புத் 66 இல. 40

ஜய வருடம் புரட்டாதி மாதம் 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 துல்ஹஜ் பிறை 09

SUNDAY OCTOBER 05 2014

 

 
எதிரணியின் வெற்றிக் கோ'ம் புஸ்வாணம் ஆகிப்போனது

எதிரணியின் வெற்றிக் கோ'ம் புஸ்வாணம் ஆகிப்போனது

ஊவா முதலமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ

ஊவா மாகாண சபைத் தேர்தலில் உங்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சியினர் சுமத்தியிருந்தபோதும் இரண்டாவது தடவையாகவும் கூடுதலான வாக்குகளைப் பெற்று முதலமைச்சராகி உள்Zர்கள். இந்த வெற்றியை எவ்விதம் நோக்குகின்aர்கள்?

நான் தேர்தல் காலத்தில் ஐ.ம.சு பாரிய வெற்றியீட்டும் என்று கூறி வந்தேன். எனக்கு அது தொடர்பில் கவலையோ, சந்தேகமோ இருக்கவில்லை. தேர்தல் திகதி அறிவிக்கப்படும் வரை தேர்தலில் போட்டியிடுவது குறித்து நாம் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

2009ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் திகதி நான் முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்டேன். அதில் வெற்றியும் பெற்று நான்கு வருடங்கள் 10 மாதமாக அடுத்த தேர்தல் எப்போது வரும் என்று நினைக்காமல் மக்கள் பணியை செய்து வந்தேன். மக்களுக்காக என்னால் செய்யக் கூடிய அனைத்து சேவைகளையும் செய்து வந்தேன். நான் மொனராகலைக்கு மாத்திரம் சேவையாற்றவில்லை. ஊவா மாகாணம் முழுவதற்குமே சேவையாற்றியுள்ளதை மக்கள் நன்கு அறிவார்கள். அதனால் தான் மொனராகலை மக்கள் இம்முறையும் அதிகூடுதலான வாக்குகளினால் என்னை வெற்றி பெற வைத்துள்ளார்கள். மக்கள் சரியான தலைவரை தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

இம்மாகாண மக்கள் எதிர்க்கட்சியினரின் தேர்தல் கால மேடைப்பேச்சுகளுக்கு மயங்காமல் என்னை வெற்றிபெற வைத்துள்ளார்கள். அந்த வெற்றியை மாபெரும் வெற்றியாக மாற்றியமைக்க நான் தொடர்ந்தும் மக்கள் சேவையில் ஈடுபடுவேன்.

ஊவா மாகாணசபைத் தேர்தல் இந்த அரசாங்கத்தின் தோல்வியின் ஆரம்பம் என்று எதிர்க்கட்சியினர் கூறினார்களே?

எதிர்க்கட்சியினர் இவ்விதம் பல தடவைகள் அரசாங்கத்துக்கு எதிராக கூறியிருக்கிறார்கள். என்ன நடந்துள்ளதென்று மக்களுக்கு நன்கு தெரியும். அதைப்பற்றி எதுவும் கூறத் தேவையில்லை அவர்களது வெற்றிக் கோஷங்கள் புஸ்வாணமாகிப் போனது.

எதிர்க்கட்சியினர் கூறும் ‘ஆரம்பம்’ என்று நினைத்து இனிமேலாவது எங்களுடன் கைகோர்த்து உண்மையாக செயற்பட முன்வர வேண்டுமென்று கோரிக்கை விடுக்கிறேன்.

தேர்தல் ஒன்று வரும்போது அரசாங்கத்தை தோற்கடிப்பதற்கான காலம் வந்துவிட்டதென்று கூறி தேர்தல் முடிந்தவுடன் நாம் தோற்றுவிட்டோம். அடுத்த தேர்தலில் முயற்சி செய்வோம் என்று கூறி மக்களை அநாதரவாக்கிறார்கள். அது அவர்களின் நடிப்பு என்று மக்களுக்கு நன்கு தெரியும்.

இந்தத் தேர்தலில் அரசாங்கத்தின் வாக்கு வங்கியில் சற்று வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதே

சென்ற தேர்தலோடு ஒப்பிடும் போது நீங்கள் கூறியது உண்மையாக இருக்கலாம். 2009/2010 ஆம் ஆண்டு தேர்தல் மிகவும் சாதாரணமாக நடைபெற்றது. யுத்தம் முடிவடைந்து நாட்டில் சமாதானமான ஒரு காலகட்டத்திலேயே தேர்தல் நடைபெற்றது. அவ்வாறான நிலையிலேயே நாம் தேர்தலில் போட்டியிட்டோம். அன்று எல்.ரி.ரி.சி துவம்சம் செய்யப்பட்ட பிறகு தேர்தல் நடத்தப்பட்டது. எனினும் இம்முறை அவ்வாறான நிலையொன்று இல்லை. அன்று ஆர்வத்துடன் வாக்களிக்க வருகை தந்த பொதுமக்கள் இன்று அவ்விதம் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை. அதற்கு பல காரணங்கள் உண்டு. அன்று வெளிநாட்டில் இருந்து இங்கு வந்து வாக்களித்தார்கள். அவர்கள் வாக்களித்துவிட்டு மீண்டும் வெளிநாடுகளுக்கு சென்று விட்டார்கள். கொழும்பில் தொழில் செய்பவர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்காக மாத்திரம் இங்கு வரமாட்டார்கள். இன்று அவர்களின் மனப்பாங்கு மாற்றமடைந் துள்ளது.

எதிர்க்கட்சியினரின் வெற்றியை தடுப்பதற்காக பொதுமக்களை உளரீதியில் தாக்கியும், தேர்தல் வன்முறைகளை ஏற்படுத்தியும் இத்தேர்தலில் அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளதாக எதிர்க்கட்சியினர் கூறுகிறார்களே?

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் மக்கள் மனதை வென்ற கட்சியாகும். அவ்வாறே, மக்க ளால் தெரிவு செய்யப்பட்ட பிரதான கட்சியாகும். மக்கள் விரும்பியே இந்த அரசாங்கத்தை மீண்டும் தெரிவு செய்துள்ளார்கள். மக்கள் தொடர்ந்தும் இந்த அரசாங்கத்துடன் இருக்கும் போது எதற்காக தேர்தல் காலத்தில் பயப் பட வேண்டும்? எதற்காக வன்முறைகளில் ஈடுபட வேண்டும்? தேர்தலில் வன்முறைகளில் ஈடுபடு வதற்கு தேர்தலில் தோற் கடிக்கப்படுவோம் என்ற பயத்தினால் தான் அவ்விதம் செய்யப்ப டுகிறது.

இவர்கள் தெரிவிப்பதை போன்று மொனராகலையில் அவ்விதமான வன்முறைகள் எதுவும் இடம்பெற வில்லை. தாங்கள் தோல்வி அடைந்துவிடுவோ என்று எண்ணியே அவர்கள் போலியான முறையில் எமக்கு எதிராக குற்றச் சாட்டுகளை சுமத்தினார்கள். நாங்கள் ஜனநாயக முறைப்படியே தேர்தலில் செயற்பட்டோம். இதுவே உண்மை.

வன்முறைகளை ஏற்படுத்தி தேர்தலில் வெற்றி பெறும் நப்பாசை படைத்தவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியினரே, அவர்களுக்கு அதில் நல்ல பரிச்சயம் உண்டு.

அவ்வாறே மக்கள் விடுதலை முன்னணியும் தேர்தல் வன்முறைகளில் ஈடுபடுவதில் சளைத்தவர்கள் அல்லர். வரலாற்றில் வன்முறையைக் கட்டவிழ்த்து தேர்தலில் ஈடுபட்டவர்களே இவர்கள்.

நீங்கள் முதமைச்சராக இருந்த போது மேற்கொண்ட மக்கள் பணிகளை இம்மாகாண மக்கள் மீண்டும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். மக்கள் மனதில் இடம்பிடிப்பதற்கு நீங்கள் செய்த சேவைகள் தொடர்பாக உங்கள் மனதில் தோன்றும் மனப்பாங்கை சற்று விளக்கமுடியுமா?

முதலில் இம்மாவட்டத்தில் நடைமுறைப்ப டுத்தப்பட்ட விசேட வேலைத்திட்டங்களில் தயட்ட கிருள அபிவிருத்தி கண்காட்சியை இம்மாவட்டத்திற்கு கொண்டு வந்துள்ளமையை குறிப்பிட வேண்டும். கொழும்புக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த சுதந்திர தின நிகழ்வுகளை கதிர்காமத்தில் நடத்துவதற்கும், சர்வதேச பெண்கள் தின நிகழ்வுகள் மொனராகலையில் நடைபெறுவதற்கும் தேசிய வெசாக் நிகழ்வுகள் புத்தல பிரதேசத்தில் நடத்துவதற்கும் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தமையாகும்.

இம்மாகாணத்தில் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிகளை முடக்கிவிட்டு ஊவா வெல்லஸ்ஸ விவசாயிகளின் வாழ்க்கையில் வெளிச்சத்தை கொண்டு வந்த பெருமை இந்த அரசாங்கத்துக்கே உரித்தாகும்.

அதற்கு அடுத்த படியாக கல்வியை எடுத்துக் கொண்டால் மாகாணத்தின் கல்வி அமைச்சர் என்ற வகையில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

இம்மாகாண பாடசாலை ஆசிரியர்களின் பற்றாக்குறை நிவர்த்தி செய்யும் பொருட்டு பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.

குறிப்பாக அரச சேவையில் 2010ம் ஆண்டு மாத்திரம் 732 பட்டதாரிகளும் 2011ம் ஆண்டில் 307 பேரும், 2012ம் ஆண்டில் 1046பேரும், 2013ம் ஆண்டில் 866 பேரும் ஆசிரியர்களாக நியமனம் பெற்றார்கள். இதன் மூலம் இம்மாகாணத்தின் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டது. மின்சாரம் வழங்கும் வேலைத் திட்டம் 2009ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் 60 வீதமான நிதி எமது நிதியத்தினூடாக வழங்கப்பட் டுள்ளதுடன் 933 குடும்பங்கள் நன்மையடைந்தன. இவ்வாண்டில் மாத்திரம் 2199 குடும்பங்களுக்காக 42,224,932 ரூபா வரை செலவிடப்பட்டுள்ளது.

முன்னாள் முதமைச்சர் என்ற வகையில் உங்களுடைய சேவையில் திருப்தி அடைகிaர்களா?

இம்மாகாணத்தில் செய்ய வேண்டிய வேலைத் திட்டங்கள் பல இருந்தன. ஏனைய அனைத்து மாகாணங்களுக்குமான நிதியை இம்மாகாணத்திற்கு வழங்கியதாகவும் அதனை நிறைவேற்றும் அளவுக்கு வேலைத்திட்டங்கள் காணப்பட்டன.

கடந்த மாகாண ஆட்சி காலத்தைப் போன்றே இம்முறையும் பல திட்டங்களை செய்வதற்கு தீர்மானித்துள்ளேன். அந்த வேலைத்திட்டங்கள் இன்னும் மூன்று நான்கு பரம்பரைக்கு முன்னர் செய்ய வேண்டிய வேலைத்திட்டங்களாகும்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.