமாகச் செயற்படுவதுடன் நிதியமைச்சு, கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சு EDB, வர்த்தக சம்மேளனம் மற்றும் JAFF ஆகியவற்றுடன் இணைந்து செயற்பட்டு அவற்றின் ஆதரவு மற்றும் முயற்சிகள் மூலமாக ஏனைய சந்தைகளை அணுகுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.