புத் 64 இல. 12

கர வருடம் பங்குனி மாதம் 05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 25

SUNDAY MARCH 18  2012

 
மலையகத்தின் இந்து ஆலயங்களின் அபிவிருத்திக்கு ரூ. 136 இலட்சம் நிதி பிரதமரால் பகிர்ந்தளிப்பு

மலையகத்தின் இந்து ஆலயங்களின் அபிவிருத்திக்கு ரூ. 136 இலட்சம் நிதி பிரதமரால் பகிர்ந்தளிப்பு

மலையகத்தின் 11 மாவட்டங்களில் உள்ள சுமார் 136 இந்து ஆலயங்களின் அபிவிருத்திக்காக சமய நிறுவனங்களை மேம்படுத்தலும், ஆன்மீக வளர்ச்சி தொடர்பான செயற்றிட்டத்தின் கீழ் தலா ஒரு இலட்சம் ரூபாய் நிதியை ஆலய அறங்காவலர்கள், கோவில் நிர்வாகிகள் ஆகியோருக்கு பிரதமர் தி.மு. ஜயரத்ன கொழும்பில் வைத்து வழங்கினார்.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வழிகாட்டலில் புத்தசாசனம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் கொழும்பு இராம கிருஷ்ண மிஷன் மண்டபத்தில் இந்நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

பிரமுகர்களின் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வு சிவ ஸ்ரீ கா. வைத்தீஸ்வரக் குருக்களின் வேத பாரா யத்துடனும், திருமதி பவாணி முகுந்தனின் தேவாரத்துடன் ஆரம்பமானது.

வரவேற்புரையை புத்தசாசனம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் அனுராதா விஜேசேகர வழங்கினார்.

கொழும்பு இராம கிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி சர்வரூபானந்தாஜீ மகராஜ், பிரதமர் தி.மு. ஜயரட்னவிற்கு பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்து ஆசி வழங்கி உரையாற்றுகையில்,

இந்து சமய வளர்ச்சிக்கு இவ்வாறு அரசாங்கம் நிதி உதவி வழங்கும் செயல் போற்றுவதற்குரியதே. அதற்கான முயற்சிகளை மேற்கொண்ட இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், புத்தசாசனம், மற்றும் மத அலுவல்கள் அமைச்சர் தி.மு. ஜயரத்ன மற்றும் இப்பணியை செயல்படுத்த உறுதுணையாக இருந்த சகலருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்தை தெரிவித்து கொள்கிறேன்.

ஒரு ஆலயத்தின் வளர்ச்சிக்கு ஒரு இலட்சமென்பது ஒரு சிறு தொகையாகும். ஆகவே இதனை ஆரம்பமாக கருதி இனிவரும் காலங்களிலும் தொடர்ந்து நிதியுதவி வழங்கி இந்து சமய எழுச்சிக்கும், இந்து ஆலயங்களின் வளர்ச்சிக்கும் உதவுமாறு வேண்டி கொள்கிறேன் என்றார்.

இந்த நிதி பகிர்ந்தளிப்பு நிகழ்விற்கு பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம், புத்தசாசனம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சர் எம். கே. டி. எஸ். குணவர்தன நுவரெலியா மாவட்ட செயலாளர் கே. குமாரசிறி, கொழும்பு மாவட்ட மேலதிக செயலாளர் திருமதி சபாலிங்கம், புத்தசாசனம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சின் செயலாளர் கெசியன் ஹேரத், பிரதமரின் அந்தரங்க செயலாளர் திருமதி செனானி லங்கா ஜயரத்ன மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆகியோர் இந்த நிதியுதவி வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டனர். மாவட்ட ரீதியாக பதுளை 20, கண்டி 19, கேகாலை 07, மாத்தளை 10, நுவரெலியா 23, இரத்தினபுரி 30, மொனராகலை 04, புத்தளம் 04, குருநாகல் 03, களுத்துறை 10, கொழும்பு 06, இந்த நிதி பகிர்ந்தளிக்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய பிரதமரும், புத்த சாசனம் மற்றும் மத அலுவல்கள் அமைச்ச ருமான தி.மு. ஜயரத்ன:

உலகிலே மிக பழமையானதும், பாரம்பரிய கலாசார விழுமியங்களைக் கொண்ட இந்து சமயம் மனித நேயம், மனித மேம்பாடு ஆற்றொழுகா சமய கிரியைகளை தன்னகத்தே கொண்டது.

இன்றைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வால் மீகி முனிவராள் எழுதப்பட்ட கம்பராமாயணத்தில் இலங்கை - இந்திய உறவுகளை மிக ஆழமாக சித்தரிக்கப் பட்டுள்ளது.

பெளத்த மதத்தினர் இந்து ஆலயங்களுக்கு சென்று வழிபடுகின்றனர். அதேபோல் இந்து சமயத்தினரும் பெளத்த விகாரைகளுக்கு சென்று வழிபாடு செய்வது நாம் கண்ணால் காணும் உண்மையாகும்.

இலங்கையின் அரச மதமாக பெளத்த மதம் இருக்கிறது. ஆனால் ஏனைய சமயங்களையும் அதன் விழுமியங்களையும் பேணி பாதுகாப்பதில் அரசு என்றும் பின் நின்றதில்லை.

இச் செயல்திட்டத்தின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்தில் 140 இந்து ஆலயங்களுக்கும், வவுனியா மாவட்டத்தில் 90 ஆலயங்களுக்கும் நிதி உதவிகளை வழங்கியுள்ளோம்.

அந்தப் பிரதேசங்களில் சிங்கள தமிழ் மக்கள் மிகவும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருவதை நான் கண்டேன். வரலாற்று காலம் தொட்டே இவ்வாறு சிங்கள, தமிழ் மக்கள் ஒற்றுமையுடனேயே வாழ்ந்துள்ளனர்.

உலகின் எந்தவொரு நாடும் தனி இன மக்களை கொண்டதல்ல. பல்வேறு வகையான இன மக்கள் வாழ்கின்றனர். எனவே அனைவரும் ஒரு இனமாக ஒற்றுமையுடன் வாழ்வது முக்கியமாகும், ஒவ்வொரு மதத்தினரும் ஏனைய மதங்களை மதிக்க வேண்டும். அப்போது தான் நாட்டில் சமய சக வாழ்வு ஏற்படும்.

இந்நாட்டின் அபிவிருத்திக்கு முட்டுக் கட்டையாக இருந்த கொடிய யுத்தம் முடிந்ததன் பின்னர் சிங்கள மக்கள் வடக்கிற்கு செல்கின்றனர். அங்குள்ள மக்கள் தென்பகுதிக்கு வருகின்றனர். இன்று வடக்கிலும், தெற்கிலும் பொருட்கள் ஒரே விலையில் காணப்படுகின்றன.

ஜனாதிபதி அவர்களின் தீர்க்கதரிசன மான ‘மஹிந்த சிந்தனை’யின் செயல் பாட்டின் காரணமாக ஒரே நாடு, ஒரே மக்கள் என்ற எண்ணத்துடன் அனை வரும் இலங்கை தாயின் புதல்வர்கள்.

‘நாம் இலங்கையர்’ என்ற ரீதியில் உலகில் முன் நிற்கிறோம்.

இக்கூட்டத்தில் பொது நிர்வாக உள்நாட்டு அமைச்சர் ஜோன் செனவிரட்ன, பொருளாதார பிரதி அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான முத்து சிவலிங்கம் ஆகியோர் உரையாற்றினார்கள்.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன் நன்றியுரை வழங்கினார்.

உதவிப் பணிப்பாளர் ம. சண்முகநாதன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
 


இலங்கையின் எதிர்கால விளையாட்டு வீரர்களுக்கான தேடல்

இலங்கை முழுவதுமுள்ள பல் வேறு விளையாட்டுக்களில் திறமை வாய்ந்த இளைஞர், யுவதிகளில் விசேட திறமைகளை கொண்ட விளையாட்டு வீர, வீராங்கனைகளைக் கண்டறியும் ஒரு புதிய நிகழ்ச்சித் திட்டமே CSN Future Stars இலங்கையின் விளையாட்டுத் துறையின் விருத்தியை முன்னிட்டு CSN தொலைக்காட்சி அலைவரிசை மூலம் நிகழ்த்தப்படும் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களில், விளையாட்டு திறன்களை கண்டறியும் மாபெரும் ஒரு நிகழ்ச்சித்திட்டமே இது.

CSN Future Stars மூலம் அறிமுகப்படுத்தப்படும் வீரர்கள் சர்வதேச மட்டத்திற்கு அழைத்துச் செல்வதே CSN இன் நோக்கம்.

பல்வேறு கட்டங்களாக நடை பெறவுள்ள இந்நிகழ்ச்சித் திட்டத்தின் முதல் கட்டத்தில் 6 விளையாட்டுகளின் கீழ் வீரர்கள் தெரிவு செய்யப்படுவர்.

1. கரப்பந்தாட்டம்

2. கிரிக்கெட்

3. கால்ப்பந்தாட்டம்

4. கூடைப்பந்தாட்டம்

5. ரகர்

6. கபடி

இலங்கையின் 26 மாவட்டங் களும் இந்நிகழ்ச்சியில் உள்ளடக் கப்படும். ஆரம்ப கட்டமாக மாவட்ட ரீதியில் வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு பின், மாகாண ரீதியில் தெரிவு செய்யப்படுவர்.

இவ்வாறு மாகாண ரீதியில் தெரிவு செய்யப்படும் வீரர்கள் மற் றும் விராங்கனைகளுக்கு, தேசிய ரீதியிலான விளையாட்டு பயிற்று விப்பாளர்கள் உட்பட விளையாட்டு நிபுணர்கள் மூலம் 4 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும்.

மாகாண ரீதியில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வீரர்கள் பின் தேசிய ரீதியில் போட்டிக்கும் உட்படுத்தப்படுவர்.

இதில் தெரிவு செய்யப்படும் அதிசிறந்த வீரர்கள், மேற்கூறப்பட்ட விளையாட்டுக்களுக்கு உரிய விளையாட்டு சம்மேளனத்திடம் ஒப்படைக்கப்படுவர்.

தேசிய ரீதியிலான விளையாட்டு சம்மேளனங்களின் பங்களிப்புடனே CSN Future Stars நிகழ்ச்சித் திட்டம் நடைபெறும்.

விஷேடமாக திறமையான விளையாட்டு வீரர்களைத் தெரிவு செய்வதற்கு அவசியமான தொழில்நுட்ப உதவி மற்றும் விஷேட ஆலோசனைகள் தேசிய விளையாட்டு சம்மேளனத்தின் நிபுணர்கள் மூலமே வழங்கப்படும். அத்துடன் ஒழுங்கமைப்பு நடவடிக்கைகளிலும் அவர்களது பங்களிப்பு எமக்கு கிடைக்கப்பெறும். அதுமட்டுமல்லாது விளையாட்டு அமைச்சு, கல்வி அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவை மன்றம் போன்றவற்றையும் தங்களது முழு ஒத்துழைப்பை இதற்கென வழங்கும்.

CSN Future Stars நிகழ்ச்சி யின் முதல் கட்டம் 2012ம் ஆண்டுக்குள் நடைபெறும். இதன் இரண்டாவது கட்டம் 2012ம் ஆண்டுக்குள் நடைபெறும். இதன் இரண்டாவது கட்டமாக 2013ம் ஆண்டு வேறு 6 விளையாட்டுக் களுக்கான வீரர்களைத் தேடும் நிகழ்ச்சித் திட்டம் நடாத்தப்படும்.

CSN Sports Directory

CSN Sports Directory விளை யாட்டுத் துறையிலுள்ள அனைத்து நிறுவனங்களினதும் நபர்களினதும் தொலைபேசி இலக் கம், முகவரி, ஈமெயில் முகவரி என்பவற்றைக் கொண்ட இலங்கை யின் முதலாவது விளையாட்டு விபரக் கொத்தாகும்.

விளையாட்டுத் துறையினைச் சார்ந்த அனைத்து தரப்பினர் இடையே சிறந்த தொடர்பாடலைக் கட்டியெழுப்புவதே இதன் நோக்க மாகும்.

கீழே குறிப்பிட்டுள்ள சகல துறை களையும் தொடர்பு கொள்வதற்கான விபரங்கள் இத் தொலைபேசி விபரக்கொத்தில் வருடாந்தம் வெளியிடப்படும். அத்துடன் இவை அடங்கிய CD ஒன்றும் வெளி யிடப்படும்.

இவ்விபரக்கொத்திற்கு தேவை யான தகவல்களை வழங்கும்படி விளையாட்டுத் துறையிலுள்ள அனைத்து நபர்களுக்கும் வேண்டு கோள் விடுக்கப்படும்.

www.csn.lk எனும் எமது இணையத்தளத்தில் பிரவேசிப்பதன் மூலம் எந்தவொரு நபரினதும் தகவல்களை பதிவு செய்ய முடியும். இல்லையெனில் CNS Sports Directory 236/1 டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுல்ல எனும் முகவரிக்கு விண்ணப்பம் ஒன்றை அனுப்புவதன் மூலமும் உங்கள் விபரங்களை தொலைபேசி விபரக்கொத்தில் உள்ளடக்க முடியும்.

2012 வருடத்தின் தொலைபேசி விபரக்கொடுத்தை 2012 ஜூன் மாதம் 31ம் திகதி வெளியிடுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

வினிஷி க்ரீடா சவிய

குறைந்த வசதி கொண்ட பாடசாலை கள் மற்றும் பின் தங்கிய பிரதேசங் களிலுள்ள விளையாட்டுக்களை மேம்படுத்துவதற்காக உதவும் ஒரு செயற்திட்டமே இது. இச் செயற் திட்டத்தின் கீழ் விளையாட்டில் திறமை வாய்ந்த, குறைந்த வசதிகளைக் கொண்ட பாடசாலைகளுக்கு விளை யாட்டு உபகரணங்கள் பெற்றுக் கொடுக்கப்படும். விஷேடமாக வறிய பாடசாவைகளின் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு விளையாட்டு உடைகளும் வழங் கப்படும்.

தேசிய விளையாட்டு விருதுகள்

இலங்கை விளையாட்டு துறை யில் திறமையை வெளிப்படுத்திய வர்களுக்கு விருதுகள் வழங்கும் முதல் நிகழ்ச்சி இதுவாகும்.

வருடத்தில் விளையாட்டுத் துறையில் அதிக திறமைகளை வெளிப்படுத்தும் வீரர்கள், வீராங் கனைகள், நடுவர்கள், பயிற்று விப்பாளர்கள், நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் என அனைத்து பிரிவினரையும் கெளரவிக்கும் நிகழ்ச்சித் திட்டமே இது.

விளையாட்டுத் துறையிலுள்ள அரச நிறுவனங்கள் மற்றும் விளையாட்டுச் சங்கங்களின் ஒத்துழைப்புடன் இவ்விருது வழங்கும் விழா ஒழுங்கமைக்கப்படும்.

விளையாட்டுத் துறைக்காக தங்களை அர்ப்பணித்த நபர்களும் இவ்விருது வழங்கும் விழா மூலம் கெளரவிக்கப்படுவர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.