புத் 65 இல. 01

நந்தன வருடம் மார்கழி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 சபர் பிறை 23

SUNDAY JANUARY 06 2013

 

 
மு.கா தலைவர் முயற்சியால் விரைவில் விடுதலையாவார்!
சவூதி மரண தண்டனைக் கைதி ரிஸானா

மு.கா தலைவர் முயற்சியால் விரைவில் விடுதலையாவார்!

எஜமானரின் கைக்குழந்தையை கொலை செய்தார் என்கிற வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டு சவூதி அரேபியாவில் மரண தண்டனைக் கைதியாக உள்ள பணிப்பெண் ரிஸானா நபீக் விவகாரத்தில் நம்பிக்கை ஊட்டும் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது.

இவர் விரைவில் நாடு திரும்புகின்றமைக்கான சாத்தியம் தெரிகின்றது என இலங்கைக்கான சவூதித் தூதுவர் அப்துல் அkஸ் அல் ஜம்மாஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமுக்கும் இவருக்கும் இடையில் நீதி அமைச்சில் கடந்த நாட்களில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இதன்போதே ரிஸானா நபீக்கின் விடுதலை தொடர்பாகவும் பேசப்பட்டது. இதன்போது விடுதலை தொடர்பாகவும் பேசப்பட்டது. அப்போதே ரிஸானாவின் விடுதலை தொடர்பாக மிகவும் சாதகமாக பரிசீலிக்கப்படுகின்றது என்று தூதுவர் சொன்னார்.

ரிஸானாவை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் சவூதி மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அkஸ் அல் அல் சவூதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கருணை மனு மிகவும் சாதகமாக பரிசீலிக்கப் படுகின்றது, உயிர் இழந்த குழந்தையின் பெற்றோருடனான சமாதான முயற்சிகள் பயன் அளிக்கும், இதனால் ரிஸானாவின் விடுதலை முயற்சி வெற்றிபெற வாய்ப்பு உள்ளது, அதேபோல ரிஸானாவின் விடுதலையை ஊக்குவிக்கின்ற வகையில் தூதரகம் விசேட சிபாரிசு ஒன்றை அனுப்பி உள்ளது என்று தூதுவர் எடுத்து உரைத்தார்.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.