புத். 67 இல. 52

மன்மத வருடம் மார்கழி மாதம் 12ம் நாள் ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1437 ர.அவ்வல் பிறை 15

sunday december 27, 2015

 

 
முதலமைச்சர் விக்னேஸ்வரனின் பிரச்சினையை கூட்டமைப்பு எப்படித் தீர்க்கப் போகிறது?

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் பிரச்சினையை

கூட்டமைப்பு எப்படித் தீர்க்கப் போகிறது?

கூட்டமைப்புக்குள் நெருக்கடி

ரி.என்.ஏ மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியினால் முன்மொழியப்பட்ட மூன்று கட்ட அரசியல் மூலோபாயம்

எதிர்க்கட்சித் தலைவரும் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன், இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளரும் கிழக்கு மாகாணசபை அமைச்சருமான துரைராஜசிங்கம் ஆகிய மூன்று அங்கத்தவர்களைக் கொண்ட தூதுக்குழு முதலமைச்சர் விக்னேஸ்வரனை விரைவில் சந்தித்து அவருடனான வேற்றுமைகளைக் களைவதற்கு திட்டமிட்டுள்ளது.

கருதப்பட்டுள்ள கூட்டம் திட்டமிட்டுள்ள மூன்று கட்ட அரசியல் மூலோபாயத்தின் முதல்படியாகும். இந்தக் கலந்துரையாடல்களின்போது விக்னேஸ்வரன் தனது தவறுகளை உணர்ந்து மனந்திரும்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அது நடந்தால் விக்னேஸ்வரன் மென்மையான அறிவுரைகளுடன் விடப்படுவார். ரி.என்.ஏக்குள் எந்த வேறுபாடுகளும் இல்லை என்றும் கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்த முயன்ற குற்றச்சாட்டு ஊடகங்கள் மற்றும் தமிழ் எதிர்ப்பு துரோகிகள் மேற்கொண்ட பங்களிப்பு எனக்கூறும் அறிக்கை ஒன்று வெளியிடப்படும்.

இந்தக் கலந்துரையாடல்கள் பலனளிக்காது போனால் அல்லது அதைத் தொடர்ந்து விக்னேஸ்வரன் தனது நன்னடத்தை உறுதிமொழியை மீறி நடக்கமுற்பட்டால் மூலோபாயத்தின் இரண்டாவது கட்டம் நடைபெறத் தொடங்கிவிடும். வட மாகாண சபை நிருவாகத்தை மீள்கட்டமைப்பு செய்வது மற்றும் மீள் உற்சாகமூட்டும் திட்டங்கள் வரையப்படும். முதலமைச்சர் தனது பதவியை தானாகவே முன்வந்து இராஜினாமா செய்யும்படி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உயர்மட்டத்தினால் கோரப்படுவார்.

விக்னேஸ்வரன் முதலமைச்சராக இரண்டு வருடங்கள் மட்டுமே சேவையாற்ற சம்மதித்ததாகவும் மற்றும் அதனால் அவர் தனது பதவியை விட்டு இப்போது வெளியேறுகிறார் என்று சொல்லப்படும். முன்னாள் நீதியரசர் தனது கௌரவத்தை இழந்துவிடாதபடி விக்னேஸ்வரனுக்கு சிறப்பான ஒரு பிரியாவிடை வழங்கப்பட்டு இனிமையாக ஓய்வுபெற அனுமதிக்கப்படுவார்.

இந்த கௌரவமான கைகுலுக்கல் விருப்பத்துக்கு இசைவு தெரிவிக்காவிட்டால் மூலோபாயத்தின் மூன்றாவது கட்டத் தெரிவு நடைமுறைக்கு வரும். அவரை, அவரது பதவியில் இருந்து அகற்றுவதற்கான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தனது பதவியை இராஜினாமா செய்யும்படி கோரப்பட்டு முதலமைச்சருக்கு எதிராக மாகாணசபை உறுப்பினர்களால் ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்படும். ஆளுனர் பளிகக்காரவுக்கு முதலமைச்சரை நீக்குவதைப் பற்றிய பரிந்துரை ஒன்றை ஜனாதிபதி சிறிசேனவிடம் சமர்ப்பிக்கும்படியான ஒரு தீர்மானமும் கொணடுவரப்படும். அதே சமயம் இலங்கைத் தமிழரசுக் கட்சி விக்னேஸ்வரனுக்கு எதிரான ஒரு ஒழுக்காற்று விசாரணையை நடத்தி அவருக்கு எதிரான கண்டனங்களை நிறைவேற்றும்.

முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் எப்போதும் தனது பதவி நீக்கத்தை எதிர்த்து இலங்கைத் தமிழரசுக் கட்சி உயர்மட்ட வரிசைக்கு எதிராக நீதிமன்றங்களை நாட முடியும் என்றாலும் விக்னேஸ்வரன் இத்தகைய கண்ணியக் குறைவான நடவடிக்கைகள் மற்றும் நீண்ட சட்டவாதங்களில் இறங்கமாட்டார் என்று கருதப்படுகிறது. இப்போது விக்னேஸ்வரன் தனது வழியில் உள்ள தவறுகளை உணருவதற்கான போதிய ஞானம் பெற்று தவறுகளை திருத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என்றும் அது பரஸ்பரம் கட்சிக்கும் அதேபோல அவருக்கும் பயனளிக்கும் என கட்சி உயர்மட்டம் நம்பிக்கை கொண்டுள்ளது. எனினும் சில விடயங்கள் நிச்சயமில்லை.

தமிழர் விடுதலைக் கூட்டணி

ஆதரவின் கீழ் புதிய அரசியல் கட்டமைப்பு

முதலமைச்சர் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமை என்பனவற்றுக்கு இடையிலான ஒரு சந்திப்புக்கான நிகழ்ச்சித் திட்டம் இருந்த போதும் இதுவரை நீண்ட காலமாக திட்டமிட்ட அந்த சந்திப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதற்கான ஒரு காரணம் விக்னேஸ்வரன் திட்டமிட்டதாகச் சந்தேகிக்கப்படும் இரகசிய நிகழ்ச்சிநிரல், இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைமையின் மத்தியில் ஏற்படுத்திய அதிர்ச்சியே ஆகும். நிலமையை மேலும் அதிகரிக்கும் வண்ணம் வெளிநாடுகளிலும் மற்றும் இலங்கையிலுமுள்ள தமிழ் ஊடகங்களின் ஒரு பகுதி விக்னேஸ்வரனின் தோற்றத்தை உள்ளதை விட பலமடங்கு ஊதிப் பெருப்பித்து காட்டி வருகின்றன.

இலங்கை தமிழரசுக் கட்சி விக்னேஸ்வரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முயற்சிக்குமானால், முதலமைச்சர் ரி.என்.ஏயை உடைத்துக்கொண்டு வெளியேறி தமிழர் விடுதலைக் கூட்டணியின் (ரியுஎல்எப்) ஆதரவுடன்; அவர்களது கட்சிச் சின்னமான சூரியனின் கீழ் புதியதொரு தமிழ் அரசியல் கட்டமைப்பை உருவாக்குவார் எனச் சந்தேகிக்கப்படுகிறது. ரியுஎல்எப் தலைவர் வீரசிங்கம் ஆனந்தசங்கரி தனது கட்சியையும் மற்றும் சின்னத்தையும் விக்னேஸ்வரனை பொறுப்பேற்றுக் கொள்ளும்படி பகிரங்க அழைப்பு விடுத்திருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் விக்னேஸ்வரனை பின்துணைப்பதாக ஊடகங்களின் ஊடாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இது பாராளுமன்றத் தேர்தல்களின்போது தமிழ் ஊடகங்கள் செய்ததுக்குச் சமமானது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி பறித்த பள்ளத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வீழ்ந்து நொறுங்கியுள்ளது என்பது போன்ற ஒரு பிரமையை ஊடகங்கள் தோற்றவித்திருந்தன.

விக்னேஸ்வரனின் மறைமுக ஆதரவுடன் போட்டியிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் தீர்க்கமான படு தோல்வியைச் சந்தித்தது.

அதற்கு மேலும் ஒரு பிளவு ஏற்பட்டால் ரி.என்.ஏயிலுள்ள பல அங்கத்தவர்கள் விக்னேஸ்வரனின் பக்கம் செல்வார்கள் என்று எண்ணி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமை எச்சரிக்கை அடைந்துள்ளது. விக்னேஸ்வரன் சார்பான திட்டங்கள் ஒருபுறம் இருந்த போதிலும் ஊடகங்களின் ஒரு பகுதியினர் மட்டுமே கட்சியில் தவிர்க்க முடியாதபடி ஒரு பிளவு ஏற்படுமானால் சில ரி.என்.ஏ அங்கத்தவர்கள் முன்னாள் நீதியரசரின் பின்னால் செல்வதை தெரிவு செய்வார்கள் என சித்தரிப்பதாக பலரும் உணர்கிறார்கள்.

(தொடரும்)

முதலமைச்சர்...

பெருப்பிக்கப்பட்டிருக்கும் ஊடக மாயை இருந்தபோதிலும் பெரும்பான்மையான தமிழ் மக்கள் விக்னேஸ்வரனின் தீவிரவாத கொள்கைகளின் பின்னே தங்கள் பங்கைச் செலுத்த மாட்டார்கள் என்றும் பரவலாக நம்பப் படுகிறது. ஓகஸ்ட் 17 ந்திகதிய பாராளுமன்றத் தேர்தலில் விக்னேஸ்வரன் இரகசியமாக ஆதரவளித்தபோதும் தீவிரவாத கொள்கையுடைய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பெரும் தோல்வியை சந்தித்தது இந்த எண்ணத்துக்கு அதிக நம்பிக்கையை அளிக்கிறது.

கட்சியும் மற்றும் மக்களும் விக்னேஸ்வரன் வேண்டும் என்று விரும்பினால் நான் பதவி விலகத் தயார் என்று ரி.என்.ஏ தலைவர் சம்பந்தனின் மட்டக்களப்பு அறிவிப்பும் இந்த நம்பிக்கைக்கான தெளிவான சாட்சியாகும்.

எனினும் மூத்த தலைவர்களான சம்பந்தன் மற்றும் சேனாதிராஜா ஆகியோர் ஒப்பீட்டளவில் சட்டி பானைக் கடையில் யானை ஓடியது போல சிந்தனையின்றி செயற்படும் விக்னேஸ்வரனைக் காட்டிலும் அதிகம் பொறுப்பைக் கொண்டிருக்கிறார்கள். விக்னேஸ்வரனுடனான அரசியல் மோதலின் இறுதி விளைவை பற்றி அதிக நம்பிக்கை கொண்டிருந்தாலும் ரி.என்.ஏ மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் இந்தக் கட்டத்தில் அரசியல் பிளவு ஒரு கட்சி என்கிற வகையில் ரி.என்.ஏக்கும் மற்றும் மக்கள் என்கிற வகையில் தமிழுர்களின் நீண்டகால நலன்களுக்கும் குந்தகம் விளைவிக்கும் என்பதை நடைமுறையில் உணர்ந்தவர்களாக உள்ளார்கள்.

இந்த மதிப்பீடு இந்தியாவாலும் பகிரப்பட்டுள்ளது, அதனால்தான் இந்தியத் தூதுவர் வைகே.சின்கா ஒற்றுமையை பற்றி யாழ்ப்பாணத்தில் வைத்து விக்னேஸ்வரனிடம் வலியுறுத்தினார். வரப்போகும் வாரங்கள் மற்றும் மாதங்களில் விக்னேஸ்வரன் மற்றும் ரி.என்.ஏ. இலங்கைத் தமிழரசுக் கட்சி தலைமை இடையே தமிழர் வகையான ஒரு பனிப்போர் இடம்பெறக்கூடிய சாத்தியம் உள்ளது. இந்த அரசியல் போராட்டம்;, வரப்போகும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் உறுதியான மோதல்களாக மாறப்போவதற்கான சாத்தியம் தெளிவாகத் தெரிகிறது.

ரி.என்.ஏ தலைவர் இராஜவரோதயம்

சம்பந்தனால் ஊக்குவிக்கப்பட்டது

இந்த சூழ்நிலையிலுள்ள வஞ்சனை என்னவென்றால் பொதுவாக ஸ்ரீலங்கா தமிழர்கள் முகங்கொடுக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கும் மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கும் பொருத்தமான ஒரு சஞ்சீவியாக இருப்பார் என்று ஒரு காலத்தில் விக்னேஸ்வரனை ஊக்குவித்தவர் ரி.என்.ஏ தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன்தான். ஒரு பெரிய பயன்பாடுள்ள சொத்தாக இருப்பார் என சம்பந்தன் கற்பனை செய்ததுக்கு மாறாக இந்த முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் பெரிய விகிதாசாரத்தில் பெரும் கடன்சுமையை ஏற்படுத்துபவராக மாறிவிட்டார்.

விக்னேஸ்வரனிடம் எதிர்பார்க்கப்பட்டது ஒரு புறம் வட மாகாணசபையை நிருவகிப்பவராகவும் மற்றும் மறுபுறத்தில் சம்பந்தனுக்கு ஒரு திறமையான உதவியாளனாக இருந்து ரி.என்.ஏயினை பலப்படுத்துவார் என்று.

மாறாக நடந்தது என்னவென்றால் விக்னேஸ்வரன் ஒருபுறம் வட மாகாணசபையை கிட்டத்தட்ட நடத்த முடியாதபடி குழப்பமும், பெரும் செலவும் ஏற்படுத்தும் வெள்ளை யானையாக மாற்றியதுடன் மறுபுறம் ரி.என்.ஏயின் ஐக்கியத்துக்கும் மற்றும் சம்பந்தனின் தலைமைக்கும் குழிபறிக்கும் வகையில் அச்சுறுத்தல் உண்டாக்கி; அழிவு ஏற்படுத்தும் ஆயுதமாக தன்னை மாற்றியதும் மட்டுமே.

இந்தப் பரிதாபகரமான நிலமைக்கு பல விளக்கங்களும் மற்றும் நியாயப்படுத்தல்களும் ‘விக்னேஸ்வரனிஸ்தாக்களால்’ காட்சிப் படுத்தப்பட்டு வருகிறது. பேச்சளவில் அழகாக இருந்தாலும் உண்மையில் நேர்மையற்றதான மோதலுக்கும் மற்றும் சமரச அணுகலுக்கும்; இடையேயான இந்த உரசலின் வீச்சத்தில் சமரச ஒருமைப்பாட்டை விரும்பும் ஒரு நபர் என்கிற வகையில்; தமிழ் தேசத்தின் நலன்களைப் பாதிக்கும் விடயத்தில் விக்னேஸ்வரனின் நியாயமற்ற இயலாமை கோட்பாடு தெளிவாகிறது.

எனினும் இந்த விடயத்தில் உள்ள மையக்கருத்து சி.வி விக்னேஸ்வரன் தற்போது உலகளாவிய தமிழ் புலம் பெயர்ந்தவர்களில் உள்ள தீவிரவாத பிரிவினரின் கைப்பாவையாக ஆட்டிவிக்கப் படுகிறார் எனப் பலரும் உணர்கிறார்கள். அந்த பொம்மலாட்ட கயிறுகளை பிடித்திருப்பவர்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் (எல்.ரீ.ரீ.ஈ) சித்தாந்தத்திலும் மற்றும் இலக்குகளிலும் நம்பிக்கை கொண்ட புலம்பெயர் சக்திகள் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

இனப்படுகொலை குற்றத்தை நிரூபித்து வடக்கு மாகாண சபையை சீர்குலைப்பது எல்.ரீ.ரீ.ஈ மற்றும் எல்.ரீ.ரீ.ஈ சார்பு புலம்பெயர் சக்திகளின் இரட்டை இலக்குகளாகும். சமீப காலங்களில் விக்னேஸ்வரன் இனப்படுகொலை என்கிற கூக்குரலை எழுப்பி மாகாணசபைக்கு குழிபறித்து வருகிறார்.

விக்னேஸ்வரன் ஒரு பூனைப் பொம்மையை போல இருந்து வருகிறார் என்கிற இந்த ஊகம் சரியானால், பின்னர் ஏன் மற்றும் எப்படி இந்த திருப்பம் ஏற்பட்டது என்கிற கேள்வி எழுகிறது. யார் அல்லது எது விக்னேஸ்வரனிடம் இந்த மாற்றத்தை கொண்டுவந்தது அல்லது மாற்றியது? எப்படி மற்றும் ஏன் இந்த திடீர் திருப்பம் இடம்பெற்றது? தமிழ் அரசியலில் விக்னேஸ்வரன் நுழைந்தது, மற்றும் 2013 வட மாகாணசபை தேர்தல்களில் அவர் தீயினால் ஞ}னஸ்நானம் பெற்றது பற்றிய ஒரு சுருக்கமான சுற்றுலாதான் இந்த அரசியல் உருமாற்றத்துக்கான அடிக்கல்லை 2013 மாகாண சபை தேர்தல் பிரச்சாரங்களின் போது அவர் நாட்டுவதற்கு அடையாளமாக அமைந்ததாகத் தெரிகிறது. இந்தப் பிரச்சினைகள் மற்றும் அது தொடர்பான மேலதிக விபரங்கள் என்பன எதிர்கால கட்டுரைகளில் ஆராயப்படும். (வளரும்) 

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2015 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.