புத் 66 இல. 07

விஜய வருடம் மாசி மாதம் 04ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. ஆகிர் பிறை 15

SUNDAY FEBRUARY 16 2014

 

 
பாராட்டு விழா
விஷ்ணுபுரம் விருது வென்ற தெளிவத்தை ஜோசப்புக்கு

பாராட்டு விழா

மலையகத்தின் மூத்த எழுத்தாளரும் ஈழத்து இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகளில் ஒருவருமான தெளித்தை ஜோசப் அவர்கள் அண்மையில் தமிழகத்தில் 'விஷ்ணுபுரம்" விருது வழங்கப்பட்டமையை கௌரவித்து, இன்று 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்புத்தமிழச் சங்கத்தில் பாராட்டு விழா நடைபெறவுள்ளது.

மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் உபதலைவரான மு.சிவலிங்கம் அவர்களின் தலைமையில் நடைபெறும் பாராட்டு விழாவில் மன்றத்தின் இணைச் செயலாளர்களான ஜp.சேனாதிராஜh, இரா.சடகோபன் ஆகியோருடன் இலக்கிய செயற்பாட்டாளர் மு.தயாபரன் மற்றும் காப்பியக்கோ ஜpன்னாஹ் சரிப்புதீன் ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கவுள்ளனர்.

இந்த பாராட்டு விழாவுக்கு மேலதிகமாக தெளிவத்தை ஜோசப் அவர்களின் மூன்று நூல்கள் அன்றையதினம் அறிமுகம் செய்துவைக்கப்படவுள்ளது.

அன்றைய தினம் மல்லியப்புசந்தி திலகரின் 'பாக்யா பதிப்பகம்" 'தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள்" எனும் மகுடத்தில் 17 கதைகளை தொகுத்து வெளியீடு செய்ய முன்வந்துள்ளது. மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் காப்பாளர் எம்.வாமதேவன் தலைமையில் நடைபெறும்.

நூலினை மூத்த பத்திரிகையாளர் திருமதி அன்னலடசுமி ராஜதுரை வெளியிட்டு வைக்க புரவலர் ஹாசிம் உமர் முதல் பிரதியைப் பெற்றுக்கொள்வார். நூலாய்வுரையை திறனாய்வாளர் லெனின் மதிவானம் நிகழ்த்தவுள்ளார்.

விஷ்ணுபுரம்" அமைப்பால் வெளியிடப்பட்ட 'மீன்கள்" என்ற சிறுகதைத் தொகுப்பின் அறிமுக நிகழ்வு 'ஞானம்" ஆசிரியர் தி.ஞானசேகரன் தலைமையில் நடைபெறவுள்ளது. நூலின் முதல் பிரதியை கொடகே பதிப்பக உரிமையாளர் தேசபந்து ஸ்ரீ சுமன கொடகே வெளியிட்டு வைக்க தொழிலதிபர் நடராஜh பெற்றுக்கொள்வார். நூலாய்வுரையை கவிஞரும் சிறுகதையாசிரியருமான அல்அஸ{மத் ஆற்றவுள்ளார்.

குடைநிழல்

தேசிய கலை இலக்கிய பேரவையும் - சுபமங்களாவும் இணைந்து நடத்திய போட்டியில் பரிசுபெற்ற நாவலான தெளிவத்தை ஜோசப்பின் 'குடைநிழல்" மறு பிரசுரம் செய்யப்பட்டு அதன் வெளியீடு தமிழகத்தின் எழுத்து பதிப்பகத்தினர் வெளியிட்டுள்ளனர். கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் தலைவர் பெ.முத்துலிங்கம் தலைமையில் நடைபெறும் இந் நூல் வெளியீட்டு நிகழ்வில் எழுத்தாளர் அந்தனிஜPவா நுலினை வெளியிட்டு வைப்பார்.

நிகழ்ச்சித் தொகுப்பு மற்றும் ஒழுங்கமைப்பினை மல்லியப்புசந்தி திலகர் மேற்கொள்ள சுப்பையா கமலதாசன் வரவேற்புரை நிகழ்;த்தவுள்ளார். தெளிவத்தை nஜhசப் அவர்களின் அமுதவிழா சிறப்பு நிகழ்வாக அவரது பிறந்த நாள் சிறப்பு தேநீர் விருந்தும் அவரது வாழ்க்கைப்பயணத்தினை தொகுப்பாக வெளிப்படுத்தும் ஆவணப்படக்காணொளியும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.