புத் 66 இல. 01

விஜய வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1435 ர.அவ்வல் பிறை 03

SUNDAY JANUARY 05 2014

 

 
கிழக்கு மாகாண உள்@ராட்சி ஆணையாளர் நியமன விவகாரம்

கிழக்கு மாகாண உள்@ராட்சி ஆணையாளர் நியமன விவகாரம்

முஸ்லிம் சமூகத்தவர் வேண்டாம் என்கிறது TNA

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாள ராக எம்.வை. சலீம் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் கையொப்பமிட்டு கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜயவிக்ரமவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளனர்.

எட்டு அம்சங்களைக் கொண்ட இந்த கடிதத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் 11 பேர் கையொப்பமிட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் ஆளுநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் மக்களை பொறுத்த வரையில் கிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி என்ற விடயம் மிக முக்கியமான தாகும். தற்போது உள்ளூராட்சி ஆணையாளராக முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஒருவரை நியமிக்கவுள்ளதாக நாம் அறிகின்றோம். இது நடை பெறுமாயின் அதியுயர் மட்டத்திலி ருந்து அடிமட்டம் வரையான உள்ளூ ராட்சி அதிகாரிகளாக முஸ்லிம்கள் இருப்பர். எனவே மேற்குறிப்பிட் டவாறு உள்ளூராட்சி ஆணையாளர் அமைவராயின் கிழக்கு மாகாணத்தில் நாம் பேணிவந்த இனச்சார்பின் மையையிட்டு நாம் விசனமடை வோம். உள்ளூராட்சி ஆணையாளராக முஸ்லிம் ஒருவர் இருப்பாராயின் மேலே குறிப்பிட்ட எமது நியமனங் கள் குழம்பிப்போகலாம். இந்த அடி ப்படையில் உள்ளூராட்சி ஆணையா ளராக நாம் மேலே குறிப்பிட்ட சமூ கத்தை சேர்ந்தவரை நியமிக்கவுள்ளதை மீள்பரிசீலனை செய்யுமாறு வேண் டிக்கொள்வதுடன், தற்போதைய உள்ளூராட்சி ஆணையாளரின் சேவையை நீடிக்கும் படி கேட்டுக்கொள்கின்றோம்.

அல்லது குறித்த இனத்தவரல்லாத வேறு ஒருவரை நியமிக்கும் படியும் நாம் உங்களிடமும் கேட்டுக்கொள் கின்றோம். இந்த கோரிக்கை நியாய மானதொரு சமநிலைப்பட்ட நிர்வாகத்தை பேணுவதற்கான வேண்டுகோளாகும். இதற்கு மேலாக வேறு எதனையும் கருத்தில் கொண்டு எழுதப்படவில்லை என குறித்த கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தின் பிரதி மாகாண பிரதம செயலாளருக்கும் அனுப்பிவைக் கப்பட்டுள்ளது. இதேவேளை, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக எம்.வை.சலீம் மாகாண ஆளுநர் மொஹான் விஜயவிக்ரமவினால் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக கடமையாற்றிய உதயகுமார் மட்டக்களப்பு மாநகரசபைக்கு ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையிலேயே குறித்த நியமனத்திற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.


முஸ்லிம்களை அடக்கி ஆள நினைக்கிறதா ஹினிதி?

பெரும்பான்மை சமூகத்திடம் இருந்து அரசியல் அதிகா ரம் கிடைக்க வேண்டும், சுயாட்சி கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் சமூகத்தினை அடக்கி ஆள நினைக்கக்கூடாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக முஸ்லிம் சமூகத்தினை சேர்ந்த ஒருவர் நியமிக்கப் பட்டிருப்பதை கண்டிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள சி.வி. விக்னேஸ்வரன் சந்தித்து உரையாடியதன் பின்னர் வட மாகாண சபையின் செயற்பாடுகளில் ஒருவிதமான நெகிழ்வுப் போக்கைக் காணக்கூடியதாகவுள்ளது. முதலமைச்சரின் சந்திப்பைத் தொடர்ந்து தமிழகம் சென்றுள்ள தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நாடுதிரும்பியதும் அடுத்த வாரமளவில் ஜனாதிபதியைச் சந்தித்து உரையாடவுள்ளார். இதனைக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உறுதி செய்துள்ளார். தமிழ்க் கூட்டமைப்பின் இந்த மனமாற்றம் குறித்து வடபகுதி மக்களும், புத்தஜீவிகளும் தமது திருப்தியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளனர். இம்முடிவினைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்பவோ எடுத்திருக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதன் மூலமாகவே மாகாண சபை நிர்வாகத்தைத் திறம்பட நடத்த முடியும் என்பதே உண்மை எனவும் புத்திஜீவிகள் தெரிவித்தனர்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2014 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.