புத் 64 இல. 12

கர வருடம் பங்குனி மாதம் 05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 25

SUNDAY MARCH 18  2012

 
பொல்காவலை அல் -அக்ஸா மகா வித்தியாலயத்தின் பொன்விழா

பொல்காவலை அல் -அக்ஸா மகா வித்தியாலயத்தின் பொன்விழா

பாடசாலையின் வரலாறு

வடமேல் மாகாண குருநாகல் மாவட்டத்தில் தம்பதெனிய ஹத்பத்துவ உடபொல ஓத்தொட கோரளையில் (குடா ஓயா) சிற்றாற்றிற்கும், மகா ஓயா நதிக்கும், யோகமுவகந்த குன்றுக்கும் மத்தியில் பொல்கஹவெல நகரத்திற்கு அருகே ஒருலியத்தை கிராமம் எழிலாய் அமைந்துள்ளது.

பொல்கஹவெலயில் தமிழ், முஸ்லிம்களின் கல்விக்காக கவிஞர் ஏ. இக்பாலின் ‘மறுமலர்ச்சித் தந்தை’ எனும் நூலில் தேசிய வீரர் அறிஞர் சித்திலெப்பை அவர்களால் பாடசாலை ஒன்றை ஆரம்பித்ததாக சான்று கூறப்படுகின்றது. அந்தப் பாடசாலை இப்பகுதியில் பல இடங்களுக்கு இடமாற்றப்பட்ட போதிலும் இன்று சீ.சீ. தமிழ் வித்தியாலயமாக பொல்கஹவெலை நகரத்தில் சரித்திரம் படைத்து தலை நிமிர்ந்து நிற்கிறது.

ஒருலியத்தை கிராமத்தைச் சேர்ந்த சிறார்கள் அதிகமானோர் சீ.சீ. தமிழ் பாடசாலைக்கும், ஒரு சிலர் மடலகமையில் அமைந்துள்ள அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கும் சென்று கல்வி கற்று வந்தனர். எனினும் இப்பாடசாலைகள் இரண்டும் கிராமத்துக்குத் தூர அமைந்திருந்ததனால் எமது சிறார்கள் அங்கு சென்று கல்வி கற்பதில் ஊக்கம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதனால் 1961 ம் ஆண்டு காலப்பகுதியி;ல் ஒருலி யத்தை கிராமத்தின் முதல் ஆசிரியரான மர்ஹ{ம் அல்ஹாஜ் ஏ.எம். மொஹிடீன் அவர்களும் மர்ஹ{ம் ஏ.ஆர். அப்துல் மஜPத், மர்ஹ{ம் எம்.சீ.எம். nஜ/பர், மர்ஹ{ம் ஏ.எச்.எம். அபுல்ஹசன் ஆகியோர் இங்கு பாடசாலை ஒன்றை அமைக்க வேண்டியதன் அவசி யத்தை ஊர் மக்களுக்கு எடுத்துரைத்தனர்.

அதற்கான முயற்சிக்காக சேர். ராசிக் பரீத் அவர்களின் அகில இலங்கை சோனகர் சங்க பொல்கஹவெல கிளை உறுப்பினர்களினதும் ஊர் மக்களினதும் அனுசரனையுடன் இப்பணி முன்னெடுக்கப்பட்டது. அதன்படி அன்றைய ஆளும் கட்சி பொல்கஹவெல தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஸ்டீவன் சமரக்கொடியின் உதவியைக் கொண்டு பாடசாலையை அமைக்க தீர்மானித்தனர். இந்நிலையில் ஒருலியத்தை முஹியத்தீன் ஜ{ம்மாப் பெரிய பள்ளிவாசலை அமைக்க மர்ஹ{ம் சின்ன மரிக்கார் ஐசிலெப்பை அவர்களால் வழங்கப்பட்ட காணியில், பள்ளிவாசலுக்கு அருகாமையில் அமைக்கப்பட்டிருந்த குர்ஆன்மத்ரஸாவில் பாடசாலையை ஆரம்பிக்க அவரின் மகனாராகிய அன்றைய பள்ளி பிரதம நம்பிக்கையாளர் மர்ஹ{ம் ஐ.எல். நாகூர் அடுமை (S.A.N.A. காலித்) ஒப்புதலை வழங்கினார்.

அதையடுத்து 1962 ம் ஆண்டு ஜனவரி 02 ந் திகதி கு/ஒருலியத்த முஸ்லிம் வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வித்தியாலயத்தை ஆரம்பித்துவைக்க வித்தியாதரிசி ஏ.எச்.எஸ். மொஹமட் சமுகமளித்தார். இப்பாடசாலை முதல் அதிபராக ய+.எல்.எஸ். ஹமீட் நியமிக்கப்பட்ட போதும் அவர் சமுகமளிக்காததால், அப்பொறுப்பை எமது கிராமத்தைச்சேர்ந்த அல்ஹாஜ் எம்.Nஜ. நாகூர் அடுமை (Nஜ.எம். பளீல்) அவர்களிடம் வித்தியாதரிசி சம்பவத்திரட்டுப் புத்தகத்தில் பதிந்து பாடசாலைப் பொறுப்பை கையளித்தார். அன்றைய தினம் முதலாம் வகுப்புக்கு ஆண்கள் 08 பேரும் பெண்கள் 17 பேரும் ஆக மொத்தம் 25 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இவர்களுள் முதல் மாணவராக அல்ஹாஜ் ஏ.எம்.எம். i'ப்தீன் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

SEATED L TO R : MRS. M.A.C. SAYEETHA, MRS. M. MAKSOORA, MRS. A.I. HILAFARJAN BEEBI, MRS. M.S.S. NIHARA, MRS. N.A.N. ROSANI (VP), MR. M.T.M. NAMSEER (PRINCIPAL), MR. M.I.M. IKRAM (VP), MR. M.S.M. LAFIR, MR. J.M. ASMY, MR. A.J.M. AKIL and MR. A.R.L.S.P. KOYA LEBBE,
STANDING ROW L TO R : MRS. M.F.F. FARSANA, MRS. M.I.S. RAWZAN, MRS. M.I. JEZEEMA UMMA, MRS. W.W.P. SHAMALI, MRS. H.M.A.K. HERATH., MRS. M.Y.F. JUMANIYA, MRS. A.L.F RAMSIYA, MRS. M.S. HAMEEDHA BANU, MRS. H.J. RISANA BEGUM, MISS. K. DOOLUWELA GEDARA, MRS. K. JAYALATCHUMI, MISS. M.S. ADEEMA, MRS. M.N.F. NUSRINA, MISS. L.P. NALANI WICKRAMASINGE, MISS. M.M.F. NAFEESA and MRS. A.G.S. RIHANA.
(ABSENTEE: MRS. K.A.T.L. AMARASENA and MRS. V.A. VITHANAGE.)

ஜனவரி 03 ந் திகதி அதிபராக நியமனம் பெற்ற ய+.எல்.எஸ். ஹமீட் தனது பாடசாலை நிருவாகப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டதுடன் 5ஆம் திகதி இடமாற்றமும் பெற்றுச்;;சென்றார்.1962 ஆம் ஆண்டு ஜனவரி 05 ந் திகதி வெலிகாமத்தைச் சேர்ந்த ஜனாப் எஸ்.ஏ.எம். மௌலானா தலைமையாசிரி யராக கடமை ஏற்றார்.

பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட முதல் வருடத்திலேயே மீலாத் விழா விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. 1963 ம் ஆண்டு ஏ.எல்.எம். ராசிக் உதவி யாசிரியராக நியமிக்கப்பட்டார். இவரே பாடசாலை கீதத்தை இயற்றியவராவர். இக்காலப்பகுதியில் பாடசாலை 8 ஆம் ஆண்டு வரை தரம் உயர்த்தப்பட்டது. பாடசாலை மாணவர்கள் கமர், சம்ஸ், நுஜ{ம் இல்லங்களாக பிரிக்கப்பட்டனர்.

இன்னும் இப்பெயர்களிலேயே இவ்வில்லங்கள் இயங்கி வருவது சிறப்பம்சமாகும். அத்துடன் ‘அஸ்-ஸாதிக்’ என்னும் பெயரில் நூல் நிலையம் ஆரம்பிக்கப்பட்டு மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கம் ஏற்படுத்தப்பட்டது. அல்ஹாஜ் எம்.Nஜ. நாகூர் அடுமை(Nஜ.எம். பளீல்) ஆசிரியர் அவர்களால் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. 1968.12.31 ந் திகதி தலைமையாசிரியர் ஜனாப் எஸ்.ஏ.எம். மௌலானா அவர்கள் மாற்றலாகிச் சென்றார்கள். இவரின் சேவை பாராட்டத்தக்கது. 1968.01.01 ம் திகதி தொடக்கம் அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஜனாப் எம்.எம். மக்கீன் அவர்கள் பாடசாலையின் தலைமையாசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

1970 ம் ஆண்டு ஜ{லை முதலாம் திகதி தொடக்கம் அல்ஹாஜ் ஏ.எல். செய்னுல் ஆப்தீன் அவர்கள் தலைமையாசிரியராக பொறுப்பேற்றார். 1970 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட மக்கள் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் 70x20 அளவு கொண்ட புதிய கட்டிடம் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டது. அவர்களாலேயே கு/ஒருலியத்த முஸ்லிம் வித்தியாலயத்தை, கு/அல் அக்ஸா முஸ்லிம் வித்தியாலயமாக பெயர் மாற்றம் பெறச்செய்யப்பட்டது. இக்காலகட்டத்தில் கல்விப் பொதுத் தராதர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. பாடசாலைச் சின்னமும் இவரின் காலத்திலேயே ஏற்படுத்தப்பட்டது.

அதையடுத்து 1975.07.01 ம் திகதி தொடக்கம் ஜனாப் ஏ.எல்.எம். மஹ்ரூப் அவர்கள் அதிபராக நியமிக்கப்பட்டு 1977.10.14 ம் திகதி இடமாற்றலாகிச் சென்றார்.

பாடசாலைக் காணியையும், அதிபர் இல்லத்தையும் (தற்காலிகம்) 2000.09.22 ந் திகதி உத்தியோகபு+ர்வமாக கையளிக்கும் விழாவின்போது எமது பாடசாலை மஹா வித்தியாலயமாக உயர்த்தப்பட்டு, க.பொ.த. (உ/த) கலை, வர்த்தக வகுப்புக்கள் நடாத்தவும் அனுமதி வழங்கப்பட்டது. இவ்விழா அல் அக்ஸாவின் சரித்திரத்தில் நடைபெற்ற மிகப்பெறும் விழாவாகும்.

2004.10.25 ந் திகதி எம்.டீ.எம். நம்சீர் B.Ed. (அதிபர் தரம்-ஐ ) அவர்கள் அதிபராக பாடசாலைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இவரது நிருவாகக் காலத்தின் போது பாடசாலைக் கல்விச் செயற்பாடுகள், இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் மற்றுமன்றி பௌதீக வள ரீதியாகவும் அதிக வளர்ச்சி கண்டுள்ளது. இவற்றில் இருமாடிக் கட்டிடங்கள், கணணி அறை (25x20), விஞ்ஞான ஆய்வு கூடம் (25x50), பல்லூடகஅறை (25x20), வாசிகசாலை (25x20), மலசலகூடத் தொகுதி,மலசலகூடங்கள், சிறுவர் பூங்கா, பாதை செப்பனிடல், சிற்றுண்டிச்சாலை, விளையாட்டு மைதானம் செப்பனிடல், பாடசாலை உள்பாதை, வயல் கொள்வனவு, நுழைவாயில் மாற்றப்படல் போன்ற பௌதீக வளங்கள் அதிகமாக பெற்றுக் கொள்ளப்பட்ட காலம் இவரின் காலம் என்றால் மிகையாகாது.

அண்மைக் காலங்களில் அல் அக்ஸா மஹா வித்தியாலயம் வடமேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு மத்தியில் பல சாதனைகளை நிலைநாட்டி வருகின்றது. மாணவர்களுக்கான மைதான வசதி குறைவாக இருந்த போதிலும் இல்ல விளையாட்டு போட்டிகள் நடைபெற்று கோட்ட மற்றும் வலய ரீதியான விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றியீட்டியும் வருகின்றது.

இணைப்பாடவிதானச் செயற்பாடுகளான மீலாத்தின போட்டிகளிலும், தமிழ்மொழித் தின போட்டிகளிலும் மாகாண, மாவட்ட ரீதியில் நீண்டகாலமாக முன்னணியில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். இவை தவிர வானொலி அறிவுக் களஞ்சியப் போட்டி, விஞ்ஞான, வர்த்தக, சமூகக்கல்வி, சித்திர, இலக்கிய, கலாச்சார, மனைப்பொருளியல் போட்டிகளில் வெற்றியீட்டியமையும், க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் அதிக மாணவர்கள் உயர்தரம் தகுதி யானதும், உயர்தர மாணவர்கள் சிறந்த சித்திகளைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அல் அக்ஸா என்றால் ஆரம்பம் முதலே 5 ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்று வந்தது குறிப்பிடத்தக்கதாயினும், இவரின் காலத்திலேயே 2010 ம் ஆண்டு எம்.ஏ.எம். அஸீன் என்ற மாணவன் 182 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று, தற்போது றோயல் கல்லூரியில் கற்றுக் கொண்டிருக்கின்றார். 2011 ம் ஆண்டு நடைபெற்ற 5 ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் எம்.எம்.எஸ். சைனப் சுல்தானா என்ற மாணவி 193 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியாக மூன்றாம் இடத்தையும், குருநா கல் மாவட்டத்தில் தமிழ், சிங்கள மொழிகளில் முதலிடம் பெற்று பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமைத் தேடித்தந்தது மட்டுமல்லாது ஜப்பான் செல்வதற்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

பொல்கஹவெல ஓருலியத்த அல் அக்ஸா எப்போதும் ஊரோடு ஒன்றாக உறவாடி நெருக்கமான பிணைப்பை கொண்டுள்ளமை அன்று தொட்டு இன்றுவரை உள்ள சிறப்பம்சமாகும். இதற்குக் காரணம் பொல்கஹவெல நகருக்கு அருகாமையிலும் ஓருலியத்த ஊருக்கு மத்தியிலும் பாடசாலை அமைந்துள்ளதாகும். இப்பாடசாலையின் வளர்ச்சிக்கு எதிர்கால தேவைகள் பல உள்ளன. அவற்றுள் பாடசாலைக் கட்டிடங்கள், விளையாட்டு மைதான புனரமைப்பு, மனையியற் கூடம், மாணவிகளுக்கான தொழுகை அறை வசதி, பாடசாலையைச் சுற்றி மதிலமைத்தல், ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்திச் செய்தல் போன்ற விடயங்கள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டியவைகளாக உள்ளன.

ஓருலியத்த கல்வி அபிவிருத்திச் சங்கத்தினால் பாடசாலை மைதானத்துடன் உள்ள ½ ஏக்கர் அளவிலான வயல் காணியை பெற்றுத்தர பெற்றார், பழைய மாணவர்கள,; நலன்விரும்பிகள் ஆகியோரின் உதவிகளைப் பெற்று பாடசாலையின் வளமாக அன்பளிப்புச் செய்தது பாடசாலையின் முன்னேற்றத்திற்கு ஓரு மைல்க்கல்லாகும். இந்நிலையில் இக்குழுவினரால் பெற்றுத்தந்த வயல்க் காணிக்கு அருகாமையில் எமது பாடசாலையின் உப அதிபர் அல்ஹாஜ் M.Y.M. இக்ரான் அவர்களின் குடும்பத்திற்கு சொந்தமான ½ ஏக்கர் காணியை பெறும் நோக்கோடு அக்குடுபத்தினருடன் பேச்சுவார்த்தை நடாத்தி குறிப்பிட்ட காலத்திற்குள் பணத்தைக் கொடுத்து வயல்க் காணியை எடுப்பதற்கு முற்பணம் செலுத்தியுள்ளதோடு அதற்கு தேவையான மீதிப் பணத்தை சேகரித்துக் கொடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

சஞ்சிகைக் குழு


 

அதிபரின் இதயத்திலிருந்து…

AL-HAJ.M.T.M NAMZIR

பொல்கஹவெலயில் எமது வித்தியாலயம் கடந்த ஜனவரி 2 ஆம் திகதி ஐம்பதாண்டு பு+ர்த்தியை அடைந்து இன்று வரை புளகாங்கிதத்துடன் கொண்டாடுகிறது. எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறும் பொன்விழா நிகழ்ச்சியையொட்டி மல ரப்போகும் அக்ஸா மலருக்கு தலைவராக இருந்து ஆசிச் செய்தி வழங்க வாய்ப்பளித்த வல்ல நாயன் அல்லாஹ்வுக்கு நன்றி கூறுகின்றேன். 1962ம் ஆண்டு இருபத்தைந்து மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட அல் அக்ஸா இன்று 1 தொ டக்கம் 13 வரையிலான கலை வர்த்தக பிரிவுக ளோடு ஒரு விருட்சமாய் கல்வித்துறையிலும் இணை பாடவிதானத் துறையிலும் விளையாட்டுத் துறையிலும் சிறந்த பல முன்னேற்றங்களை பெற்று குருநாகல் மாவட்டத்திலே சிறந்த பாடசாலையாக தலை நிமிர்ந்து நிற்பதைக்கண்டு பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

அல் அக்ஸாவின் வளர்ச்சிக்கு பெற்றாராக பழைய மாணவராக அதிபராக பல கட்டங்களிலி ருந்தும் உதவ என்னால் முடிந்ததை பெருமை யுடன் நினைவு கூறுவதோடு அல்லாஹ்விற்கும் நன்றி கூறுகிறேன்.

அல்ஹம்துலில்லாஹ்

தேசிய, மாகாண ரீதியாக சாதனை படைத்தவர்

2011 ஆம் ஆண்டு 5 ஆம் தரபுலமைப் பரீட்சைப் பரீட்சையில் 193 புள்ளிகளைப் பெற்று அகில இலங் கைரீதியில் மூன்றாம் இடத்தை யும்,மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தையும் பெற்ற M.S.S. செய்னப் சுல்தானா

பாடசாலை அபிவிருத்திச்சங்க செயலாளர் ஜனாப் N.A.M. சலீம் அவர்களின் வாழ்த்துச் செய்தி

வடமேல் மாகாணத்தின் குருநாகல் பெரும்பாகத்தில் உடப்பொல ஓத்தொட்ட கோரளையில் குடா ஒயா என்னும் சிற்றாறும் மகா ஒயா நதியும் வளைந்து ஓடுகின்ற யோக்கமாகந்த என்ற மலை அரண் செய்கின்ற பொல்கஹவெல பிரதேசத்தில் ஓருலியத்த கிராமம் அமைந்துள்ளது.

இந்த கிராமத்தில் வாழ்ந்து மறைந்த கல்லூட்டு ஐய்ஸி லெவ்வையின் மகன் மர்ஹ{ம் S.A. நாகூர் அடுமை காலித் அவர்களால் அன்பளிப்புச் செய்த காணியில் 1962.01.02.ஆம் திகதி ஓருலியத்த முஸ்லிம் வித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டது. தற்பொழுது அல் அக்ஸா மஹா வித்தியாலயம் என்ற பெயருடன் தலை நிமிர்ந்து, ஒளி வீசி பரவிக்கொண்டிருக்கின்றது.

ஐம்பது வயதை தாங்கி பொன் விழாக்காணும் பெருமையை ஏற்படுத்திக் கொடுத்த ஏக இறைவன் அல்லாஹ்வுக்கு முதற்கண் எனது நன்றியை தெரிவித்துக்கொள்வதோடு அதற்கடுத்து மர்ஹ{ம் ளு..யு. நாகூர் அடுமை காலித் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இந்த ஐம்பது வருட காலத்தில் பல துறைகளிலும் எமது வித்தியாலயம் பல வளர்ச்சிகளைக் கண்டு இமயமலை முகட்டையே தொட்டு நிற்கின்றது. கடைசி ஐந்து வருட காலத்தில் அல் அக்ஸா மஹா வித்தியாலயம் பல துறைகளிலும் அடைந்துள்ள வளர்ச்சிக்கும், பௌதீக வள முன்னேற்றங்களுக்கும் முக்கிய காரணகர்த்தாவாக திகழ்பவர் வித்தியாலய அதிபர் கௌரவ ஜனாப் M.T.M. நம்சீர் அவர்களே என்பதை நினைவு கூர்ந்து பார்க்கும் போது மிகுந்த மகிழ்வையே தருகின்றது. அன்னாருக்கும், அன் னாரின் உதவி அதிபர்கள் மற்றும் ஆசிரிய ஆசிரி யைக் குழுவினருக்கும் எனது நன்றி உரித்தா கட்டும். இத்துடன் எமது ஊர் மக்கள் அனைவரும் பொன்விழா மகத்தான வரலாற்றுப்பு+ர்வ வெற்றிக்கு இறையருள் நிறைக!

பொன்விழா சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்!

எல்லோருக்கும் என் இதய வாழ்த்துக்கள்!

ஒருலியத்த கல்வி அபிவிருத்திச் சங்க செயலாளரின் ஆசிச் செய்தி

ஓலைக் கட்டிடமாகத் திகழ்ந்த ஓருலியத்தை அரசினர் கலவன் பாடசாலை ஓரிரு கட்டடங்க ளாக பல காலம் திகழ்ந்து மாணவர்கள் மைதானமின்றி தவித்த கால கட்டத்தில் தற்போதைய அதிபர் ஜனாப் M.T.M. நம்சீர் அவர்களது உழைப்பால் பல கட்டிடங்கள் உருவாகி அவை மாடிக் கட்டிடங்களாக மாறி, மிதிக்க நிலமற்ற நிலை மாறி மைதானமும் சிறுவர் பு+ங்காக்களும் உருவாகி, பௌதிக வளங்கள் நிறைந்ததாக காட்சி தருகின்றது. தொடங்கிய காலம் தொட்டே கல்வியில் அபிவிருத்தி கண்ட அல் அக்'h வட்டார, மாவட்ட, மாகாண மட்டத்தில் முதலிடம் கண்டு தற்போதைய அதிபர் காலத்தில் தேசிய மட்டத்திலும் தனது தடத்தைப்பதித்துள்ளது என்பது சகலரும் அறிந்த உண்மையே!

கல்வித்துறையிலும் விளையாட்டுத் துறையிலும் அபிவிருத்தி அடைய தடையாக இருந்த காணிப் பிரச்சினையை தீர்க்க தற்போதைய அதிபர் அவர்களுடன் சேர்ந்து இதற்காக உழைக்க எமது சங்கத்திற்கு சந்தர்ப்பம் கிடைத்தமையை நாம் பெற்ற பெரும் பாக்கியமாகவே கருதுகின்றோம்.

தேசிய மட்டத்தில் தடம் பதித்த எமது கலாசாலை கல்வியிலும் கலையிலும் விளையாட்டிலும் மென்மேலும் உயர்ந்து ஓர் அகிலம் போற்றும் உன்னத நிலையை அடைய வேண்டுமென எமது சங்கத்தின் சார்பில் நல்லாசி கூறுவதுடன் இந்நிலையை அடைய வல்ல நாயன் ‘ அல்லாஹ்’ வைப் பிரார்த்திக்கின்றோம்.

வஸ்ஸலாம் !

பாடசாலை அபிவிருத்திக் குழு செயலாளர் S.Y.M.  சுஹாப்; அவர்களின் வாழ்த்துச் செய்தி

பொல்கஹவெல அல் அக்'h மஹா வித்தியா லம் தனது பொன்விழாவைக் கொண்டாடவிருக்கும் இச்சந்தர்பத்தில் அது தொடர்பாக வெளியிடப்படும் “அக்ஸா மலர்” சஞ்சிகைக்கு எனது வாழ்த்துச் செய்தியை அளிப்பதில் பெறுமகிழ்ச்சி அடை கின்றேன். அல்ஹம்துலில்லாஹ்.

ஐம்மதாண்டு காலமென்பது ஓரு பாடசாலையின் வரலாற்றில் மிகக் குறுகிய ஓரு காலமாகும். ஆயினும் இந்த அரை நூற்றாண்டுக்குள் அல் அக்'h கண்டுள்ள வளர்ச்சி பிரம்மிப்பை யு+ட்டுகிறது. புலமை பிரிசில் பரீட்சைகளில் மாவட்டத்தில் மாத்திரமன்று அகில இலங்கை யிலும் இப்பாடசாலை மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். இக்காலங்களில் இங்கு பயின்ற மாணவர்கள் பலர் இன்று மிக உன்னத நிலை யில் உள்ளனர். இதேபோன்று மற்றும் பல்வேறு துறைகளிலும் அவர்கள் சாதனை படைத்து வருகின்றனர். அகில இலங்கைச் சோனகர் சங்கத்தின் ஓருலியத்தை கிளையினால் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை பெற்றோரின் ஒத்துழைப்பினாலும், காலத்திற்குக்காலம் இங்கு கடமையாற்றிய அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் அயராத முயற்சியினாலும், இவ்வுன்னத நிலை சாத்தியமாக்கப்பட்டுள்ளது.

செயலாளர், பாடசாலை அபிவிருத்திக் குழு.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.