புத். 68 இல. 06

மன்மத வருடம் தை மாதம் 24ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ரபீஉல் ஆகிர் பிறை 27

SUNDAY FEBRUARY 07, 2016

 

 

வேண்டுமொரு புதுவாழ்வு

 

 

 

 

 

 

 

வேண்டுமொரு புதுவாழ்வு

முகில் துஞ்சு மலை சூழ்ந்த

எங்கள் மலைநாடு!

பச்சை எழில்

கொஞ்சி விளையாடும்

எங்களது வீடு!

கிள்ளிக் கிள்ளி கொழுந்தெடுத்து

கூடையிலே நிறைத்தோம்!

நம்ம

கெட்டு நொந்த வாழ்க்கையிலே

மாற்றம் வர உழைத்தோம்!

துரையோடு கங்காணியும்

தோளோடு தோள் நிற்பர்

கரைந்தோடும் நம்வாழ்வை

இங்கு!

காப்பாற்ற யாருமில்லை!

லயத்து வாழ்க்கை எப்போ?

நம்ம வீட்டு போகுமையா

நம்ம

வயத்துப் பசி போக்க

உண்ணும் நாளும்

வருவ தெப்போ!

ஏற்ற கூலி நாம் கேட்டால்

ஏளனமும் செய்கின்றனர்

ஏதேதோ வாக்குறுதி

அள்ளி அள்ளித் தெளிக்கின்றார்

நூற்றாண்டு இரண்டுகள்

இந்த மண்ணில் தொலைத்த

இனம்

மாற்றாந்தாய் மனத்தினரால்

மாளுதையா மலையினிலே

பரம்பரையாய்

உழைத்துழைத்து

பாடுபடும் பாட்டாளி

விடியலைத்

தேடுகிறோம்!

விடிவதெப்போ புதுவாழ்வு!

மணிமேகலை வரதராஜன், வந்தாறுமூலை

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.