புத் 66 இல. 07

விஜய வருடம் மாசி மாதம் 04ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. ஆகிர் பிறை 15

SUNDAY FEBRUARY 16 2014

 

 
என் வழி தனி வழி

மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதே எனது தேர்தல் பிரசாரத்தின் தாரக மந்திரம்:

என் வழி தனி வழி

குப்பிவிளக்கில் குண்டுச் சத்தங்களுக்கு மத்தியில் வாழ்ந்த எனக்கு மக்களது பிரச்சினைகள் நன்கு தெரியும்

கடந்து வந்த உங்களது அரசியல் பாதை பற்றிக் கூறமுடியுமா?

கடந்த 15 வருட காலமாக அரசியலில் ஈடுபட்டுள்ள அனுபவம் எனக்கு உள்ளது. யாழ்ப்பாணத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு சொற்ப வாக்குகள் போதாமை யால் பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பை இழந்தேன். மக்களுக்கு பிரசாரம் இல்லாது பல சேவைகளைப் புரிந்திருக்கிறேன். இப் போது மேல்மாணத்தில் கொழும்பு மாவட் டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஒரே யொரு தமிழ் வேட்பாளராகப் போட்டியிடு கின்றேன்.

மேல் மாகாணத்தில் போட்டியிடும் எண்ணம் எவ்வாறு உங்களுக்கு ஏற்பட்டது?

உண்மையில் 2009 ஆம் ஆண்டு முதல் ஸ்ரீ. ல. சு. க வில் இணைந்து கொழும்பில் தீவிரமாக அரசியல் பணி செய்து வருகி றேன். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்' அவர் கள் இத்தேர்தலில் போட்டியிடுமாறு என் னைக் கேட்டுக் கொண்டார். அவரது வேண் டுகோளின்பேரில் நான் போட்டியிடுகின் றேன். நான் செய்துவரும் சேவைக்கு இத் தேர்தலில் எனக்குக் கிடைக்கும் வெற்றி ஓர் அங்கீகாரத்துடன் அதிகாரத்தையும் எனக்குக் கிடைக்கச் செய்யும். அதுவே ஜனாதிபதியின் எண்ணமுமாகும்.

கொழும்பு மாவட்டத்தில் பல தமிழ்க் கட்சி களில் பல தமிழ் அரசி யல்வாதிகளும் போட்டியிடுகிறார்கள். இந்நிலையில் தங்க ளது வெற்றியை எவ்வகையில் உறுதி செய் கிறீர்கள்?

உண்மையில் இவ்வாறு போட்டியிடும் பல அரசியல்வாதிகள் மக்களுக்கு ஏதோ சிறு சிறு சேவை செய்பவர்களாகக் காணப்படினும் அவர்களில் எவரும் ஆளுங்கட்சியில் அல் லது அரசாங்கத்துடன் இல்லை. உதாரணத் திற்கு மாகாண சபையில் ஆளுங்கட்சியில் வெற்றிபெற்ற தமிழ் வேட்பாளர் என எவரும் இருந்ததில்லை. அதனால் அரசாங்கம் வழங் கும் பல சலுகைகள், வேலைத்திட்டங்கள் தமிழ் மக்களுக்குக் கிடைப்பதில்லை. இதனை வெற்றி பெறுவதன் மூலம் நான் இல்லாதொழிப்பேன். ஓர் தமிழ்ப் பிரதிநிதி இருந்தால் அவற்றைப் பெற்றுக் கொள்வது சுலபம்தானே.

இத்தகைய எண்ணம் கொண்ட நீங்கள் ஏன் வடமாகாண சபைத் தேர்தலில் போட் டியிடவில்லை?

அங்கு வாழ்ந்துவரும் மக்கள் அனைவருமே தமிழர்கள். அதனால் அங்கு போட் டியிட்ட அனைவருமே தமிழ்ப் பிரதிநிதிகள். அதன் காரணமாக அங்கு சேவைகள் ஏதோவொரு வகையில் மக்களைச் சென்றடையும். ஆனால் கொழும்பில் அப்படியல்ல. தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப் படுவோர் எதிரணியில் உள்ளவர்களாகவே இருக்கின்றனர். இதனால் இங்கு அரசாங் கத்தின் சேவையைப் பெறுவதில் சிக்கல்கள் உள்ளது. அதனை நிவர்த்திக்கவே நான் இங்கு போட்டியிடுகின்றேன்.

யாழ்ப்பாணத்தில் பின் தங்கிய பிரதே சத்திலிருந்து கொழும்பில் போட்டியிட வந் துள்ளீர்கள். உங்களுக்கு உங்கள் ஊர் மக் களின் ஆதரவு மட்டும் போதுமானதாக இருக்குமா?

இல்லை, பின்தங்கிய பிரதேசத்திலிருந்து வரவில்லை. நான் யாழ்ப்பாணம் கொக்கு விலைப் பிறப்பிடமாகக் கொண்டவன். எமது ஊர் கல்வியால், செல்வத்தால், வர்த்தகத் துறையால், ஆன்மீகத்தால், சமூக சேவை யால் செழிப்பானது. எனது தந்தை ஓர் கல் லூரி அதிபர். யுத்தச் சூழலால் சற்றுப் பின் னடைவைக் கண்டபோதும் இன்றைய ஆட்சி யில் முழு வடமாகாணமுமே செழிப்பாகி வரு கிறது. நான் கொழும்பு மாவட்டத்தில் எனது ஊர் மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்தத் தமிழ் மக்களுக்கும் சேவை செய்து வருகின் றேன். அதனால் என்னை இன்னாரென ஒரு வட்டத்திற்குள் மட்டுப் படுத்திக் கொள் வதை நான் விரும்ப வில்லை. நான் மக் கள் சேவகன். மக் கள் சேவையே மகே சன் சேவை என எண்ணிச் செயற்படு பவன். யுத்தம் கார ணமாக குப்பி விளக் கில் கல்வி கற்று யுத் தக் கெடுபிடிகளை அனுபவித்த ஒருவன் என்ற வகையில் மக் களது அடிப்படைத் தேவைகளை நான் நன்கறிவேன்.

கொழும்பில் போட் டியிடும் நீங்கள் உங்களுக்குப் போட் டியாக யாரையாவது கருதுகிறீர்களா?

இல்லை. காரணம் என் வழி, தனி வழி. சேவையே எனது இலக்கு. செய்ய முடியா தவற்றைச் செய்வேன் எனப் பொய்யான வாக்குறுதிகளை நான் வழங்க மாட்டேன். என் னால் செய்ய முடி யும் என்பதை மட்டும் கூறி யே நான் வாக்குக் கே ட்கின்றேன். நான் யா ரையும் பின்பற்றவும் மாட்டேன். அதே வேளை யாரையும் குறை கூறவும் மாட்டேன். ஜனாதிபதி என் மீது நம்பிக்கை வைத்து எனக்குத்தந்துள்ள பொறுப்பை சரிவர நிறைவேற்றுவேன்.

உங்களால் செய்ய முடியும் என எதைக் கூறுகிறீர்கள்?

கொழும்பு வாழ் மக்களுக்காக என்னிடம் ஒரு மிகச் சிறந்த வேலைத்திட்டம் உள்ளது. அத்துடன் தமிழ் மக்கள் அரசாங்கத்தின் மூலம் கிடைக்கும் சகல வசதிகளையும், சலு கைகளையும் பெற்றுக் கொள்ள நான் உத வியாக இருப்பேன். நான் கொழும்பு உட்பட மேல்மாகாணத்தில் ஒரு தமிழ்ப்பிரதிநிதியாக தெரிவு செய்யப்படுவதால் தமிழ் மக்கள் என்னை அணுகித் தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம். அதற்காக நான் 24 மணிநேரமும் இயங்கும் வகையில் மக்கள் பணிமனை ஒன்றையும் நிறுவிச் செயற்படவுள்ளேன்.

இதற்கான ஆளணி, அதிகாரம் என்ப வற்றை எங்கிருந்து பெறுவீர்கள்?

மக்கள் எனக்கு ஆணை தரும் பட்சத்தில் எல்லாமே தானாக வந்துவிடும். அதைவி டவும் நான் எனது எதிர்காலத்திட்டம் குறித்து ஜனாதிபதி அவர்களிடமும், அமைச்சர் பசில் ராஜபக்'விடமும் விரிவாக எடுத்துக் கூறி யுள்ளேன். அவர்களும் எனக்கு முழு ஒத் துழைப்பும் வழங்குவதாக உறுதியளித்;துள் ளனர். உண்மையில் மேல் மாகாணத்தில் கீழ் மட்டத்திலுள்ள மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வந்து அவற்றுக்குத் தீர்வு காணவேண்டும். கொ ழும்பில் கீழ் மட்டத்தில் தமிழ்பேசும் மக்களே அதிகமாக உள்ளனர்.

மாகாண சபையில் போட்டியிடும் நீங்கள் தேசிய அரசியலிலும் களமிறங்கிச் செயற்படு வீர்களா?

இல்லை, அது இப்போது தேவைப்படாத ஒன்று. தேசிய அரசியலில் அது செய்வேன், இது செய்வேன் என நான் பொய் கூற விரும்பவில்லை. நான் முதலில் குறிப்பிட்டது போன்று மாகாண சபை என்பது மக்களது அடிப்படைத் தேவையறிந்து அவற்றைத் தீர்த்து வைத்து அவர்களது வாழ்க்கைத் தர த்தை உயர்த்துவதே. அதைவிடுத்து nஜனீ வாவில் போய் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று மாகாண, மாநகர தேர்தல்களில் கூறு வது எல்லாம் பொய். அது மக்களது வாக்குகளை அபகரிக்கப்போடும் ஒருவகை நாடகமே.

வாக்குக் கேட்பதில் புதியதொரு முறை யைக் கையாளப் போவதாக் கூறினீர்கள். அது என்ன?

மக்கள் ஒவ்வொரு மாகாண சபைத் தேர் தலிலும் ஒரே அரசியல்வாதிகளுக்கு வாக்க ளித்து அவர்களில் பலரால் கண்ட நன்மை எதுவுமில் லை. அதனால் இம்முறை மக்கள் தமக்குச் சேவை செய்யக் கூடிய புதிய முகங் களைத் தெரிவு செய்ய வேண்டும். அதன் மூலம் வித்தியாசத்தை உணர வேண்டும். தமிழ் மக்கள் தமது குடும்ப வாக்குகளில் ஒன்றை மேல் மாகாணத்தில் புதிய முகமாகிய எனக்கு வழங்க வேண்டும். அதன் மூலம் ஓர் மாற்றத்தை நிச்ச யம் உருவாக்குவேன் என் பதை உறுதியாகக் கூறிக் கொள்கின்றேன்.

செவ்வி : எஸ்.சுரேஷ்

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.