புத் 66 இல. 40

ஜய வருடம் புரட்டாதி மாதம் 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 துல்ஹஜ் பிறை 09

SUNDAY OCTOBER 05 2014

 

 
ஜயலலிதா தோல்வி லலிதா ஆகிறாரா?

ஜயலலிதா தோல்வி லலிதா ஆகிறாரா?

~~அம்மா அம்மா நீ எங்கே அம்மா

உன்னை விட்டால் எனக்கு யாரு

அம்மா

ஐயோ ஏன் இந்த சாபம்

எல்லாம் என்றோ நான் செய்த பாவம்

பகலும் இரவாகி பயமானதே அம்மா

விளக்கின் துணையின்றி இருளானதே

உயிரின் ஒரு பாதி பறி போனதே அம்மா

தனிமை நிலையானதே

அம்மா அம்மா நீ எங்கே அம்மா"

தனுஷ் மட்டும் இப்படி பாடவில்லை. வேலை இல்லாத பட்டதாரிகள் மட்டும் இப்படி புலம்ப வில்லை. பாதி தமிழகம் இப்படிக் கதறுவது உண்மை. இது தமிழர் கலாச்சாரம் என்று சொல் வதை விட இந்திய வழிபாடு என்றும் சொல்லலாம். கடவுளாக வே'ம் போடுபவர்களை கடவுளாகவே நினைப்பதும், தங்களுக்கு பிடித்த நடிகரையோ அர சியல் தலைவரையோ தன் உயிரிலும் மேலாக மதிப் பதும், அவரது குறைகளை நிறைகளாகப் பார்ப்ப தும், அவருக்கு ஒரு தீங்கு நேரிட்டால் தன் உயி ரையே மாய்ப்பதும் இங்குசாதாரண நிகழ்வு. வேறெ ங்கும் காண முடியாது.

எனக்கு ஒரு பழைய சம்பவம் நினைவிற்கு வருகி றது. ஒரு கிராமத்தில் கந்தன் கருணை என்ற திரைப் படம் ஓடிக்கொண்டு இருக்கிறது. முருகக் கடவுள் தோன்றும்போதெல்லாம் ஒரு பாட்டி எழுந்து முருகா முருகா என்று கையெடுத்து கும்பிடுவாராம். பொறுமை இழந்த ஒரு பகுத்தறிவாளர் "பாட்டி அது முருகன் இல்லை சிவகுமார்" என்றாராம். அதற்கு பாட்டி " சிவகுமார் வேறு யாரப்பா முருகன்தானே" என்று சொன்ன பதிலால் பகுத்தறிவாளர்

வாயடைத்து போனாராம் இதில் nஜயலலிதா வள் ளியாக நடித்துள்ளார். இப் பாத்திரம் தான் வாழ்க் கையிலும் அவரை நிரந்தரமாக வள்ளியாகவே ஆக் கியதோ?

20 வயது வேதவல்லி மைசு+ரில் வசிக்கும்போது கணவர் இறந்தார். அப்போது அவருக்கு ஓர் ஆண் ஒரு பெண் என இரு குழந்தைகள் இருந்தன. பெங் களூரில் உள்ள தன் பெற்றோர் வீட்டிற்கு குடி புகு ந்த அவர் தட்டச்சு எழுத்தாளராக பணி புரியலா னார். வாழ்க்கை சிரமமாகவே போயிற்று.

முன்பு விமானப் பணிப்பெண்ணாகப் பறந்த அவரது சகோதரி விந்தியா, அக்காலத்தில் சென்னையில் திரைப் படங்களில் நடித்து வந்தார். வேதவல்லியை யும் சென்னை வரும்படி அழைக்கவே, தன் பெற் றோரிடம் தன் குழந்தைகளை விட்டு விட்டு வேத வல்லி கோடம்பாக்கத்தில் நுழைந்தார். சந்தியா வாக மாறினார்.

சில திரைப்படங்களில் நாயகியாக நடித்தார். தெய்வ பலம் என்ற படத்தில் ஸ்ரீ ராம்மின் நாயகி யாக 'வரவே வராதா' என்று கண்ணீர் மல்க அவர் பாடி நடித்தது அவரது நடிப்பை வெளிக் காட்டியது. மேலும் பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருந்தாலும் பருமனான அவர் தோற்றம் அந்த அளவு திரை உலகில் வெற்றியைத்தரவில்லை. ஆனால் வாழ்கை யில் வறுமை நீங்கியது "பல வகைகளினால்". குழந்தைகள் சென்னையில் வளர்ந்தன.

சென்னை சர்ச் கேட் பாடசாலை என்று அழைக் கப்பட்ட ளுயஉசநன ர்நயசவ ஆயவசiஉ. ர்ச. ளுநஉ. ளுஉhழழட இல் கல்வி கற்ற கோமளவல்லி படிப்பில் அசத்தினார். 10 வது வகுப்பில் மாநிலத்தில் முதலா வதாக வந்து பரிசு பெற்றார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்ன டம், மலையாளம், ஹிந்தி என்று பல மொழி வல்லுனராக இருந்தார். ஓர் வழக்கறி ஞராக வருவதே அவர் கனவு.

கிரிக்கெட் அவருக்கு பிடித்த விளையாட்டு. அப்போதைய இந்திய அணித்தலைவர் பட்டா உடி யின் ரசிகை அவர். 'அவரது ஆட்டத்தை நான் ப்ய் னாகுலரில் பார்த்து ரசிப்பேன்' என்று கூறி உள்ளார்.

தாயாரும் மகளை சினிமா பக்கம் வராதவாறே பார்த்தார். ஆனால் விதி அவர் தலையில் வேறு விதமாக எழுதி இருந்தது. தனக்கு வாய்ப்புகள் குறையவும், வருமானத்திற்காக மகளை திரைக்கு கொண்டுவர வேதவல்லி நினைத்து அழைத்தபோது அம்மு என்ற செல்லப் பெயர் கொண்ட அவர் மறுத்தார் - முரண்டு பிடித்தார்.

"சினிமாவிற்கு நான் வரக் கூடாது என்று சொல்லிய நீ இப்போது அழைப்பது ஏன்? நான் படிக்கவேண்டும். ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் சேரவேண்டும், பின்பு சட்டக் கல்லூரிக்கு போக வேண்டும்" என்று அம்மு உம் அம்மாவும் வாதாடினர் கன்னடத்தில், தமிழில் அல்ல.

மூன்று வயதில் நாட்டியம் பயின்ற அவருக்கு 14 வயதில் நாட்டிய அரங்கேற்றம் நடந்தது. சிறப்பு அழைப்பாளர் நடிகர் திலகம் சிவாஜp கணேசன். தங்க விக்கிரகம் சிம்மாசனத்தில் இருப்பது போல் இருக்கிறது என்று அவரது அழகை சிவாஜp புகழ்ந்து பேசினார்.

வேதவல்லியின் மகள் கோமளவல்லி திரை உலகிற்கு வந்ததும் பெயர் மாற்றம் செய்யப்பட்டார். அவரது முதல் படம் இந்திய தயாரிப்பில் வந்த நுpளைவடந என்ற ஆங்கிலப் படம். முன்னாள் ஜனாதிபதி வீ வீ கிரி அவர்களின் மகன் 'ங்கர் கிரி தயாரித்து 1961ல் அது வெளியானது. அடுத்து 1964ல் கன்னடப் படம் வந்தது.

முதல் தமிழ் படமாக வெண்ணிற ஆடை 1965ல் வந்தது. அடுத்து தெலுங்கு படம். மலையாளத்தில் பிரேம் நசீருடனும, இஸ்ஸத் என்ற ஹிந்தி படத்தில் தர்மேந்திராவின் நாயகியாக 'ம் சுமார் 140 படங்க ளில் அவர் நடித்துள்ளார். இதில் 28 படங்களில் எம்ஜPஆரின் ஜோடியாக நடித்துள்ளார். கடைசியாக நடித்தது 'நதியைத்தேடி'.

எப்போதும் நீரும் நெருப்புமாகவே இருந்த எம்ஜPயா ருடனான அவர் உறவு இக்காலத்தில் முறிந்து போயிருந்தது. அந்த பழைய வரலாறுகள் எல்லாம் இளைய தலைமுறைக்குத் தெரியாது - புரியாது. nஜயாவை ஏணியில் ஏற்றிவிட்ட எம்ஜPயார் இறக்க வும் முயன்றார். எம்ஜPயாரை எதிர்த்து இவர் செயல் பட்டதும் உண்டு.

ஒரு கட்டத்தில் ராமாவரம் தோட்டத்திற்கே இவர் குடி போக ஜhனகி, எம்ஜPயாரின் அண்ணன் சக்கர பாணி வீட்டிற்கு போய்விட்டார். ஜhனகிதான் எம்ஜP யாரின் சட்டபடியான மனைவி என்று இன்றைய அ.தி.மு.க வாக்காளர்களில் எத்தனை பேருக்குத் தெரியும்?

இது பற்றி ஒய்வு பெற்ற காவல் துறை அதிகாரி மோகன்தாஸ் தனது புத்தகத்தில் எழுதியவதாவது ; "எம்ஜPஆருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந் தது. அது ஜhனகிக்குத் தெரியும். அவர் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் ஒரு பெண்ணைப் பற்றி மட்டும் அவர் பயந்தார். அப்பெண் பல குறிக்கோள் கொண்டவர். அவரால் எம்ஜPயாருக்கு தீங்கு வரும் என்று அவர் எண்ணினார்". யார் அப்பெண்?

மன்னாதி மன்னனை வென்ற மருதநாட்டு இள வரசி, அடிமைப் பெண்ணிடம் தோற்றதற்கு காரணம் ஆயிரத்தில் ஒருவன்.1970ல் உலகம் சுற்றும் வாலிப னுக்காக ஜப்பான் போக தயராகிக் கொண்டு இருக்கும்போது nஜயலலிதா பத்திரிகைகளுக்கு தந்த செய்தி தமிழகத்தையே தூக்கி வாரிப் போட்டது. அது என்ன? மூகாம்பிகை கோயிலில் எம்.ஜP.யார் தனக்கு மாலையிட்டு தன்னை மனைவி யாக்கிக் கொண்டார் என்பதுவே அது.

அதிர்ச்சி அடைந்த இராம. வீரப்பன் இதை எம்.ஜP.யாரிடம் சொல்ல அவர் இது பொய் செய்தி என்று கொதிப்படைந்து ஜயலலிதாவை முற்றிலும் ஒதுக்கி வைக்க உத்தரவிட்டார்.

காவல்காரன் படத்தை 1968ம் ஆண்டு கோலாலம்பு+ரில் உள்ள கொலிசியம் திரை அரங்கில் பார்த்தேன். அடிக்கடி ரேடியோ மலேசியா விற்கு நான் போகவேண்டி வரும். அங்கு பொறுப்பான பதவியில் உள்ள தமிழ் இளைஞர் ஒருவர் nஜயாவை அண்ணி என்றே விளிப்பதைப் பார்த்து நான் வியந்தேன்.

அங்கு வசித்தமுஸ்லிம் பெரியவர் ஒருவர், வர்த்தகர், இந்த ஜோடியின் பெரிய ரசிகர். ஒரு முறை அன்னமிட்ட கை படத்திற்கு டிக்கெட் வாங்கி இருக்கிறேன் நீங்கள் கட்டாயம் வரவேண்டுமென அழைக்க நானும் போனேன். அவரும் இவர்களை தம்பதிகளாகவே பார்த்தார். அத்தகைய ஒரு தோற்றத்தை nஜயா அன்று உண்டாக்கி இருந்தார்.

உலகம் சுற்றும் வாலிபன் நாயகிகளாக மஞ்சுளா, லதா, சந்திரகலா ஆகியோர் தெரிவாகினர். nஜயலலிதாவிற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் அவர் விடவில்லை. தனது தாயோடு ஜப்பான் புறப்பட்டார். எப்படியும் எம்.ஜp.யாரை சந்திக்க வேண்டும் என்று முயற்சி செய்தார். வீரப்பன் குழுவினர் அதற்கு சீனப் பெரும் சுவர்போல் தடையாக இருந்தனர்.

அடுத்து ஹாங்காங் வந்தார் nஜயா. அவர் வருமுன்பே எம்.ஜP.யார் தனது நண்பர் கீழக்கரை யாசீன் அவர்களுக்கு போன் செய்து nஜயாவிற்கு வரவேற்ப்பு எதுவும் கொடுக்கக் கூடாது, யாரும் சந்திக்கக்கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். அதுமட்டுமல்ல nஜயாவை அன்று அவர் விமர்சித்த வார்த்தைகளை இங்கு எழுத்தில் எழுத முடியாது.

சில கடை நிலை பணி புரியும் இளவல்கள் அவருக்கு 'சுற்றும் உணவகத்தில்' சுநஎழடஎiபெ சநளவயரசயவெ ஓர் மாலை நேர தேநீருக்கு ஏற்பாடு செய்தனர். பிரமுகர்கள் யாரும் அதில் பங்கேற்க்கவில்லை.

ஹாங்காங் தமிழ் கலாச்சார சங்கத்தின் சார்பில் ஹில்டன் ஹோட்டலில் எம்.ஜP.யார் குழுவினருக்கு பெரிய வரவேற்ப்பு கொடுக்கப்பட்டது. அதில் அவர் திருக்குறளை உவமானம் காட்டிப் பேசினார். அதாவது மெல்லிய மயில் சிறகே ஆனாலும் வண்டியில் அதிகம் பாரம் ஏற்றினால் வண்டியின் அச்சாணி முறிந்து விடும். அதுபோல் அளப்பரிய உங்கள் அன்பின் காரணத்தால் நான் முறிந்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன் என்றார். அத்தோடு படத்தின் சில பாடல்களையும் போட்டுக் காட்டினார்.

ஹாங்காங்கில் இக் குழுவினர் பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தினர். அதற்கான பு+ரண ஒத்துழைப்பையும் பிரபல சீன படத் தயாரிப்பாளரான திரு ரன் ரன் 'hவ் அவர்கள் இலவசமாக செய்து கொடுத்தார். இவர்களின் தலைமையகம் சிங்கப்பு+ரில் உள்ளது. அங்கு அவர்கள் சென்னையில் இருந்து தமிழ் படங்களை இறக்குமதி செய்து மலேசியா சிங்கப்பு+ரில் விநியோகிப்பர்.

இந்த இலவச உதவிக்கு காரணம் கேட்டபோது ரன் ரன் 'hவ் கூறினார்; தமிழ் பட விநியோகம் எங்களுக்கு போதிய இலாபம் தரவில்லை. என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டு இருந்தபோது எம்.ஜP.யார் ஒரு நியாயமான விலைக்கு நாடோடி மன்னனைத் தந்தார். அது சக்கைப்போடு போட்டு எங்கள் நிறுவனத்திற்கே ஒரு உந்து சக்தியைத் தந்தது. அதை மறக்க முடியாது. அடுத்து அடிமைப் பெண்ணையும் தந்தார். இந்த வாலிபனையும் தருவார். எங்களால் எப்படி எம்.ஜp.யாருக்கு உதவாமல் இருக்க முடியும் என்றார் அவர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.