புத் 66 இல. 07

விஜய வருடம் மாசி மாதம் 04ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர. ஆகிர் பிறை 15

SUNDAY FEBRUARY 16 2014

 

 
தீயில் கருகிய அவலம்

காபரே நடனமாதின் கட்டுடல்

தீயில் கருகிய அவலம்

கொழும்பு கொள்ளுப்பிட்டி இரவு விடுதி யொன்றின் நடன மங்கை நல்ல உடல் வாகுடையவர். இவரது தலை பகுதி தீ பற்றி எரிகிறது. எங்கும் அல்லோல கல்லோலம். அயலவர்கள் கூடி நீரூற்றி தீயை அணைக்கிறார்கள். ஆடவறொருவர் வீட்டினுள்ளிருந்து நிர்வாணமாக வெளியே ஓடுகிறார். அந்தோ அந்த நடனமங்கையை காப்பாற்ற முடியவில்லை.

காஞ்சனா கயானி அபேரட்ண இவர் கிராமத்தழகி. பணம் சம்பாதிப்பதற்காக ரம்புக்கனையிலிருந்து இங்கு வந்து இத்தொழிலை செய்து வந்தார். எவ்விதமான நடனமென்றாலும் அதனை கேட்கும் பட்சத்தில் ஆடிக்காட்டும் திறமையுள்ளவராக விளங்கினார். பெற்றோரையிழந்த இவர் உறவினர்களின் வற்புறுத்தலின் காரணமாக திருமணம் செய்து கொண்டார். முதலில் பிறந்த குழந்தை ஆணாகவும், இவர்களது சந்தோசமான வாழ்க்கையின் பிரதிபலனாக எட்டு வருடங்களின் பின் பெண் குழந்தையொன்றும் பிறந்தது. நிதி நிலை மோசமடைய இருவரிடையே கருத்துவேற்றுமை யேற்பட்டு பிரியும் நிலையேற்பட்டது. இரண்டு பிள்ளைகளும் காஞ்சனாவின் கணவரின் தாயாரிடம் போய்ச் சேர்ந்தன. கல்வி தகைமையில்லாததால் இவளால் தொழில் தேடிக்கொள்ளமுடியாமல் போக, கவர்ச்சியான இவரது உடல்வாகு இரவுவிடுதியில் நடனத்தொழிலையேற்படுத்திக் கொடுத்தது. இத்தொழிலில் திருப்தி கண்ட இவர் தொடர்ந்து அதனையே மேற்கொண்டார். கணவரின் தாய் வீட்டில் வளரும் இரு பிள்ளைகளையும் மாதமொருமுறை சென்று பார்த்து வந்தார். இவர் எவ்வளவு தான் பணம் சம்பாதித்த போதும் தனிமை இவரை வாட்டியது. தன்னுடன் பிரச்சினையின்றி சந்தோசமாகவும் ஒற்றுமையாகவும் வாழவிரும்பும் ஒரு ஆடவரைத் தேடினார்.

ஆடவரொருவர் கிடைத்ததும் இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்தனர். பிள்ளைகள் மீண்டும் இவர்களுடன் சேர்ந்தனர். அவர்களது தாம்பத்திய வாழ்விலும் பிரச்சினையேற்பட்டது. அப்போது அவர் கர்ப்பிணியாக இருந்தார்.

இரண்டாவது கணவருக்கு முதலில் ஆண் குழந்தை பிறந்தது. இதனையறிந்த காஞ்சனாவின் முதல் கணவர் தன் இரு பிள்ளைகளையும் அழைத்துச் சென்றார். காஞ்சனா தன் இரண்டாம் கணவருடன் குடாமடுல, சிதாமுல்லையில் தன் சிறு பிள்ளையுடன் வாழ்ந்துவந்தார்.

தொடர்ந்து நடனமாடி வந்தார் காஞ்சனா அதன் மூலம் பெரும் பணத்தைச் சம்பாதித்தார். தாய் தகப்பனில்லா சமயங்களில் அயலவர்கள் இளைய மகளை கவனித்துவந்தனர். வழமை போல் காஞ்சனா சம்பவ தினத்தன்று தொழிலுக்காக இரவு விடுதிக்கு சென்றார். திடீரென அங்கு வந்த காஞ்சனாவின் இரண்டாவது கணவருடன் வாக்குவாதப்பட்டார். நிலைமையை கட்டுப்படுத்த முடியாத இரவு விடுதி அதிகாரிகள் பொலிஸாருக்கு அறிவித்தனர். இப்பிரச்சினையை சுமுகப்படுத்துவதற்கு கிராண்ட்பாஸ் பொலிசை சேர்ந்த ஒரு கான்ஸ்டபிள் இரவு விடுதிக்கு அனுப்பப்பட்டார்.

கொள்ளுப்பிட்டியிலுள்ள இரவு விடுதிக்கு வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் காஞ்சனாவின் அழகில் மயங்கி இரண்டாம் கணவரை அங்கிருந்து விரட்டினார். இச்சம்பவத்தையடுத்து கிரான்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த கான்ஸ்டபிளும் காஞ்சனாவும் காதலர்களாகினர். இரண்டாம் கணவரிடமிருந்து பிரிந்து காஞ்சனா தன் புதிய கான்ஸ்டபிள் காதலனுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார்.

சம்பவம் தினம் காஞ்சனா வீட்டில் தனியாக இருக்கையில் பொலிஸ் கான்ஸ்டபிள் கையில் உணவுப்பொதியுடன் வீட்டினுள் செல்வதை அயலவறொருவர் அவதானித்தார். சில நிமிடங்களில் காஞ்சனா தலைபகுதி எரிந்த நிலையில் வீட்டிலிருந்து வெளியே ஓடி வருவதையும் அவர் கிணற்றின் பக்கம் செல்வதையும் கண்ட அயலவர்கள் காஞ்சனா மீது நீரை ஊற்றினர் இருப்பினும் பயனேதும் இருக்கவில்லை.

அச்சமயம் ஆடவறொருவர் நிர்வாணமாக கையில் உடையுடன் வெளியே ஓடி வந்து மோட்டார் சைக்கிளில் ஏறிச் சென்றதாக சிலர் தெரிவித்தனர். அங்கு வந்த கான்ஸ்டபிள் காஞ்சனாவை சந்திக்கவேயில்லையென்றும் காஞ்சனா ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்ல அம்பியுலன்ஸ் வண்டி எடுத்து வருவதாகக் கூறி தன் மோட்டார் சைக்கிளில் சென்றதாகவும் சிலர் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் சென்ற கான்ஸ்டபிள் திரும்பாததால் அயலவர்கள் பொலிஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அவர் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டும் பயனில்லாமல் போனது. மோட்டார் சைக்கிளில் சென்ற கான்ஸ்டபின் விபத்துக்குள்ளாகி பாதுக்கை தனியார் மருத்துவமனையில் காயங்களுக்காக சிகிச்சை பெற்றுள்ளதை பின்னர் பொலிஸார் அறிந்தனர்.

கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த இந்த கான்ஸ்டபிளின் படமொன்றை காஞ்சனாவின் கைபை யொன்றிலிருந்து பொலிஸார் கைப்பற்றினர். சந்தேக நபராக கருதப்படும் இக்கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டார்.

பிலியந்தலை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி சோமரட்ண, குற்ற தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி விஜேமுனி, பரிசோதகர் நந்தசிறி கமகே, துமிந்த, விஜேவர்தன ஆகியோர் விசாரணைகளை மேற்கொண்டனர். கல்கிசை பொலிஸ் வட்டார பதில் பொலிஸ் அத்தியட்சகர் உதிதபெரேரா, உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஐ. எம். பி. ஜயலத் ஆகியோர் பணிப்புரை வழங்கினர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.