புத். 68 இல. 06

மன்மத வருடம் தை மாதம் 24ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ரபீஉல் ஆகிர் பிறை 27

SUNDAY FEBRUARY 07, 2016

 

 

மாறி வரும் வரிசை வீட்டு வாழ்ககை முறை, அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

மாறி வரும் வரிசை வீட்டு வாழ்கக முறை, அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

'லயின்' குடியிருப்பு ஓர் அவமானச் சின்னமா, அடையாளமா?

நீண்ட தூர பஸ் பயணத்தின்போது அருகில் இருந்தவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.

"என்ன செய்கிறீர்கள்"

சொன்னார். எல்லாவற்றையும் சொன்னார்.

"எங்கே இருக்கிறீர்கள்" எனக் கேட்டேன்.

சொன்னார். இடத்தைச் சரியாகத் தெரிந்துகொள்வதற்காக, அவர் கூறியதைப்போன்று அந்த நகரில் விகாரைக்கு முன்பாக உள்ள வரிசை வீட்டுத் தொகுதியைக் குறிப்பிட்டு, அதுவா என்றேன்.

"ச்சைய்...! நாங்கள் வரிசை வீடுகளில் வசிப்பவர்கள் அல்லர்" என்று மறுத்தது மாத்திரமன்றி இன்னும் விளக்கமாக அவரின் வசிப்பிடத்தை விளக்கினார். இத்தனைக்கும் நான் சொன்ன வரிசை வீட்டுக் குடியிருப்புப் பகுதியானது எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிடக்கூடிய ஒன்றன்று.

பெரும்பாலான நகரங்களில் நகர சுத்தி தொழிலாளர்களுக்காகவும் பொதுப் பணித்துறை தொழிலாளர்களுக்காகவுமென இவ்வாறான வரிசை வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் பொதுப்பணியாளர்களின் வீடுகள் இருந்த சுவடு தெரியாமல், நாகரிகத்திற்கு ஏற்ப மாற்றமடைந்துள்ளன. வாழ்க்கை நிலையும் மாறியிருக்கிறது. அதனைவிடவும் மேலான மட்டத்தில் இருக்கும் நகர வரிசை வீட்டையே நான் குறிப்பிட்டேன். அதற்கே அந்த நபர், வரிசை வீடுகளில் வசிப்பவர்கள் நாமல்லர் என்கிறார்.

அதேநேரம், நகர சுத்தி தொழிலாளர்களின் வரிசை வீடுகள் பல இடங்களில் எந்தவிதமான மாற்றமும் இன்றி, மேலும் பழைய நிலைக்குச் சென்று கொண்டிருப்பது வேறு கதை!

அஃது அப்படியிருக்க, இன்னொரு நண்பர் கொழும்பில் உள்ள வரிசை வீடுகளின் வாழ்க்கை முறையைப்பற்றிச் சொன்னார். சிலர் சொல்வார்களாம், "எங்கள் மச்சான் கொழும்பில் இருக்கிறார்.. அக்காள் கொழும்பில் இருக்கிறார்" என்று. ஆனால், போய்ப்பார்த்தால்தான் தெரியும் மச்சானின் வண்டவாளம்! என்கிறார் அவர். அஃதாவது மச்சான் கொழும்பில் இருக்கிறார் என்று பீற்றிக்ெகாள்ளும் அளவிற்குக் கொழும்பின் வாழ்க்ைக முறை நாகரிகமானதாக இல்லை என்பது அந்த அன்பரின் கருத்து. ஏன் என்று கேட்டேன்.

"பிரதர், கொழும்பு வாழ்க்ைக எல்லோருக்கும் இனிக்குதா என்றால், இல்லை. ஒறுகொடவத்தை, தமிழ்நாடு, சங்கமித்தை மாவத்தை, ஜிந்துப்பிட்டி, ஜெம்பட்டா வீதி, கிராண்ட்பாஸ், பேலியாகொடை இப்படிப் பல இடங்களில் எந்தவித அடிப்படை வசதியும் இன்றி சமாளித்துக்ெகாண்டு வாழத்தான் செய்கிறார்கள். அதிலும் அநேகமானவர்கள் மலையகப் பகுதி தோட்டங்களில் இருந்து இடம்பெயர்ந்து அல்லது தொழில் நிமித்தம் வாழ்பவர்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். சிலருக்கு அந்த வாழ்க்ைக பழகிப்போய்விடுவதால், அதிலிருந்து மீள முடியாமல் பற்றிக்ெகாள்கிறார்கள். பொதுவான வரிசைக் கழிப்பறை, பொதுக்குளியல் அறை. முன்வாசலுக்கு முன்பாக இன்னொரு வாசல், பெண் பிள்ளைகளுடன் இப்படி நெருக்கமாக வாழ்வதென்பது மிக மிக கஷ்டமானது. எவ்வளவோ பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துக்ெகாண்டு வாழ்ந்துகொண்டுதானே இருக்கிறார்கள்" என்றவரிடம்," அதற்காகத்தானே. சேரிப்புறங்களை மாற்றியமைத்து அவர்களுக்குச் சகல வசதிகளுடனான வீடுகளை நிர்மாணித்துக்ெகாடுப்பதற்கு அரசாங்கங்கள் காலத்திற்குக் காலம் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. இப்போதும்கூட பதினைந்தாண்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறதே!" என்றேன்.

"அது சரி பிரதர், நான் சொல்ல வருவது அதுவல்ல.. வரிசை வீடு என்பது ஒன்றும் மரியாதைக் குறைவான வாழ்க்ைக முறையன்று. அவற்றிலும் இலட்சக்கணக்கான மக்கள் வாழத்தான் செய்கிறார்கள். மனங்கொண்டதுதான் மாளிகை" என்கிறார் அவர்.

இந்த இடத்தில் பாராளுமன்ற உறுப்பினர் திலக்ராஜ் தெரிவித்த ஒரு கூற்று நினைவிற்கு வருகிறது. அதாவது, மலையக மக்களின் ஓர் அவமானச் சின்னமாக விளங்கும் லயத்தை மாற்றியமைப்போம்!" என்பதுதான் அது. மலையகத்து வரிசை வீடுகளை (லயமாகிப்போன லயின்) கொழும்பில் அன்பர் சொன்ன வீடுகளுடன் ஒப்பிடுகையில், பெருந்தோட்டத்து மக்களுக்கு மாளிகைதான் அந்த வரிசை வீடுகள் என்று எண்ணத்தோன்றுகிறது. ஆனால், திலக்ராஜ் அதனை ஓர் அவமானச் சின்னம் என்கிறார், ஏனென்று தெரியவில்லை!

எப்படியோ.. இந்த அவமானச் சின்னத்தை மாற்றியமைப்பதற்கான வரலாற்று நடவடிக்ைகயை மலையக மக்கள் முன்னணியும் தொழிலாளர் தேசிய சங்கமும் ஆரம்பித்துள்ளன. அக்கரபத்தனையில் வரிசை வீட்டுத் திட்டத்தை ஒழிக்கும் வரலாற்று முயற்சிக்கு அடிக்கல் நாட்டி வைத்தபோது இன்னொரு முக்கிய தகவலொன்றை அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்திருக்கிறார். மலையகத்தில் இந்தியா அமைத்துக்ெகாடுக்கவிருக்கும் நான்காயிரம் வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம், எதிர்வரும் மார்ச் மாதம் பூண்டுலோயா டன்சினன் தோட்டத்தில் நடைபெறவிருக்கின்றது, என்பது தோட்டப்புற வாழ் மக்களுக்கு நிம்மதியளிக்கும் தகவல்.

எழுபத்தைந்து வருடகால வரலாற்றில் தோட்டப்புற மக்களுக்குக் கிடைக்காத உரிமைகளைப் பெற்றுக்ெகாடுக்க மலையக மக்கள் முன்னணியுடன் இணைந்து பணியாற்றும்போது சிலர் அந்த முயற்சிகளைச் சீர்குலைக்கப்பார்க்கிறார்கள்! என்றும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

இது கவனிக்கத்தக்க ஒரு விடயம். மலையகத் தோட்டப்புற தொழிற்சங்க அரசியலில் பல சங்கங்கள் இணைந்து செயலாற்றியிருப்பின் தொழிலாள மக்களின் வாழ்வாதாரத்தில் எத்தனையோ பல மாற்றங்களைக் கொண்டு வந்திருக்க முடியும் என்பதுதான் பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது.

ஆரம்ப காலத்தில், தொழிலாளர்களுக்குத் தனி வீட்டைக் கட்டிக்ெகாடுத்தால் அவர்கள் விரும்பமாட்டார்கள், ஏன் லயத்து வீட்டை விட்டுவிட்டுத் தனிவீடுகளுக்குச் செல்ல மாட்டார்கள் என்றும், அப்படியே தனி வீடுகளைக் கட்டிக் ெகாடுத்தாலும் அவற்றை வெளியாருக்கு விற்றுவிடுவார்கள் என்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒரு கருத்தினைக் கொண்டிருந்தது. இந்தக் கருத்தை திரு. முத்து சிவலிங்கம் வலுவாகக் கொண்டிருந்தார். அதன் காரணமாகவே, அப்புத்தளை, வனராஜா போன்ற தோட்டப் பகுதிகளில் மாடி வீட்டுத் தொகுதிகளைக் கட்டிக்கொடுத்தார்கள் என்றும் கூறப்பட்டது.

தனி வீட்டைக் கட்டிக்ெகாடுத்தால், லயத்தை விட்டுவிட்டுச் செல்ல மாட்டார்கள் என்பதற்குச் சான்று பகருமாப்போல், 2003ஆம் ஆண்டு வவுனியா பகுதியில் நடைபெற்ற மீள் குடியேற்றத்தின்போது ஏற்பட்ட ஓர் அனுபவமும் நினைவுக்கு வருகிறது. அதாவது, பூந்தோட்டம் உள்ளிட்ட அகதி முகாம்களில் தங்கியிருந்த மக்களுக்கு சுந்தரபுரம், கிடாச்சூரி முதலான பகுதிகளில் சிறிய வீட்டுடன் அரை ஏக்கர் காணியும் பசுக்கன்றும் வழங்கி அவர்கள் மீள் குடியமர்த்தப்பட்டார்கள்.

அப்போது ஒரு சில முகாம்களில் தங்கியிருந்த மக்கள், தமது அகதி வாழ்க்ைகயில் இருந்து விடுபடுவதற்குத் தயக்கம் காட்டியதை நேரடியாகக் காண முடிந்தது. அத்தனைபேரும் மலையகப் பகுதிகளில் இருந்து சென்று வவுனியா பகுதியில் குடியேறி, போர்ச் சூழலால் இடம்பெயர்ந்தவர்கள். ஏனைய பகுதிகளில் இருந்து சென்றவர்கள் அனைவரும் மீள் கு-டியேறிச் சென்று விட்டார்கள். ஆனால், சில குடும்பங்கள் மட்டும் விடாப்பிடியாகத் தமக்குக் காடுகளுக்குச் சென்று குடியேற முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அவர்களை நேரடியாகச் சந்தித்துப் பேசியபோதும், முகாம் குறுகியதுதான், நரக வாழ்க்ைகதான் என்றாலும் தனி வீட்டுக்குச் செல்ல முடியாது என்று அடியோடு மறுத்துவிட்டார்கள். பின்னர் நீண்டநாள் இழுபறிக்குப் பின்னர் மீளக் குடியமர்ந்தார்கள்.

கூடி வாழ்ந்து பிரச்சினைகளுக்குள் உழல்வது என்பது பெருந்தோட்ட வாழ்வுச் சூழலுக்குள் பழகிப்போன ஒன்றாகிவிட்டது. இவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்று அன்று ஒரு சகபாடி எனக்குச் சொன்னதும் ஞாபத்திற்கு வருகிறது. ஆக, பெருந்தோட்டச் சமூகக் கட்டமைப்பில் இருந்து அவர்களை மீட்பதென்பது கல்லில் நார் உரிப்பதற்கொப்பானது என்பது சில தொழிற்சங்கத் தலைவர்களின் கருத்தாக இன்னும் இருந்து வருகிறது.

இந்த நிலை தற்போது மாற்றம்பெற்று வரும் வேளையில், பெருந்தோட்ட அரசியலில் உள்ள சகல அமைப்புகளும் ஒன்றிணைந்து செயற்படுவதையே பலரும் எதிர்பார்க்கிறார்கள். அது மலையக மக்கள் முன்னணியாக இருந்தால் என்ன, இலங்கை தொழிலாளர் காங்கிரஸாக இருந்தால் என்ன, தொழிலாளர் தேசிய சங்கமாக இருந்தால் என்ன மக்களின் வாழ்வாதாரம் மேம்பாடடைந்து அவர்களின் வாழ்க்கை முறையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியுமென்றால் அது வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் என்பது திண்ணம். இதற்கு இலங்கை அரசியல் வரலாற்றில் எதிரும் புதிருமாக விளங்கிய இரண்டு பெரிய கட்சிகள் நாட்டின் நலன் கருதி ஒன்று சேர்ந்து நல்லாட்சியை ஏற்படுத்திக்ெகாண்டிருப்பதைப்போன்று, மக்களின் நலன் கருதி மலையக அமைப்புகள் வேறுபாடுகளைப் புறந்தள்ளிவிட்டு, ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்பதே மலையக சமூக நலனில் அக்கறைகொண்ட அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்!

இளையகனி

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.