புத் 65 இல. 01

நந்தன வருடம் மார்கழி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 சபர் பிறை 23

SUNDAY JANUARY 06 2013

 

 
ஜனாதிபதியை நேரடியாக கவனம் செலுத்துமாறு கோரிக்கை விடுப்பு

வடக்கு கிழக்கில் நிலைமைகள் மோசமாம்

ஜனாதிபதியை நேரடியாக கவனம் செலுத்துமாறு கோரிக்கை விடுப்பு

கவலைப்பட்டுள்ள குமரகுருபரன் ஊடகங்களுக்கு அறிக்கை

வடக்கு கிழக்கு நிலைமைகள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரடியாக கவனம் செலுத்த வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக வடக் கின் நிலை மைகள் மோசமடைந்து செல்வதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாணவர்களின் பெற்றோர் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டவர்கள் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். வெள்ளை வான்களின் மூலம் குறித்த நபர்கள் கைது செய்யப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகளினால் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படக் கூடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயங்கள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக கவனம் செலுத்த வேண்டுமென குமரகுருபரன் வலியுறுத்தியுள்ளார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.