புத் 66 இல. 07

விஜய வருடம் மாசி மாதம் 04ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. ஆகிர் பிறை 15

SUNDAY FEBRUARY 16 2014

 

 
இங்கிலாந்து கிரிக்கெட்டில் ஆட்டம் காட்டும் பீட்டர்சன்

இங்கிலாந்து கிரிக்கெட்டில் ஆட்டம் காட்டும் பீட்டர்சன்

தற்போது இங்கிலாந்து கிரிக்கெட்டில், புதியதொரு இங்கிலாந்து அணியை உருவாக்குவது இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் அலெஸ்டயர் குக்கின் பிரதான குறிக்கோளாக உள்ளது. ஆனால் இங்கிலாந்து அணியில் ஆட்டம் காட்டும் கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து தலைவர் குக்கின் குறிக்கோளுக்கு முட்டுக்கட்டையாகலாம் எனத் தெரிகிறது. இங்கிலாந்து கிரிக்கெட் அணியை மீண்டும் கட்டியெழுப்பும் திட்டத்தின் வழியில் கெவின் பீட்டர்சனை அணியிலிருந்து விலக்கியதில் அதிக பங்கு வழங்கியது தலைவர் அலெஸ்டயர் குக் என்பது இரகசியமல்ல. ஆனால் அணியை மீளக் கட்டியெழுப்பும் தலைவர் குக்கின் திட்டத்தில் கெவின் பீட்டர்சனை இங்கிலாந்து தேசிய அணியிலிருந்து விலக்கியமையால் குக்கிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி சிறிதல்ல.

கெவின் பீட்டர்சனின் விலகல் சம்பந்தமாக முக்கிய அறிவித்தல் வழங்கிய பின்னர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் நிர்வாக சபை இது சம்பந்தமாக மெளனமாக உள்ளதைக் காணலாம். சிலவேளை இது சட்ட சிக்கலுக்கு ஏதுவாக இருக்கலாம். ஆனால் தங்கள் அணியின் மிக முக்கிய வீரராக (ஷிtar ஜிlayலீr) கருதப்படும் கெவின் பீட்டர்சனை அணியிலிருந்து விலக்கியதால் இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஒரு வெறுப்புணர்வு ஏற்பட்டு வருவதுடன், பீட்டர்சன் இல்லாத இங்கிலாந்து அணிக்கு இலங்கை மற்றும் இந்தியா அணிகளுடன் விளையாடும் போது மிகவும் கஷ்ட நிலைமைக்கு முகம்கொடுக்க நேரிடும் என ரசிகர்கள் கருத்து கூறியுள்ளனர்.

கெவின் பீட்டர்சன் வெகு சீக்கிரம் இங்கிலாந்து கிரிக்கெட்டிலிருந்து விலகுவார் எனத் தெரியவில்லை. அத்துடன் கெவின் பீட்டர்சனுடன் செய்துகொண்டிருந்த ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட இங்கிலாந்து மற்றும் வேர்ல்ஸ் கிரிக்கெட் நிர்வாக சபை, இப்போது அவரை சுதந்திரமான வீரராக அறிவித்துள்ளது. இதன் அர்த்தம், பீட்டர்சன் விரும்பினால் உலகம் முழுவதும் மட்டுமல்ல இங்கிலாந்தின் எந்தவொரு பிராந்தியம் சார்பாகவும இவருக்கு விளையாடலாம் என்பதாகும். இவ்விடயம் கடந்த 12 ஆம் திகதி நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் (யிஜிழி) ஏலத்தின் போது ஊர்ஜிதமானது. இதில் அதிக விலைக்கு ஏலம்போன வெளிநாட்டு வீரராக கெவின் பீட்டர்சன் நியமனமானார். பீட்டர்சனுக்கு நியமிக்கப்பட்ட தொகை 18.81 கோடி ரூபாய்கள் (1.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) ஆகும். இந்தியன் பிரீமியர் லீக்கின் (யிஜிழி) டெல்லி டெயார் டெவில்ஸ் அணி கெவின் பீட்டர்சனை ஏலத்தில் விலைக்கு வாங்கியுள்ளது.

பீட்டர்சனின் சேவையைப் பெற்றுக் கொள்ள முன்வந்துள்ள இங்கிலாந்து பிராந்திய அணிகளில் முன்னணியில் இருப்பது சரே பிராந்திய கிரிக்கெட் அணியாகும். சரே அணி கெவின் பீட்டர்சனை 20 க்கு 20 மற்றும் 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் பயன்படுத்த உத்தேசித்துள்ளதாக கடந்த புதனன்று அறிக்கை ஒன்றை ஊடகங்களில் வெளியிட்டுள்ளது. இவ்வாறு நடக்குமானால், சரே பிராந்திய அணிக்காக பீட்டர்சன் விளையாடும் அனைத்து இன்னிங்ஸ்களும் தனிப்பட்ட ரீதியில் இங்கிலாந்து அணித் தலைவர் அலெஸ்டயர் குக்கிற்கும் பொதுவாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் நிர்வாக சபைக்கும் சவாலாக அமையும் எனக் கருதப்படுகிறது.

இது சம்பந்தமாக இங்கிலாந்தின் விளையாட்டுச் செய்தி ஊடகவியலாளரும் கெவின் பீட்டர்சனுக்காக நிபந்தனையற்று முன்னிற்பவருமான பியர்ஸ் மோகன் கடந்த புதனன்று, கெவின் பீட்டர்சனை தேசிய அணியிலிருந்து விலக்கியமை தொடர்பாக தலைவர் அலெஸ்டயர் குக் மற்றும் விக்கெட் காப்பாளர் மெட் பியர் இருவருக்கும் வார்த்தைகள் மூலம் தாக்கியிருந்ததாக இங்கிலாந்து ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.

இங்கிலாந்து அணியிலிருந்து கெவின் பீட்டர்சனை விலக்கியது ஒரு திடீர் முடிவாகக் கொள்ள முடியாது. இது விடயமாக அவசியமான சூழல் கடந்த சில மாதங்களுக்கு முன்னே ஏற்படுத்தப்பட்டுள்ளது. எப்படியாயினும், பீட்டர்சனை அணியில் இருந்து விலக்கியதால் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது பீட்டசனுக்கு அல்ல, அந்த முடிவை எடுத்த தலைவர் அலெஸ்டயர் குக்கிற்கும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் நிர்வாக சபைக்குமாகும் என்பது இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களின் கருத்தாகும்.

சித்திரன் சுரேஷ்...-

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.