புத். 68 இல. 06

மன்மத வருடம் தை மாதம் 24ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ரபீஉல் ஆகிர் பிறை 27

SUNDAY FEBRUARY 07, 2016

 

ஜோதிடம்
மேஷம்

இந்த இராசிகாரர்கள் எதற்கும் துணிந்தவர்கள் மனதில் குழப்பம் இருந்தாலும் எதையும் சமாளிக்கும் திறமை படைத்தவர்கள். இவர்களுக்கு புதன், வியாழனில் சற்று ஏற்றம் இறக்கம் இருக்கலாம். இது பொருளாதாரம் மற்றும் குடும்பச் சூழ்நிலையாக கூட இருக்கலாம்.

பெண்கள் - அஸ்வினி நட்சத்திரகாரர்களுக்கு வெகுமானம் உண்டு. பரணி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உடல் மற்றும் உறவினர்களோடு கார்த்திகை நட்சத்திரகாரர்களுக்கு பிள்ளைகளால் மனக் கஷ்டம் ஏற்படலாம்.

வியாபாரம் - அஸ்வினி நட்சத்திரகாரர்களுக்கு பண புழக்கம் அதிகரிக்கும். பரணி நட்சத்திரகாரர்களுக்கு, கூட்டுத் தொழிலாளியுடன் பகை ஏற்படும். கார்த்திகை நட்சத்திரகாரர்களுக்கு வருமானம் ஏற்றம் இறக்கம் இருக்கும்.

உத்தியோகம் - அரசு தொழிலில் சுமூகமான பலன் உண்டு. தனியார் பணியில் இருப்பவர்களுக்கு சற்று சலசலப்பான வாரம்.

பரிகாரம் - அஸ்வினி, பரணி நட்சத்திரகாரர்கள் ஆஞ்சநேயரை சனிக்கிழமை வணங்கவும். இளநீர் அபிஷேகம் செய்யவும் கார்த்திகை நட்சத்திரகாரர்கள் செவ்வாயன்று முருகனை வணங்கவும்.


ரிஷபம்

இந்த வாரம் எண்ணங்கள் நிறைவேறும். பணவிவகாரங்கள், தொழில், பங்கு வர்த்தகம் இப்படி அனைத்துமே எண்ணம்போல் நிறைவேறும். சொத்து விவகாரங்கள் முடிவிற்கு வரும். குடும்ப ஒற்றுமை ஓங்கும்.

பெண்கள் - மருத்துவ செலவு குறையும். யாதொரு பெரிய மாற்றமும் குடும்பத்தில் இல்லை. சகோதர, சகோதரி உறவு மேம்படும். வரவு கூடும். சொத்துக்கள் சேரும். கணவன், மனைவி உறவு முறையில் வெற்றி உண்டு. திருமணம் சிலருக்கு கைகூடும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும்.

உத்தியோகம் - அரசுபணி, தனியார், தொழில் சிறப்பாக இருக்கும். எந்தவிதமான பெரியமாற்றங்கள் இல்லை. மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு உண்டு.

வியாபாரம் - பங்கு வர்த்தகம் கைகொடுக்கும். புது முயற்சி இப்போது வேண்டாம். விரிவாக்கம், தொலைதூர வியாபாரம் செய்யலாம்.

பரிகாரம் - ரோகினி நட்சத்திரகாரர்கள் திங்கள், புதன் - வெள்ளி சந்திர தரிசனம் செய்யவும். 2 நெய் விளக்கேற்றவும்.


மிதுனம்

இந்த வாரம் மனதில் அழுத்தம் இருந்தாலும் நண்பர்கள் மற்றும் தெய்வ பணியால் சரியாகிவிடும். குழந்தைகளால் மனதில் பாரமோ அல்லது கவலையோ ஏற்பட கூடும். சிலருக்கு பண கஷ்டம் சிலருக்கு மனகஷ்டம். வாரத்தின் மத்தியில் நண்பர்களை சந்திக்கவும்.

பெண்கள் - வீட்டில் கணவருடன் மனவேற்றுமை, பிள்ளைகளால் ஏற்படும். கவலை வேண்டாம் அமைதியாக இருந்து சூழ்நிலைகளை கையாளவும். பெரியவர்களின் உடல் நலனில் கவனம் தேவை. எந்த ஒரு விஷயத்திலும் யோசித்து முடிவெடுக்கவும்.

உத்தியோகம் - வேலையிடத்தில் வார்த்தையில் கவனம் தேவை. மேல் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களிடம் பேசும் போது கவனம் தேவை. கோபம் வேண்டாம். வேலை மாற்றமோ, அல்லது இடமாற்றமோ இப்போது வேண்டாம்.

வியாபாரம் - இந்த வாரம் பணவருவாய் நன்றாக இருக்கும். இருந்தபோதிலும் மனதில் பாரம் இருந்து கொண்டே இருக்கும். பங்கு வர்த்தகம் பயன் தரும். கூட்டுத் தொழில் திருப்தி தரும்.

பரிகாரம் - சனிக்கிழமை 8 எள் தீபம் ஏற்றவும் சனீஸ்வரனுக்கு ராகு- கேது பரிகார பூசை செய்யவும் குடும்ப ஒற்றுமைகாக.


கடகம்

இந்த இராசிகாரர்களுக்கு இந்த வாரம் நல்ல வாரம். மகிழ்ச்சி தரும் வாரமாக அமையும். எந்தவிதமான மனக்கவலையும் வேண்டாம். குடும்பத்தில் ஒற்றுமை மற்றும் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்.

பெண்கள் - கணவன், மனைவி உறவு சீராக இருக்கும். கடன் சுமை குறையும். பிள்ளைகளால் இருந்த மனகஷ்டம் நீங்கும். மருத்துவ செலவு குறையும் சிலருக்கு திருமண யோகம் உண்டு. சில பெண்களுக்கு குழந்தை பேறு உண்டாகும். மனதில் மகிழ்ச்சி தரும் வாரமாக அமையும்.

வியாபாரம் - தனித்தோ அல்லது கூட்டுத் தொழிலோ, இரண்டுமே இலாபம் தரும். புதிதாக தொடங்க எண்ணம் இருந்தால் இந்த வாரம் புதன்கிழமைக்கு மேல் நன்றாக உள்ளது.

உத்தியோகம் - சிலருக்கு வேலை மாற்றம் உண்டு, சிலர் எதிர்பார்த்த மாற்றம் கிடைக்கும். எண்ணங்கள் நிறைவேறும்.

பரிகாரம் - வியாழனன்று தட்சணாமூர்த்திக்கு 3 நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யவும்.


சிம்மம்

இவ்வாரம் மனதிற்கு சந்தோஷமான வாரமாக அமையும். தொலைதூர செய்தி மகிழ்ச்சி தரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாக உள்ளது. சிலருக்கு நீண்டநாள் கனவு நினைவாகும். யாதொரு செயலிலும் அக்கறையும், எச்சரிக்கையும் தேவை. மகம் நட்சத்திரகாரர்களுக்கு உடல் நலம் தேறும். பூரம் நட்சத்திரகாரர்களுக்கு பிரயாணம் உண்டு. உத்ரம் நட்சத்திரகாரர்களுக்கு உறவினர்களால் தொல்லை.

பெண்கள் - வெளியில் செல்லும் போது, சமையல் செய்யும் போது கவனம் தேவை. உடலில் காயம் ஏற்படலாம். பிறந்த வீட்டால் பயன் உண்டு.

உத்தியோகம் - அரசு வேலை, தனியார் பணி இரண்டும் நன்மை தரும். பண விஷயத்தில் எச்சரிக்கை தேவை. பணிமாற்றம், இடமாற்றம் நன்மை தரும்.

வியாபாரம் - பங்கு வர்த்தகம், கூட்டுத் தொழில் மனதில் திருப்தி தரும். புதிய தொழில் ஆரம்பம் மற்றும் தொழில் விரிவாக்கம் நன்மை தரும்.

பரிகாரம் - முருகப்பெருமானை வியாழக்கிழமை வணங்குங்கள். 4 நெய்விளக்கு ஏற்றவும். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றவும்.


கன்னி

மனதில் இலேசாக ஒரு பாரம் இருக்கும். உங்களுடைய கூடப் பிறந்தவர்களால் மனக்கஷ்டம் ஏற்படலாம். ஒற்றுமை குறைய வாய்ப்புண்டு. கணவன், மனைவி உறவிலும் கசப்பு ஏற்படலாம். உத்ரம் நட்சத்திரகாரர்கள் வெளியூர் பிரயாணம் தவிர்க்கவும். ஹஸ்தம் நட்சத்திரகாரர்கள் புது கடன் வேண்டாம் சித்திரை நட்சத்திரகாரர்களுக்கு தகப்பனுடன் வாக்கு வாதம் வரலாம்.

பெண்கள் - வாக்கு, வாதங்களை குறைக்கவும். மனதில் குடும்ப ஒற்றுமை பற்றி அச்சம் ஏற்படும். பணப்பற்றாகுறை மனதில் ஒரு பாரமாகவே இருக்கும். கொடுத்த கடன் வசூலாவது தாமதிக்கலாம். கணவன், மனைவி உறவு பரவாயில்லை.

வியாபாரம் - எந்த ஒரு புது உறவையும் கூட்டுத்தொழிலில் சேர்க்க வேண்டாம். பணப்புழக்கம் திருப்தி தரும். புது தொழில் ஆரம்பம், விரிவாக்கம் வார மத்தியில் செய்யலாம். ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவதை தள்ளிபோடவும்.

உத்தியோகம் - செய்யும் வேலையில் மாற்றம் எதுவும் இல்லை. சிலருக்கு வேலைபளு அதிகரிக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு குறைவாக இருக்கும்.

பரிகாரம் - 4 நல்லெண்ணை தீபம் ஏற்றி ராகு பகவானை வியாழன் மற்றும் சனிக்கிழமை வணங்கவும்.


துலாம்

இந்த வாரம் மிகவும் செலவுகள் அதிகமாகும் வாரம். எந்த ஒரு காரியத்தை எடுத்தாலும் எளிதில் முடிக்கும் திறமை படைத்தவர்கள். உறவினர்களால் சிறு மனச் சஞ்சலம் ஏற்படும். வரவுகள் குறையும் செலவுகள் அதிகமாகும். திருமண நிச்சயம் ஆவது மற்றும் சுபகாரியங்களுக்கு அதிகம் செலவு செய்வீர்கள்.

பெண்கள் - குடும்பம் நன்மை பெறும். கணவன் மனைவி உறவு மேம்படும். வாரத்தின் மத்தியில் உறவினர்கள் வருகை சற்று சலசலப்பு தரும். ஸ்வாதி நட்சத்திரப் பெண்களுக்கு சுப செலவு ஏற்படும். சித்திரை நட்சத்திர பெண்களுக்கு குழந்தைகளால் செலவு ஏற்படும்.

வியாபாரம் - விரிவாக்கம், புது தொழில் முயற்சி இப்போது வேண்டாம். எதிர்பார்த்த கடன் உதவி தள்ளி போகலாம். சிலருக்கு வியாபார விஷயமாக வெளியூர் பிரயாணம் உண்டு. செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.

உத்தியோகம் - வெளியூர் பிரயாணம் வெற்றி தரும். மேல் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். சக ஊழியர்களுடன் மனஸ்தாபம் வரலாம். வாக்கு வாதம் வேண்டாம். சிலருக்கு இலாகா மாற்றம் உண்டு.

பரிகாரம் - மூன்று நட்சத்திரகாரர்களுமே செவ்வாய் அன்று விநாயகரை வழிபடுங்கள். சனி அன்று சனிஸ்வரனுக்கு எள் தீபம் ஏற்றவும். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றவும்.


விருச்சிகம்

வாரம் முழுவதும் சுறுசுறுப்புடன் காண்பீர்கள். இதுவரை, மனஅழுத்தம் இருந்தவர்களுக்கு இந்த வாரம் புதிய தெம்பும் தைரியமும் பெருகும். எந்த விதமான கவலையும் இன்றி சந்தோஷத்துடன் இருக்க வேண்டிய வாரம். வெளியூர் பிரயாணங்கள் மற்றும் யாத்திரை செல்ல நேரிடும்.

பெண்கள் - வாரத்தின் பிற்பகுதியில் உங்களுடைய தாயாருடன் மனக்கசப்பு ஏற்படலாம். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். உறவினர்கள், நண்பர்கள் பெரிதும் பயனில்லை. கணவர் அன்பாக இருப்பார். எந்த ஒரு இலாபமும் இல்லை. உங்களுக்கு உடன் பிறந்தவர்களினால். அனுஷம் நட்சத்திர பெண்கள் மனசோர்வு ஏற்படும். கேட்டை, செலவுகள் அதிகம் விசாகம் கணவரால் மருத்துவ செலவு உண்டு.

வியாபாரம் - தொழில் சிறப்படையும். எந்த ஒரு முக்கிய ஒப்பந்தங்களை இந்தவாரம் முடிவெடுக்க வேண்டாம். கூட்டு தொழில் இலாபம் தரும். கடன் உதவி பெறுவீர்கள். எதிர்பார்த்த படி கிடைக்கும். பங்குவர்த்தகம் நன்றாக இருக்கும்.

உத்தியோகம் - பிறருக்கு உதவி செய்வீர்கள். பாராட்டையும் பெறுவீர்கள். யாருக்கும் பயப்படமாட்டீர்கள். மேல் அதிகாரி உங்களுக்கு ஆதரவு கொடுப்பார். அரசு பணியில் உள்ளவர்களுக்கு இலாகா மாற்றம் ஏற்படும்.

பரிகாரம் - அனுஷம், விசாகம் இவர்கள் திங்கள் அன்று சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்யவும். கேட்டை இவர்கள் வெள்ளியன்று அம்மனுக்கு அபிஷேகம் செய்யவும்.

 

தனுசு

இவர்களுக்கு இந்த வாரம் விருந்தினர்களின் வருகை. வாரம் முழுவதுமே வேலை இருக்கும். எந்த விதமான மனசோர்வும் ஏற்படாது. நண்பர்கள் உதவுவார்கள் பொதுவாக இந்த வாரம் சிலர் வெளியூர் பிரயாணம் மேற்கொள்வார்கள். தெய்வீக பணியில் சிலர் ஈடுபடுவார்கள்.

பெண்கள் - குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். கணவர் உறுதுணையாக இருப்பார். வீட்டில் பெரியவர்களுக்கு மருத்துவ செலவு ஏற்படலாம். குழந்தைகள் ஆதரவாக இருப்பார்கள். வேலைக்கு போகும் பெண்கள் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள்.

வியாபாரம் - கூட்டுத் தொழில் விருத்தியாகும். சக ஊழியர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வெளியூர் மற்றும் வெளிநாடு பிரயாணங்கள் சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். அரசு உதவி கிடைக்கும். எண்ணங்கள் நிறைவேறும்.

உத்தியோகம் - வேலைப்பளு அதிகம் இருக்கும். எந்த வித மனசோர்வும் ஏற்படாது. வாக்கு வாதங்களை தவிர்க்கவும் வேலையில் மாற்றம் ஏற்படும். சிலருக்கு வெளியூர்மாற்றம், உண்டு. பணப்புழக்கம் அதிகரிக்கும்.

பரிகாரம் - விநாயகரை வழிபடுங்கள். செவ்வாய் அன்று விநாயகருக்கு அருகம்புல் அர்ச்சினை செய்யவும். குரு பகவானுக்கு வியாழனன்று அர்ச்சனை செய்யவும். கறுப்பு கொண்டை கடலை தானம் செய்யவும்.

 

மகரம்

இந்த இராசி நேயர்களுக்கு வாரத்தின் ஆரம்பத்தில் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. கணவன் மனைவி உறவு சீராக இருக்கும். பணப்புழக்கம் திருப்தி தரும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். மருத்துவ செலவு குறையும்.

பெண்கள் - பிறந்த வீட்டால் பலன் உண்டு. எந்த ஒரு விஷயத்திலும் அவசர முடிவு எடுக்காதீர்கள். நண்பர்களிடம் வாக்கு வாதம் வேண்டாம். அவிட்டம் நட்சத்திர பெண்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருவோணம் - இவர்களுக்கு பிறந்த வீட்டால் நன்மை ஏற்படும். உத்ராடம் இவர்களுக்கு சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.

வியாபாரம் - கூட்டுத் தொழிலில் இலாபம் உண்டு. புதிய கடன் முயற்சி இப்போது வேண்டாம். விரிவாக்கம், ஒப்பந்தங்கள் வாரத்தின் இறுதியில் பயன் தரும்.

உத்தியோகம் - வெளியூர் பிரயாணம் நன்றாக இருக்கும்.

அரசு ஊழியர்களுக்கு வெகுமானம் உண்டு. வேலை மாற்றம் இப்போது வேண்டும். இடமாற்றம் முயற்சி செய்தால் திருப்தி அளிக்கும்.

பரிகாரம் - திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு துளசி அர்ச்சனை செய்யவும்.

 

கும்பம்

இந்த ராசிகாரர்கள் பொதுவாக உடல் நலம் சற்று பாதிக்கலாம். உறவினர்கள் வருகை மற்றும் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். எந்த புது நட்பையும் நம்ப வேண்டாம். சிலருக்கு திருமணம் கைகூடும்.

பெண்கள் - கணவன், மனைவி உறவு சிறப்படையும் வீடு, நிலம் வாங்குவீர்கள். சொத்து சம்மந்தமான வழக்குகளில் வெற்றி பெற வாய்ப்புண்டு. குழந்தைகள் சிறப்படைவார்கள். எதிலும் நிதானித்து யோசித்து முடிவெடுங்கள். சில சூழ்நிலைகள் கட்டாயத்தினால் உருவாகும்.

உத்தியோகம் - வேலை சுமை குறையும். நண்பர்கள் உதவுவார்கள். கடன் தொல்லை தீரும். புதிய வேலைமாற்றம் இப்போது இல்லை. அரசு வேலையில் உள்ளவர்களுக்கு சம்பள உயர்வு உண்டு. தனியார் வேலையில் உள்ளவர்களுக்கு வேலை மாற்றம் இருக்கலாம். ஆனால் அது உங்களுக்கு விருப்பத்திற்கு மாறாக இருக்கலாம்.

வியாபாரம் - கொடுக்கல் வாங்கலில் நன்மை உண்டு. கூட்டுத் தொழிலில் வெற்றி உண்டு. அரசு உதவி கிடைக்கும்.

பரிகாரம் - வியாழனன்று முருகனுக்கும் குரு பகவானுக்கும் பரிகாரம் செய்யவும்.

 

மீனம்

இந்த இராசியில் உள்ளவர்களுக்கு வாரத்துவக்கம் அமோகமாக இருக்கும். எந்த குழப்பமும் இல்லை. சிலர் திடீரென்று வெளியூர் பிரயாணம் செய்வீர்கள். பெரியவர்களின் உடல் நலம் தேறும். குழந்தைகள் படிப்பிற்காக வெளியூர் செல்லலாம். திருமணம், குழந்தை பாக்கியம் ஒரு சிலருக்கு ஏற்படும்.

பெண்கள் - சொத்து விஷயங்கள் சுமுகமாகும். உடல் நலன் நன்றாக இருக்கும். யாருக்கும் வீட்டில் மனக்கஷ்டம் இராது. கூடப் பிறந்தவர்கள் முழு ஒத்துழைப்பு உண்டு. தெய்வீகப் பணி மனதிற்கு திருப்தி தரும்.

உத்தியோகம் - வேலை அதிகம் இருக்கும். பணிமாற்றம் எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் வரலாம். கடன் உதவி கிடைக்கும். பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

வியாபாரம் - கூட்டுத் தொழிலில் விரிவாக்கம் வேண்டாம். கொடுக்கல் வாங்கல் இப்போது வேண்டாம். தொழில் நன்றாக இருக்கும். அரசு உதவி சற்று தள்ளிபோகும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். முக்கிய முடிவுகளை தவிர்க்கவும்.

பரிகாரம் - புதன்கிழமை சுக்கிரனை வழிபடவும். பணக்கஷ்டம் தீரும்.

 

மெகா TV யில்

மெகா தொலைக்காட்சியின் பெண்கள்.காம் நிகழ்ச்சியில் சோதிடமாமணி பாரதி சிறிதர் வழங்கும் சோதிட விளக்கங்களை தினமும் முற்பகல் 11.30 இற்கும் பிற்பகல் 2.30 இற்கும் காணலாம்.

உங்கள் கேள்விகளைக் கீழ்வரும்
முகவரிக்கு அனுப்பி வையுங்கள்

ஜோதிட பலன்
தினகரன் வாரமஞ்சரி
லேக் ஹவுஸ், கொழும்பு - 10.
இந்தியாவில் – 0091-9176333555
மின்னஞ்சல் – [email protected]

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.