புத் 65 இல. 07

நந்தன வருடம் மாசி மாதம் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் பிறை 05

SUNDAY FEBRUARY 17 2013

 

 

புசல்லாவ புரடொப் பிரதான வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்

புசல்லாவ புரடொப் பிரதான வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்

மிசல்லாவ நகரிலிருந்து புரடொப் தோட்டத்திற்கு செல்லும் பிரதான பாதையின் புனரமைக்கும் பணிகள் சுமார் 15 வருடங்களின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கால் நடைவள மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இத்திட்டத்தை அண்மையில் ஆரம்பித்து வைத்தார்.

குண்டும் குழியுமாக, மனித நடமாட்டத்திற்கு உதவாத நிலையில் காணப்பட்ட இந்த வீதியில்தான் நிறைமாத கர்ப்பினித் தாயொருவரை தோட்ட லொறியில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளையில் லொறியிலேயே குழந்தையை பிரசவித்து குழந்தை இறந்துவிட்ட சம்பவம் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது.

சுமார் 5 தோட்டங்களிலுள்ள 15 பிரிவுகளைச் சேர்ந்த மக்கள், மாணவர்கள். ஆசிரியர்கள், கிராம விவசாயிகள், அவசர தேவையின் பொருட்டு சிகிச்சைக்காக செல்லும் நோயாளர்கள் என பெரும் பாலானோர் பல்வேறு இன்னல்களுக்கும் மத்தியில் இப்பாதையை பயன்படுத்தி வந்தனர். பாதை சேதமடைந்ததன் காரணமாக பொருளாதார ரீதியில் பெரும் பாதிப் புக்குள்ளாகி இருந்தது. இப் பிரதேசம் மிகவும் குளிரான பிரதேசமாகும். மாலை மூன்று மணிக்கே இருள் சூழ்ந்து விடும் போது பனி மேகங்களினால் ஒருவரை ஒருவர் பார்த் துக்கொள்ளக் கூட முடியாது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சேவைகள் சுமார் 3 வருட காலமாக பாதை அவலம் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. பருவகால சீட்டை பெற்ற மாணவர்கள் குறிப்பிட்ட தூரம் வரை நடந்து சென்று புசல்லாவ பிரதேச பாடசாலைகளுக்கு தனியார் வாகனங்களில் சென்று வந்தனர். பாதையின் அவல நிலை காரணமாக தனியார் வாகனங்களும் அடிக்கடி பழுதடைந்து விடுவதால் மாணவர்களின் கல்வி பெரும் பாதிப்புப்புக்குள்ளானது.

இந்நிலையில் இப்பிரச்சினைக்கு தீர்வுகாண ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனையின் கீழ் பொருளாதார அபிவி ருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் பணிப் பின்பேரில் நுவரெலியா மாவட்ட ஒருங்கி ணைப்பு குழுத்தலை வரும் கால்நடைவள மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச் சருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் வேண்டு கோளின் பேரில் புசல்லாவ புரடொப் தோட்டத் திற்கான பாதை காபட் அமைக்கும் வேலைத்திட்டம் அண்மையில் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் மத்திய மாகாண கல்வி அமைச்சர் அனுஷியா சிவராஜா, அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் மொகமட், மத்திய மாகாணசபை உறுப்பினர்களான ராம், உதயகுமார், உடபலாத்த பிரதேச சபை உறுப்பினர் எம். எஸ். எஸ். செல்லமுத்து மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

பாதைக்கான முதல் கட்ட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது அங்கு கூடியிருந்த மக்கள் பெரிதும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டதை அவதானிக் கக்கூடியதாக இருந்தது. எதிர்காலத்தில் அனைத்து வேலைத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்த கால்நடைவள மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மேற்கொண்ட நடவடிக்கைக்கு அம்மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

குறிப்பிட்ட பாதையை செப்பனிடுவதற்கான குத் தகைக்கு எடுத்த ஒப்பந்தக்காரர்கள் அக்கரபத்தன, டயகம பிரதேசங்களில் பாரிய பாதை அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு வருவதால் அப்பணிகள் நிறைவுற்றதும் புரடொப் தோட்ட பாதைக்கான இரண்டாம் கட்ட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ள குறிப்பிடத்தக்கது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.