புத் 64 இல. 12

கர வருடம் பங்குனி மாதம் 05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 25

SUNDAY MARCH 18  2012

 

ஜனநாயக நாடொன்றின் மீது ஏன் இந்தக் கொலை வெறி?

எத்தகைய சவால்கள் வந்தாலும் எதிர்கொள்ள முழு நாடும் தயார் !

எட்டப்பன் வேலையை UNP, JVP, TNA கைவிட வேண்டும்; முழு நாட்டு மக்களும் அரசுடன்!

இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டுள்ள யுத்தக் குற்றப் பிரேரணை தொடர்பாக எத்தகைய தீர்வு வந்தாலும் அவை அனைத்திற்கும் முகங்கொடுத்து அவற்றை எதிர்கொண்டு வெற்றி கொள்ள அரசாங்கம் தயாராகவே உள்ளது. அரசாங்கத்துடன் முழுநாட்டு மக்களும் ஒன்றிணைந்துள்ளனர். அதனால் சாவல்களை எதிர்கொள்வது சுலபமானதொரு காரியம் என்று அரசியல் தலைவர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

விவரம் »

சனல் - 4 வீடியோ போலி என்பது உறுதி ;

அரசிற்கு அபகீர்த்தி ஏற்படுத்த முனைந்த சதிமுயற்சி அம்பலம்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய

சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத் தினால், இலங்கையின் கொலைக்களங்கள் பாகம் 2 ‘தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள்’ என்ற பெயருடன் வெளியிடப் பட்ட காணொளி போலியானது என இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தக் காணொளியானது இலங்கை அரசிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் நோக்கில், திட்டமிட்ட முறையிலேயே வெளியிடப்பட்டுள்ளது.

விவரம் »

‘இடிதாங்கி’ பத்திரிகை அறிமுக விழா கொழும்பு சுகததாச ஸ்போர்ட்ஸ் ஹோட்ட லில் நடைபெற்றது. பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்காவிடமிருந்து பிரதியை பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் பெறுவதை படத்தில் காணலாம். சர்வதேச இந்து மதகுரு பீடாதிபதி ஸ்ரீஐயப்பதாஸ் சாம்பசிவ சிவச்சாரியார், புரவலர் ஹாசிம் உமர், ஆசிரியர் மொழிவாணன் ஆகியோரைப் படத்தில் காணலாம்.
(படம்: ஏ. எஸ். எம். இர்ஷாத்)
 

இலங்கைக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டில் துருக்கி!

ஜனாதிபதிக்கு அஸ்வர் எம்.பி. விளக்கம்

நேட்டோ நாடுகளின் உறுப்பு நாடான துருக்கி என்றும் இலங்கைக்கு ஆதரவு தெரி வித்து வந்துள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ஏ. எச். எம். அஸ்வர் தினகரன் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார். இது குறித்து

விவரம் »

சுயநல அரசியலுக்காக இன விரிசலுக்கு வித்திட வேண்டாம்

அமிர்தலிங்கத்திற்கு மேயர் சாட்டை

பழுதடைந்த மின் குமிழ்கள் மாற்றுவதிலும் இன விகிதா சாரத்தை பேண வேண்டுமா? எங்கு இருள் சூழ்ந்து காணப்படுகின்றதோ அங்கு மின் குமிழ்கள் பொருத் தப்படும். இதில் எவ்வாறு பாகுபாடு காட்ட முடியும்? என்னைப் பல இடங்களில் புகழ்ந்து பாடிய அமிர்தலிங்கம் தற்போது

விவரம் »

இனப்பிரச்சினை தீர்வுக்கு ஐ.நா.விடம் உறுதிப்பாட்டைக் கோரும் TNA

அரசை வலியுறுத்துமாறு சம்பந்தன் வேண்டுதல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தேசிய இனப் பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை இலங்கை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்பதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை வலியுறுத்த வேண்டுமென சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

விவரம் »

பிரதேச அபிவிருத்தியில் தமிழ்ப்பகுதி புறக்கணிப்பு

கல்முனை மேயர் மீது குற்றச்சாட்டு

பிரதேச அபிவிருத்தி நட வடிக்கைகளின் போது கல் முனை மாநகர மேயர் சிராஸ் மீரா சாஹிப் கல்முனை தமி ழ்ப் பிரதேசங்களை புறக்கணித்து வருவதாக மாநகர சபையின் எதிர்க் கட்சித் தலைவர் ஏ. அமிர்தலிங்கம் குற்றம் சாட் டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கல்முனை மாநகர சபையில் கட ந்த காலங்களில் பதவி வகித்த மேயர் கள் தமிழ்ப் பிரதேசத்தின் அபிவி ருத்தி நடவடிக்கைளில் நியாய மாக நடந்துகொண்டனர்.

விவரம் »

அகம் மலரட்டும்; ஞான விசாரம்

சுவாமி சிவயோகானந்தாவின் இருவேறு சமய நிகழ்வுகள்

இலங்கை சின்மயா மிஷன், சைவ மங்கையர் கழகத்துடன் இணைந்து வழங்கும் “அகம் மலரட்டும்” நிகழ்வு எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை தினமும் மாலை 6.30 முதல் 8.00 மணி வரை வெள்ளவத்தை ருத்ரா மாவத்தை சைவ மங்கையர் கழக மண்டபத்தில் நடைபெறும்.

விவரம் »

புரவலர் பூங்காவில் அமீர் அலியின் நூல் இன்று கொழும்பில் வெளியீட்டு விழா

எழுத்தாளர்களுக்கு கரம் கொடுத்து இன்பத் தமிழ் வளர்க்கும் புரவலர் புத்தகப் பூங்காவின் 28வது மலர் இன்று 18ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப. 4.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. கவிஞர் கிண்ணியா அமீர் அலியின் ‘மனையாளும் மறுபதிப்பும்’ எனும் கவி தைத் தொகுப்பு நூலே புரவலர் பூங்காவின் 28வது வெளியீடாகும்.

விவரம் »

 

Advertisements______________________

Other links_________________________

www.apiwenuwenapi.co.uk



இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.