புத் 66 இல. 01

விஜய வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர.அவ்வல் பிறை 03

SUNDAY JANUARY 05 2014

 

பரஸ்பரம் விட்டுக்கொடுப்பு, புரிந்துணர்வு, முரண்பாடான விடயங்களை பேசித் தீர்த்தல்:

TNA பச்சைக்கொடி

ஜனாதிபதியுடனான முதலமைச்சரது சந்திப்பின் பின் பாரிய திருப்பம்

மத்திய அரசாங்கத்துடன் இணக் கம் காணப்படும் விடயங்களில் பரஸ்பரம் விட்டுக்கொடுப்பு களுடன் இணைந்து செயற்பட வடமாகாண சபை முன்வந்துள் ளதாக நம்பகரமாத் தெரிய வருகிறது. முரண்பாடுகள் ஏற்படின் அவற்றைப் பேச்சு வார்த்தை நடத்தித் தீர்த்து வைப் பதுடன் பிரச்சினைகளைப் பெரிது படுத்தாதிருக்கவும் இருதரப்பும் இணக்கம் கண்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இதற்காக இரு தரப்பினரும் பரஸ்பரம் சில விட்டுக் கொடுப்புக்களை நல் லெண்ண அடிப்படையில் விட்டுக் கொடுத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

                                                            விவரம்»

சிரேஷ்ட தொழிற்சங்கவாதியும், ஸ்ரீல.சு.க.வின் உபதலைவர்களில் ஒருவருமான மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானாவின் பிறந்த தினமான ஜனவரி முதலாம் திகதி சர்வமதத் தலைவர்களான ஜனாதிபதியின் மதவிவகார இணைப்பாளர்கள் கலாநிதி ஹசன் மெளலானா, பிரம்மஸ்ரீ பாபுசர்மா உட்பட்டோர் அவருக்கு பொன்னாடை போர்த்திக் கெளரவித்தனர். அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் அருகில் காணப்படுகிறார்.

 

 

தர்கா நகரில் இடம்பெற்ற வாரமஞ்சரி வாசகர் வட்ட முப்பெரும் விழாவில் வாரமஞ்சரி உதவி ஆசிரியர் அ. பரசுராமன் அவர்களின் நாற்பத்தைந்து ஆண்டு சேவை நலனைப் பாராட்டி அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஆசிரிய பீடப் பணிப்பாளர் சீலரத்ன செனரத், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம் அஸ்லம், தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவர், மேல் மாகாண சபை உறுப்பினர்களான எம்.எம்.எம். அம்ஜாத், எஸ்.எம். யூஸ¤ப் உட்பட பிரமுகர்கள் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கெளரவித்தனர். (படம்: பி.எம். முக்தார், அஷ்ரப் ஏ. ஸமத்)

மேல் மாகாண சபைத் தேர்தல் 2014:

இ.தொ.கா., ஜனநாயக மக்கள் காங்கிரஸ், இந்திய வம்சாவளி மக்கள் முன்னணி: தமிழ்க் கட்சிகள் இணைந்து பலமானதொரு கூட்டணி

மனோவின் ஜனநாயக மக்கள் முன்னணிக்கும் அழைப்பு விடுக்கிறார் பிரபா எம்.பி.

நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் மேல் மாகாணத்தில் பலமானதொரு கூட்டணியை அமைக்கும் முயற்சியில் தமிழ்க் கட்சிகள் பலவும் கூட்டாக இறங்கியுள்ளன. அமைச்சர் ஆறுமுகன் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் காங்கிரஸ், முத்தப்பன் செட்டியர் தலைமையிலான இந்திய ....

                                                            விவரம்»

 

மழை விட்டும் தூவானம் நிற்காத நிலையில் கல்முனை ணிவி

தலைமையின் சாணக்கியத்தையும் விஞ்சி தலைவர்கள் குடுமிச் சண்டையில்?

மேயர் - பிரதிமேயர் ஏட்டிக்குப் போட்டி அறிக்கை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகைக்குட்பட்ட கல்முனை மாநகர சபையின் பட்ஜட் அக் கட்சியின் தலைவரும், அமைச் சருமான ரவூப் ஹக்கீம் மேற் கொண்ட பகீரதப் பிரயத் தனங்களையடுத்து வெற்றி கரமாக நிறைவேற்றப் பட்ட போதும் அதன் பின்னர் ஏற்பட்ட சில நிகழ்வுகள் உறுப்பினர்கள் மத்தியில் ஒருவிதமான மனப் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

                                                           விவரம் »

மாலை வேளையில் பங்களாவில் கூடும் மாகாணசபை TNA பிரமுகர்கள்?

ஆளுநர் - அங்கத்தவர்களின் இழுபறிக்கு முற்றுப்புள்ளி

கூட்டமைப்பின் வடமாகாண சபை அமைச்சர்கள் மற்றும் அங்கத்தவர்களிற்கும் ஆளுநர் சந்திரசிறிக்குமிடையே காணப் பட்ட தேவையற்ற சில முரண்பாடுகள் முடிவுக்கு வந்துள்ளன. பெரும்பாலான வடமாகாண சபை அமைச்சர்களும் மாகா ணசபையின் கூட்டமைப்பு அங்கத்த வர்களும் மாலை வேளைகளில் ஆளுநர் பங்களாவிற்கு படையெடுத்து ...

                                  விவரம் »

 

Other links_________________________


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.