புத் 64 இல. 12

கர வருடம் பங்குனி மாதம் 05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 25

SUNDAY MARCH 18  2012

 
தென்மேற்குப் பக்கத்தில் சமையலறை இருக்கக் கூடாது

தென்மேற்குப் பக்கத்தில் சமையலறை இருக்கக் கூடாது

சமீபத்தில் என்னை சந்தித்த பெண்மணி ஒருவர் இப்படிச் சொன்னார்,

“சேர், என் கணவர் இந்த வீட்டில் இருந்து செய்கின்ற எல்லா வியாபாரமும் நஷ்டத்தில் தான் முடிந்திருக்கிறது. அவர் வெளிநாட்டில் இருந்த போது, அதிர்ஷ்ட தேவதை எப்போதுமே அவர் அருகில் தான் இருந்தாள். இந்த வீட்டுக்கு அவர் வந்த பிறகு செய்கின்ற காரியங்கள் எல்லாமே தோல்வியில்தான் முடிகிறது. யாராவது சூனியம் செய்து இந்த வீட்டுக்குள் புதைத்திருப்பார்கள் என்று தான் நாங்கள் நினைக்கிறோம்.”

அவர் அழைப்பின் பேரில் அவரது வீட்டிற்குச் சென்று பார்த்தேன். விஷயம் புரிந்தது.

“சூனியமும் இல்லை, மந்திரதந்திரங்களும் இல்லை. நீங்கள் தென்மேற்குப் பக்கத்தில் சமையல் அறையை வைத்திருப்பதுதான், இந்தப் பிரச்சினைக்குக் காரணம். அதாவது தென்மேற்குப் பக்கத்தில் நெருப்பு பற்ற வைப்பதுதான் உங்கள் கணவருக்கு தோல்வி ஏற்படுவதற்குக் காரணம்” என்று அவர்களிடம் விளக்கிச் சொன்னேன்.

தென்மேற்குப் பகுதியில் எவரும் சமையல் அறையை வைக்கக் கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

தென்மேற்கு என்பது உலோகப் பொருட்களுக்கு சொந்தமான பகுதியாகும். அந்தப் பகுதியில் அக்னியை வைத்தால் ஏற்படும் விளைவுகளும் விபரீதமாகவே இருக்கும். அக்னி என்றால் தீ. தென்மேற்குப் பகுதியில் தீ எரிந்து கொண்டிருந்தால் உங்கள் வாழ்க்கையும் எரிந்து கெண்டுதான் இருக்கும்.

குறிப்பாக, அந்த வீட்டின் குடும்பத் தலைவனுக்கு அது ஆபத்தை விளைவிக்கும்.

எனவே, குடும்பத்தலைவனுக்கு அடிக்கடி பிரச்சினைகள் வருகிறதென்றால், உங்கள் வீட்டில் சமையல் அறை எந்தப் பகுதியில் இருக்கிறது என்று பாருங்கள்.

கண்டிப்பாக அது தென்மேற்குப் பக்கத்தில்தான் இருக்கும். தென்மேற்குப் பகுதியில் சமையல் அறை இருந்த வீட்டில் வசித்து வந்த குடும்பத் தலைவர் ஒருவர் திடீரென்று இறந்துவிட்டார்.

தென்மேற்குப் பகுதியில் சமையல் அறை இருந்த ஒரு வீட்டிற்கு நான் சென்ற போது, அந்த வீட்டில் இருந்த பெண்மணி இப்படிச் சொன்னார்.

“ஒருநாள் இரண்டு, மூன்று பேர் சேர்ந்து வந்து எனது கணவரைக் கொலை செய்யப்பார்த்தார்கள். நான் கூச்சல் போட்டதினால் அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் ஓடி வந்ததும் கொலை செய்ய வந்தவர்களும் ஓடிப்போய் விட்டார்கள்.

இந்த விஷயத்தில் நீங்களும் கவனமாக இருக்க வேண்டும்.

உங்கள் வீட்டின் தென்மேற்குப் பக்கத்தில் அடுப்பு இருந்தால் உடனடியாகவே அங்கிருந்து அதை அப்புறப்படுத்தி வேறு ஒரு பக்கத்திற்கு எடுத்துச் செல்லுங்கள். அதேபோல், பூஜை அறையையும் இந்தப் பகுதியில் வைக்காதீர்கள்.

காரணம், அதிலும் நெருப்பு இருக்கிறதுதானே!

நெருப்போடு சம்பந்தப்பட்ட எந்த ஒரு விசயத்தையும் தென்மேற்குப் பகுதியில் வைக்காதீர்கள்.

மேலும் விபரங்கள் தேவை என்றால் 0114949124 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.