புத் 65 இல. 01

நந்தன வருடம் மார்கழி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1434 சபர் பிறை 23

SUNDAY JANUARY 06 2013

 

 
ரூ. 370 கோடி வருமானம் பெற்று லேக்ஹவுஸ் நிறுவனம் சாதனை

ரூ. 370 கோடி வருமானம் பெற்று லேக்ஹவுஸ் நிறுவனம் சாதனை

* எந்தவோர் ஊடக நிறுவனமும் பெற்றிராத ஊழியர் நலன்புரி சேவைகள்

* 2013 இல் 400 கோடி ரூபா இலக்கு

2012 ஆம் ஆண்டு லேக்ஹவுஸ் நிறுவனம் 370 கோடி ரூபாவை வருமானமாக பெற்று சாதனை படைத்துள்ளது.

இலங்கையில் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களுக்கு இடையே அதிக வருமானத்தை லேக்ஹவுஸ் நிறுவனம் ஈட்டிக் கொடுத்துள்ளது.

ஊழியர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளதுடன் எந்தவொரு ஊடக நிறுவனமும் ஊழியர்களுக்கு வழங்காத நடவடிக்கைகளையும் லேக்ஹவுஸ் நிறுவனம் முன்னெடுத்து வந்துள்ளது.

2013 ஆம் ஆண்டில் லேக் ஹவுஸ் நிறுவனம் 400 கோடி ரூபாவை வருமானமாக பெறும் இலக்குடன் செயற்படுகிறது என லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவரும் பிரபல ஊடகவிய லாளருமான பந்துல பத்மகுமார இவ்வாறு தெரிவித்தார்.

2013 ஆம் ஆண்டு பிறந்துள்ளதை முன்னிட்டு அசோசியேடட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட் நிறுவனம் முன்னெடுக்கவுள்ள இலக்குகள் குறித்து மேற்கண்டவாறு தெரிவித்தார்.

லேக்ஹவுஸ் நிறுவனத்தில் புத்தாண்டை முன்னிட்டு சம்பிரதாயபூர்வமாக மங்கள விளக்கேற்றி, பாற்சோறு, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் கூறியதாவது: நாணய மதிப்பிறக்கம், உலக சந்தையில் பத்திரிகை அச்சுக்குத் தேவையான கடதாசி மற்றும் மூலப் பொருட்களின் விலை அதிகரிப்பு, மின்சார கட்டண அதிகரிப்பு, எரிபொருள் விலை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு மத்தியில் லேக்ஹவுஸ் நிறுவனம் 2012 ஆம் ஆண்டு இவ்வாறான அதிக வருமானத்தை பெற்றது. ஊழியர்களுக்கு வருடத்தில் வழங்கப்படும் நான்கரை மாத சம்பள போனஸ் அலவன்ஸ் உட்பட உள்ளக வெளியக மருத்துவ காப்புறுதி திட்டம், மாதாந்த வாழ்க்கை செலவு அல வன்ஸ், ஊழியர்களின் பிள் ளைகளுக்கு இலவச புத்தகங்கள், ஆடைகள், பாடசாலை பைகள், உட்பட நலன்புரி நடவடிக்கைகள் போன்றவை எந்தவொரு ஊடக நிறுவனமும் பெற்றுத் தராத ஊழியர் நலன்புரிப் பணிகளாகும்.

போனஸ¤க்காக 170 மில்லியன் ரூபாவும் உள்ளக, வெளியக மருத்துவ காப்புறுதி முறைக்காக 100 மில்லியன் ரூபாவும், மாதாந்த வாழ்க்கைச் செலவு அலவன்ஸாக 312 மில்லியன் ரூபாவும், பிள்ளைகளுக்கு இலவச புத்தகம், ஆடைகள், பாடசாலை பைகள் ஆகியவற்றுக்காக 15 மில்லியன் ரூபாவும், ஊழியர் சப்பாத்துக்காக 668 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.

நிறுவனத்தில் மேற்கொள்ளப்படும் மீள்கட்டமைப்பு செயற்பாடுகளும் தொழில்நுட்ப நவீனமயப் பணிகளும் இதற்குக் காரணமாகும்.

ஏனைய ஊடக நிறுவனங்கள் உட்பட பிற நிறுவனங்கள் ஊழியர்களுக்கு வழங்கும் நலன்புரி செலவுகளை வெட்டி செயற்படும் வேளையில் அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிட்டட் நிறுவனம் ஊழியர்களின் எந்த நலன்புரி அலவன்சுகளையும் வெட்டாமல் செயற்படுவது நிறுவனம் பெற்ற பெரு வெற்றியாகுமென ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

எந்த ஒரு நாளிலும் திறைசேரியில் இருந்து எவ்வித நிதி உதவியும் பெறாத லேக்ஹவுஸ் நிறுவனம், 2013 ல் ஊழியர்களின் சம்பளத்தை 1000 ரூபாவினால் அதிகரிக்கவும் தீர்மானித் துள்ளது.

|

| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.