புத் 64 இல. 12

கர வருடம் பங்குனி மாதம் 05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 25

SUNDAY MARCH 18  2012

நியாயம் இல்லையா? நீர் வீழ்ச்சி!

நியாயம் இல்லையா? நீர் வீழ்ச்சி!

சுவாரஸ்யமான விடயங்களை வார இறுதியில் வாசிப் பதற்குத்தான் மனது விரும்பும். உங்களுக்கு மட்டு மல்ல, எல்லோருக்கும்தான். அரசியல், சமூக, பொரு ளாதாரம் என்னவாக இருந்தாலும் சமூக விடயதானங்களில் நமக்கு அக்கறை அதிகம் என்றுதான் சொல்லவேண்டும். விசேடமாக கல்வித்துறையில் நடக்கும் விவகாரங்கள் பற்றிப் பார்த்தால் பக்கம் பக்கமாக எழுதலாம்போல் இருக்கிறது. மேல்கொத்மலை பகுதியில் உள்ள பாட்டுக்கொரு புலவன் பாடசாலையின் விவகாரங்கள் பல உண்டு எனினும் இந்த வாரம் ஹட்டன் பகுதியில் நடந்த அநியாயத்திற்கு இன்னும் நியாம் கிடைக்காதததால் அதனை மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஆற அமர பகுதியைத் தவறாமல் அதுவும் மற்றவருக்குத் தெரியாமல் வாசிக்கத் துடிக்கும் பல நல்லாசிரியர்களுக்கு ஒரு வேண்டுகோள். என்னவெனில், இன்று வெளியாகும் இந்தத் தகவல் எப்படி கசிந்தது என்பதை அறிந்துகொள்ள உங்களுக் கிருக்கும் ஆர்வத்தைப்போல், இந்தச் சம்பவம் இடம்பெற்ற பள்ளியின் ஆசிரியர்களிடம் சொல்லி இதனை நிவர்த்திக்கவும் முயற்சிப்பீர்கள் என்றால் மெத்த உபகாரமாக இருக்கும்.

பாடசாலைகளுக்கு முதலாம் தரத்திற்கு மாணவர்களைச் சேர்க்கும் பணி இப்போது பாடசாலைகளில் கோலாகலமாக நடந்தேறி வருகிறது. சில பாடசாலைகளில் மாணவர்களைச் சேர்த்த மகிழ்ச்சியில் பெற்றோர் வீடு திரும்புகின்றனர். ஆனால், மலையகத்தின் முக்கிய நகரமாக விளங்கும் ஹட்ட னில் உள்ள ஒரு புனிதரின் பெயரைக்கொண்ட பாடசாலை யொன்றில் தமது பிள்ளைகளைச் சேர்த்துவிட்டு சில ஏழைப்பெற்றோர்கள் அழுதுகொண்டு வீடு திரும்பியிரு க்கிறார்கள். தாம் கஷ்டப்பட்டாலும் பிள்ளைகளையாவது கல்வியில் முன்னேற்றிவிடவேண்டும் என்றிருப்பவர்களுக்கு சில கல்வியாளர்கள் ஈவிரக்கமின்றி நடந்துகொள்ளலாமா? என்று கேட்கிறார்கள் பெற்றோர்கள். ஆற அமர அவர்களின் அழுகைக்குக் காரணத்தைக் கேட்டால்.. இப்படிச் சொல்கிறார்கள்.

"முதலில் பாடசாலைக்குப் பிள்ளையைச் சேர்ப்பதற்கு 1500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறினார்கள். ஆனால், பிள்ளையைக் கூட்டிக்கொண்டு சென்றதும் 4036 ரூபாய் கேட்கிறார்கள். பிறகு தங்க நகைகளை அடகு வைத்து செலுத்தினோம்." என்கிறார்கள். இன்னும் சிலர் "மூக்குத்தியைக்கூட அடகு வைத்திட்டேன்" என்று கண் கலங்குகிறார். ஏன் ஐயா இப்படி?

வசதிக்கட்டணம் 36ரூபாய், சேமநலமும் பாதுகாப்பும், சிறுவர் நலனோம்பு, கணணி அறை பராமரிப்பு, சுற்றாடல் மேம்பாட்டு வேலைத் திட்டம், விளையாட்டு மேம்பாட்டு வேலைத்திட்டம் என ஒவ்வொரு வேலைத்திட்டத்திற்கும் ஐநூறு ரூபாய் வீதமும், கட்டட பராமரிப்புக்கெனத் தனியாக 1500 ரூபாயுமாக மொத்தம் 4036 ரூபாய் ஒவ்வொரு பெற்றோரிடமும் வசூலிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தொகை யைச் சேர்த்துக்கொடுத்த ஆசிரியரிடம் கேட்டால் மொத்தத் தொகையைக் கூறுவார். இன்னும் மலசலப் பராமரிப்புக்கென வேறாக 17,500 ரூபாய் என்கிறார்கள். பாடசாலையில் பிள்ளைகளைச் சேர்ப்பதற்குப் பணம் அறவிடக்கூடாது என்று அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்திருந்தும் இப்படி ஏழைப் பெற்றோரைப் பிழிவது நியாயமா? என்பதை நீங்களே உங்கள் மனசாட்சியைக் கேட்டுப்பாருங்கள். உங்கள் பக்கம் நியாயம் இருக்கலாம். ஆனால், இல்லாத கணனி அறையைப் பராமரிக்க எதற்கய்யா பணம்? கணனிக் கல்வி ஆறாம் வகுப்புக்கு மேல்தான் உங்கள் பாட சாலையில் உண்டென்றும் சொல்கிறார்கள். கட்டடம், வகு ப்பறை எல்லாம் ஜோராகத்தானே இருக்கின்றன. இவை எல்லாம் நேரில் பார்த்த தகவல். சரி அடுத்த வாரம் உங்கள் மனதிரங்கி ஏழைப்பெற்றோரிடம் பெற்றுக்கொண்ட அநா வசிய கட்டணத்தை மீளச் செலுத்துகிaர்களா என்பதைப் பொறுத்துருந்து ஆற அமர பார்ப்போம். பாட்டுக்கொரு புலவனைப் பற்றியும் நிறைய விடயங்கள் உண்டு. பொறுத்திருங்கள்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.