புத் 66 இல. 01

விஜய வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர.அவ்வல் பிறை 03

SUNDAY JANUARY 05 2014

 

 
ஓர் இனத்தின் நலன்களுக்காக குரல்கொடுப்பது இனவாதமாகாது

ஓர் இனத்தின் நலன்களுக்காக குரல்கொடுப்பது இனவாதமாகாது

இனவாதம் வேறு, தேசியவாதம் வேறு

வாரமஞ்சரி வாசகர் வட்ட விழாவில் ராஜித

எந்த ஓர் இனக் குழுமத்தினதும் பிரச்சினை களைத் தீர்ப்பதற்குப் பதிலாக அவற்றை முழுங்கடிப்பதற்கு முயற்சிக்கப்படுமானால் அது இயலாத விடயம் என்று கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தர்கா நகரில் தெரிவித்தார்.

ஓர் இனத்தின் நலன்களைப் பற் றியோ பிரச்சினைகள் பற்றியோ அந்த இனத்தவர் பேசுவது இனவாத மாகாது என்றும் அது இன்னோர் இனத்திற்குப் பங்கமாக அமையும் போதுதான் இனவாதமாகும் என்றும் குறிப்பிட்ட அமைச்சர், இனவாதம் வேறு தேசியவாதம் வேறு என்றும் கூறினார்.

தினகரன் வாரமஞ் சரியின் தர்காநகர் வாசகர்களும் களுத் துறை மாவட்ட எழுத்தாளர் ஒன்றியமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த வாசகர் வட்ட அங்குரார்ப்பணமும் சான்றோர் கெளரவிப்பும் கடந்த வாரம் நடைபெற்றது. தர்காநகர் அல்-ஹம்ரா வித்தியாலயத்தில் நடைபெற்ற வைபவத்தில் அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

“வட பகுதியில் இருந்து வெளிவரும் சில பத்திரிகைகள் இனவாதத்தைத் தோற்று விப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது. அதே நேரம் அரசாங்கத்தினால் வெளியிடப்படும் பத்திரிகைகள் இனவாதப் போக்கினைக் கொண்டிருப்பதில்லை என்று சொல்லப்படுகிறது. தமிழ் பேசும் மக்களுக்காக வெளியிடப்படும் பத்திரிகைகள் அந்த மக்களின் நலன்களை, அபிலாஷைகளை பூர்த்தி செய்கின்றனவா? என்பதைப் பார்க்க வேண்டும். இனத்தின் நலன்களைப் பற்றிப் பேசுவது இனவாதம் அல்ல. தேசியவாதம் பேசுவது ஒன்றும் தவறு கிடையாது. அது ஏனைய இனங்களுக்குள் குரோதத்தைத் தோற்றுவிக்காது பார்த்துக்கொள்ள வேண்டும். இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தைத் தோற்றுவித்து நிரந்தரமான அமைதியை ஏற்படுத்துவதற்குப் பத்திரிகைகள் துணைநிற்க வேண்டும்” என்றும் அமைச்சர் மேலும் தமதுரையில் குறிப்பிட்டார்.

இந்த வைபவத்தில் உரையாற்றிய லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஆசிரியர்பீடப் பணிப்பாளர் சீலரத்ன செனரத், “எமது பத்திரிகைகளை அரசாங்கத்தின் ஊது குழல்கள் என்று சிலர் சொல்கிறார்கள். அரசாங்கம் என்றால் மக்கள் அல்லவா. மக்களுக்காகவே அரசாங்கம். ஆகவே நாங்கள் மக்களுக்காகவே பணியாற்றுகிறோம்” என்றார். பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரிய, ஆசிரியைகள், எழுத்தாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பெருந்திரளானோர் இந்த வைபத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.