புத் 64 இல. 12

கர வருடம் பங்குனி மாதம் 05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 25

SUNDAY MARCH 18  2012

 

உள்நாட்டில் சக்திய+ட்டும் பாலமாக மாறியுள்ள RED; மக்களிடம் அமோக வரவேற்பு

உள்நாட்டில் சக்திய+ட்டும் பாலமாக மாறியுள்ள RED; மக்களிடம் அமோக வரவேற்பு

அனைத்தும் இயற்கை மூலச்சேர்க்கை உள்ளடங்கிய ஒரு சக்தியூட்டும் பானமான RED (Revitalizing Exertion Drink மீள் ஆற்றலுடன் உற்சாகமூட்டும் பானம்) உள்நாட்டுச் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட சில காலப்பகுதிக்குள்ளாகவே சக்தியூட்டும் பானவகைச் சந்தையில் அனைவர் மத்தியிலும் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

பிரதானமாக பழச்சாறுகளை உள்ளடக்கியவாறு அதிக இயற்கையான மூலக்கலவைகளையும், ஏனைய சக்தியூட்டும் பானங்கள் பலவற்றில் காணப்படுகின்ற செயற்கையான நிறமூட்டிகள் மற்றும் உட்சேர்வைகளினால் ஏற்படக்கூடிய ஆபத்தான பக்க விளைவுகளை தவிர்க்கும் ஆற்றல் மிக்க மிக உயர் தரத்திலான ஒரு உட்சேர்வையான Korean ginseng இனையும் RED பானம் உள்ளடக்கியுள்ளதுடன், PC Pharma நிறுவனம் நாடளாவிய ரீதியிலுள்ள தனது வலையமைப்பினூடாக இதனை சந்தைப்படுத்தி விநியோகித்து வருகின்றது.

அத்துடன் அஜீரணம் மற்றும் ஏனைய பாதகமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடிய trans-fat எனப்படும் ஆபத்தான கொழும்புச் சேர்வை அற்றதாக இருப்பதுடன், பிரதானமாக fructose சர்க்கரை மூலமாகவே சக்தியை அளிக்கின்றது.

RED பானம் கொரிய நாட்டில் உற்பத்திச் செய்யப்பட்டு பொதியிடப்படுகின்றது. சர்வதேச ஆரோக்கிய மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு இணையாக RED உற்பத்தி செய்யப்படுவதுடன், உற்பத்தித் தரம் மற்றும் பொதியிடலுக்காக கொரிய உணவு மற்றும் மருந்து வகை நிர்வாக அதிகார சபையின் அங்கீகாரத்தையும், சான்றளிப்பையும் பெற்றுள்ளது. PCH Holdings Limited குழுமத்தின் முற்றுமுழுதான உரிமத்தின் கீழான துணை நிறுவனங்களில் ஒன்றான PC Pharma நிறுவனம் RED பானத்தின் சந்தைப்படுத்தல் ஏகபோக உரிமையைக் கொண்டுள்ளது. 

PC Pharma நிறுவனம் இலங்கையில் மருந்து வகைகள், உயிரியல் மருத்துவ சாதனங்கள், மருத்துவ மற்றும் ஆரோக்கிய அடிப்படையிலான உணவு வகைகள் மற்றும் விசேட மருத்துவ உற்பத்திகளை இலங்கையில் சந்தைப்படுத்தி வருவதுடன், உலகளாவிய ரீதியில் இருந்து பெறப்படுகின்ற பல் வகைப்பட்ட உற்பத்திகளையும் அதன் வழங்கல்கள் உள்ளடக்கியுள்ளன.

ISO 9001:2000 தர நிர்ணய சான்றுபடுத்தலைப் பெற்றுள்ள PC நிறுவனம் ISO இடமிருந்து இந்த அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்ட இலங்கையிலுள்ள முதலாவது மருந்து வகை இறக்குமதியாளராகவும் திகழ்கின்றது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.