புத் 66 இல. 01

விஜய வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர.அவ்வல் பிறை 03

SUNDAY JANUARY 05 2014

 

 

மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து 20 மில்லியன் ரூபா முதலீட்டில் ஆய்வுகூடத்தை நிறுவியுள்ள அட்லஸ்

மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து 20 மில்லியன் ரூபா முதலீட்டில் ஆய்வுகூடத்தை நிறுவியுள்ள அட்லஸ்

காகிதாதிகள் தயாரிப்புகள் உற்பத்தியில் நீண்ட காலமாக ஈடுபடும் முன்னணி வர்த்தக நாமமான அட்லஸ், பாடசாலை மற்றும் அலுவலக காகிதாதிகள் தயாரிப்புகளின் தரத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் உயர் தரம் வாய்ந்த நவீன வசதிகளை கொண்ட ஆய்வு கூடமொன்றை நிறுவ முன்வந்துள்ளது.

இதற்காக மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் 20 மில்லியன் ரூபாவுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் அண்மையில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த ஆய்வு கூடத்தை கம்பனி வளாகத்தில் நிறுவாமல், பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவுவதற்கான தீர்மானத்தை மேற்கொண்டமையானது, உள்நாட்டு பொறியியல் திறமைகளை மேம்படுத்தும் நோக்கத்தை முன்னிறுத்தி உள்நாட்டு கல்விச் சூழலில் காணப்படும் வாய்ப்புக்களையும் கிடைக்கப்பெற்ற வளங்களையும் ஊக்குவித்து மேம்படுத்துவதன் மூலம் பிராந்திய ரீதியில் அவர்களை தேர்ச்சி நிலையில் வைத்திருக்க முடிவதாக அட்லஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி நிர்மல் மதநாயக்க தெரி வித்தார்.

நுகர்வோரை மையப்படுத்திய இன்றைய சந்தை சூழலில், சிக்கனமான முறையில் உயர் தரம் வாய்ந்த பொருட்களை வழங்குவது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இந்த ஆய்வுகூடமானது, வலு மற்றும் நிதிச் சிக்கனமான பொருட்களை உற்பத்தி செய்வது தொடர்பில் அதிகளவு கவனம் செலுத்தவுள்ள துடன், தற்போது சந்தையில் காணப்படும் பொருட்களுக்கு பெறுமதி சேர்த்து மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

பொறியியல், வடிவமைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் மூன்று பிரிவுகளுக்கு அனுகூலம் கிட்டும் வகையில் அட்லஸ் ஆய்வு நிலையம் அமைந்துள்ளதுடன், நாட்டின் மேலும் சில நிறுவனங் களின் ஆய்வு நடவடிக்கைகளை இங்கு முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. உயர்ந்த ஆளுமை மற்றும் திறமை படைத்த பொறியியல் பீடமாக கருதப்படும்,

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.