புத் 64 இல. 12

கர வருடம் பங்குனி மாதம் 05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 25

SUNDAY MARCH 18  2012

 
புலிகளின் குரல் ஒலிபரப்புச் சேவை இருந்த இடத்தை அடைந்தோம்

புலிகளின் குரல் ஒலிபரப்புச் சேவை இருந்த இடத்தை அடைந்தோம்

மிலிகளின் மாவீரர்களின் கிராமத்துக்கூடாக எப்பொழுதாவது எனக்குப் போக கிடைக்கும் என்று அன்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. ஆனால் இன்று அது நனவாகிவிட்டது.

ஆயிரக் கணக்கான அப்பாவி இளைஞர்களின் கல்லறைகளைக் கொண்ட அந்த பழைய வீடுகளைக் கடந்து நாம் செல்வது எங்கே?

புலிகளின் குரல் வானொலி ஒலிபரப்புச் சேவை அமைந்திருந்த எமது பழைய கல்லடி என்ற இடத்தைத் தேடியே சென்று கொண்டிருந்தோம். சம்பூருக்குச் சமீபமான அப்பிரதேசம் அன்று வான் மூலம் கூட எமக்குச் செல்வதற்கு முடியாத பயங்கரமான போராளிகளின் ஒரு கோட்டையாகும்.

இந்த கல்லடி பூமியானது ஒன்றுக் கொன்று வித்தியாசமான விசாலமான ரம்மியமான ஒரு புனித பூமியாகும். பழங்காலத்தில் சந்நியாசிகள் வாழ்ந்த பூமியாகக் கருதப்படும் இப்புனித பூமியில் கற்பாறைகளை தகர்த்து போராளிகள் தமது ஒலிபரப்புச் சேவையின் கம்பங்களை உருவாக்கியிருந்தார்கள்.

வடக்கேயிருந்த முழு குடாநாட்டுக்கும் இல்லாத ஒரு வரலாற்றை எடுத்துக் காட்டியது. அந்த ஒலிபரப்புச் சேவை அதைச் சுற்றிலும் கடினமான இரும்பு தகடுகளினால் மூடப்பட்டிருந்தது. அதற்கு முன் இந்த புலிகளின் ஒளிபரப்புச் சேவையை கொண்டு நடத்திய புலிகளின் அறிவிப்பாளர்கள் தங்கியிருந்த சிறு விடுதியாகும். அது ஒரு வகையான அலங்கார வீடாகும்.

சேருவில மகா நாயக தேரரின் அழைப்பின் பேரில் இரத்தினபுரியிலிருந்து புண்ணிய கடமைகளைச் செய்ய வரும் சிங்கள இன வைத்தியர் ஒருவர் அன்று சேருவிலைக்கு வந்தார். பெரும் தடைகள், துன்பங்களுக்கு மத்தியில் இப்புனித பூமியை எமது தலைமைத் தேரரின் தைரியத்தைக் கண்டு அவர் புத்த சாசனத்தில் ஈடுபாடு கொண்டார். அவர் இந்த புலிகளின் உயிர் நீத்த வீரர்களின் கல்லறைகள் காணப்பட்ட கிராமத்தின் மத்தியில் புலிகளின் குரலுக்கென்று வேறுபடுத்தியிருந்த மானிட நடவடிக்கைகளின் போது மீட்டெடுக்கப்பட்ட பாஷான பப்பத விகாரையின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டது அதன் பின்பாகும்.

சேருவில தலைமை தேரரையும் அழைத்துக் கொண்டு நாம் அங்கு சென்ற போது, அவர் வழிமேல் விழி வைத்துப் பார்த்துக் கொணடிருந்ததாக வைத்தியர் ரத்தினபுர தேவானந்த கித்தி தேரர் இவ்வாறு என்னிடம் கூறினார்.

ஐயா மாவீரர் கிராமம் என்று எமது புனித ஸ்தலங்களில் பிழையான வேலைகளைச் செய்ய இடங்கொடுக்க முடியாது. நான் இங்கு வந்தது. இப் புனித பூமியை மீட்டெடுக்கவே. இன்று இருக்கும் வாலிபர்கள் யுத்தத்துக்கோ பயங்கரவாதத்துக்கோ விருப்பமில்லை. ஆனால் பழைய உணர்வுகளைக் கொண்டவர்கள் இடைக்கிடை இருக்கத்தான் செய்கிறார்கள்.

இத்தமிழ் மக்களின் பெரும்பாலானவர்கள் அப்பாவி மக்கள். இவர்களின் நோய்களுக்கு மருந்து எழுதிக் கொடுத்தால், அவர்கள் அதற்கு விரும்பி ஏதாவது பணத்தைக் கொடுத்தால் மாத்திரம் அதை எடுத்துக் கொண்டு எமது உணவுத் தேவைக்குப் பயன்படுத்துகின்றோம். எமது இந்த பெரிய தேரர் வரும் போது எனக்கு பிஸ்கட், சீனி, தேயிலை, அரிசி, சரக்குப் பொருட்கள் சில எனக்குக் கிடைக்கும். எவ்வளவு கஷ்டமென்றாலும் அக்கஷ்டத்துக்கு மத்தியில் இதைப் பாதுகாத்துக் கொள்ளும் தன்மை என் மனதுக்கு சந்தோஷத்தைக் கொண்டு வருகின்றது.

நாம் அங்கு சென்ற போது பகல் உணவுக்கான நேரமும் அண்மித்திருந்தது. தேவானந்த தேரருக்கு உதவி செய்யும் இரு தமிழ் வாலிபர்கள் அங்கிருப்பது மிகச் சந்தோஷமாக இருந்தது. அவர் அந்த இடத்தைப் பற்றிய விடயங்களைக் கூறிக் கொண்டு போகும் அதே சமயம் தலைமை தேரர் கொண்டு சென்ற நூடில்ஸ் பக்கெட்டுகளை உடைத்து, அந்த ஒரு வாலிபனின் உதவியோடு அதை தயாரித்து எங்களுக்குக் கொடுத்தார்.

ஐயா இங்கு இப்படித்தான். நூடில்ஸ் கொஞ்சமாவது சாப்பிடுவோம். அவரின் அந்த நட்பு மிக்க குணாதிசயத்துக்கு நான் மதிப்புக்கொடுத்தேன். முழு நாடும் பெரும் வரட்சிக்குட்பட்ட ஒரு சமயத்தில் தனக்கு தானமாகக் கிடைத்த கொஞ்ச தானியத்தையும் மற்றும் உணவுகளையும் ஏழைகளுக்குக் கொடுத்த அந்த சிரேஷ்ட பெளத்த மகனின் கதைகளை நான் முன்னர் கேட்டிருக்கிறேன்.

இக்கிராமத்தில் அதிகமான தமிழ் மக்கள் அவரை அதிகம் நேசிப்பவர்களாக இருக்கின்றனர். ஏனென்றால், யுத்தத்தின் பின் கிராமத்துக்கு வந்த அப்பாவி தமிழ் மக்களுக்காக இவர் செய்யும் சேவையை புரிந்து கொண்டே அவ்வாறு அவரை மதிக்கின்றனர். கந்தளாயில் சேருநுவரவினூடாக கல்லடி வரை ஒரு பஸ் வண்டியை போக்குவரத்தில் ஈடுபடுத்த அவர் மேற்கொண்ட போராட்டம் அண்மையில் தான் வெற்றியடைந்துள்ளது. மாணிவத்த அபிக்கம தரித்திருக்காது முன்னே செல்லவும் என்ற வரிகளுக்கமைய வேலை செய்யும் சேருவில தேரர் பெளத்தவான்களிள் சாசனத்துக்குக் கிடைத்த பெரும் கொடையாகும் என்று நான் நினைக்கிறேன். ஒரு புறம் இலங்கையையும் மறுபுறம் சேருநுவர பிரதேசத்தையும் பெருங்கடலும் நீல நிற அழகையும் ஒரே நேரத்தில் பார்க்கக் கூடிய இந்த கற்பாறையின் உச்சியில் போராளிகள் இந்த ஒலிபரப்பு முழு குடாநாட்டுக்கும் தமது ஒலி அலைகள் செல்லும் வண்ணம் ஒலிபரப்புச் செய்யலாம் என்று நினைத்தே அவ்வாறு இங்கு உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்த அழகான கற்பாறை விகாரையின் கதையைப் பற்றி உங்களுக்கு எழுத நிறைய விடயங்கள் என்னிடம் உண்டு. அது புலிகளின் ஒலிபரப்புச் சேவை நடத்திய இடம் என்பதைவிட இந்த பழைய விகாரையைக் கருத்தில் கொண்டே. மாவில்லாறுவில் தொடங்கிய மானிட செயற்பாடுகள் காரணமாக அன்று முதன் முதலாக கிழக்குப் பகுதியை வெற்றி கொள்ள எம்மால் முடிந்தது. கல்லடி பூமி அல்லது பாஷான பப்பத விகாரையும் அத்தகையதொன்றே.

வடக்கு, கிழக்கில் பெரும்பாலான பூமிகளில் பெறுமதிமிக்க கலைத் துவமுள்ள ஆய்வுகளை நடத்தி அதிலுள்ள ஏடுகளை வாசித்து நாட்டுக்கும் மக்களுக்கும் பெரும் சேவையை ஆற்றுகின்ற தொல்பொருளியல் சக்கரவர்த்தி எல்லாவல தேரர் இங்கு ஞாபகத்துக்குக் கொண்டு வருவது புண்ணியமான ஒரு காரியமாகும்.

கல்லடி பூமியில் ஏடுகளை வாசித்து அதுபற்றி தொல் பொருளியல் திணைக்களத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்ததும் அவர் தான். அவர் பஹன காணப்படும் மகா விகாரை பற்றி மேற்கொண்ட ஆய்வுகளை வைத்து நான் இங்கு வரலாற்று குறிப்புகளை உங்களுக்கு எழுதுகிறேன்.

இந்த இடத்துக்கு கல்லடி அல்லது புண்ணியாடி என்ற இரு பெயர்கள் உண்டு. கல்லடி என்பது கற்களைக் கொண்ட கால்வாயாகும். புண்ணியாடி என்பது புண்ணியம் மிக்க கல்வாயாகும். இங்கிருக்கும் ஒரு ஏட்டில் காணப்படும் விளக்கத்தின் படி இந்த இடத்துக்கு கால்வாயிலிருந்தோர் வரிகளை பூஜை செய்திருக்கிறார்கள். அதன் பெயர் நாகக் கால்வாய் என்று எல்லாவல தேரர் கூறுகிறார். ஆனால் அத்தகைய ஒரு கால்லாயை நான் காணவில்லை. பிற்காலத்தில் அது அசுத்தமடைந்து தரையாக மாறியும் இருக்கலாம். அன்றைய நாகக் கால்வாய் தான் கல்லடியாக மாறியிருக்குமோ? என்று நான் நினைத்தேன். அதை எல்லாவல தேரரிடமிருந்து சரியாகத் தெரிந்துகொள்ள முன் இந்த இடத்துக்கு இன்று வர முடிந்தமையால் அது பற்றி விளக்கம் கேட்பது பொருத்தமானது.

கல்லடி அல்லது புண்ணியடி என்ற இந்தப் புண்ணிய பூமி காணப்படுவது கிழக்கு மாகாணத்தில் சேருவிலவிலிருந்து கிழக்குப் பக்கமாக கடலுக்கு அண்மையிலாகும். கற்பாறைகள் கடலுக்கு உட்புகும் இடத்துக்கண்மையில் காணப்படும் இந்த அழகான கற்பாறைகள் அழகான ஒரு சூழலில் அமைந்துள்ளன. ஒரு காலத்தில் சுதந்திரமாகக் காணப்பட்ட இப்பிரதேசம் 1984 இல் புலிகளின் புரதான இராசதானியாகக் காணப்பட்டது. புலிகள் இயக்கம் இந்தக் கல்லடி புண்ணிய பூமி காணப்பட்ட கிராமத்தை மா வீரர் கிராமமாக மாற்றியது அதன் பின்பாகும்.

மட்டக்களப்பிலிருந்து மூதூர் வரை காணப்படும் பாதையில் ஈச்சிலம்பற்று சந்தியிலிருந்து தெற்காகத் திரும்பி 10 கிலோ மீற்றர் அளவு சென்ற பின்பு இவ்விடத்துக்கு வரலாம். கந்தளாயிலிருந்து வரும் போது கல்லாறு, சேருநுவரவை கடந்து அரிப்பு சந்தியில் திரும்பி ஈச்சிலம்பற்று சந்திக்கு வந்து தான் போக வேண்டும்.

நான் எல்லாவல தேரரை தொலைபேசியில் அழைத்தேன். எந்த நேரமென்றாலும் எனது தொலைபேசி அழைப்புக்குச் செவி கொடுக்கும் அவர் இங்கு வரலாறு பற்றியும் ஏடுகளைப் பற்றியும் அபூர்வமான பல விடயங்களைக் கூறினார். நான் நாகக் கால்வாய் ஒன்று இல்லாமை பற்றியும் அவரிடம் கேட்டேன்.

இது இனத்தின் அதிர்ஷ்டத்துக்கு எமக்குக் கிடைத்தது. அந்த நாகக் கால்வாய் இப்போது தெரிவதில்லை தான். ஆனால் இந்த பழைய ஏடுகள் பலவற்றிலும் அது பற்றி கூறப்படுகின்றது. முகாதத்தியனக பேரரசன் என்று தொடங்கும் ஒரு ஏட்டில் மகா தத்திக மகாநாக அரசன் பாஷான பப்பத விகாரையை அமைத்து அங்கிருந்த பிக்குகளுக்கு பூஜையொன்று செய்தார் என்றும் நாக என்ற கால்வாயில் தண்ணீருக்கான ஒரு வரியை 20 வயல் நிலங்களின் பகுதிகளை விலைக்கு வாங்கி வரியையும் நீக்கியதாக குறிப்பிடப்படுகின்றது. அதேபோல் மற்றுமொரு ஏட்டில் குறிப்பிடப்படுவதாவது, மகாநக்க அரசன் பஹனபவத விகாரையை தொடங்கி, மகாநக்க அரசன் பாஷான பப்பத விகாரையை உருவாக்கி 24 தங்கக் கட்டிகளைக் கொடுத்து விலைக்கு வாங்கிய காணிகளையும் பூஜை செய்தார் என்றவாறு கூறப்படுகின்றது.

எமது வரலாறு எவ்வளவு அழகானது? எமக்கு தானிய வங்கிகள் இருந்தது என்பதை தோணிகல என்ற ஏட்டினால் நிரூபிக்கலாம். ஆனால் நாம் தங்கக் கட்டிகளை வட்டிக்குக் கொடுத்த வங்கிகளை நடத்திச் சென்றதாகவும், அவை தம்பவிட்ட என்ற வியாபார ஸ்தலத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் அதன்படி எமக்குத் தெரிகின்றது. எல்லாவல தேரர் இந்த வங்கிமுறை பற்றி குறிப்பிட்டார்.

அவரே இன்னுமொரு விடயத்தைக் குறிப்பிட்டுக் கொண்டு இவ்வாறு எழுதுகிறார்.

விவசாய பொருளாதாரத்தாலும் வர்த்தக பொருளாதாரத்தாலும் செழிப்பாக இருந்த சேருநுவர இந்த எழுத்து மூலங்களில் குறிப்பிடப்படும் பெரிய நகரமாகவே தெரிகின்றது. இந்நகரத்துக்கு கிழக்குப் பக்கமாக பெரும் வியாபார நிலையங்களும் வங்கிகளும் அமைந்திருந்தன. அதிலொன்று தபவிடி என்றழைக்கப்பட்டதோடு, மற்றையது வஜரயஹி அதப என்றழைக்கப்பட்டது. இலங்கையில் வர்த்தக வங்கிகள் முறை காணப்பட்டதற்கு இதுவரை சான்றுகளாக பல கல்விமான்கள் கூறியது வவுனியாவில் தோணிகல ஏடு பற்றியாகும். அது சிரி மேகவர்ண (304-332) காலத்துக்குரியதாகும்.

அந்த எழுத்து மூலத்தில் குறிப்பிடப்படுவதாவது, தானிய வங்கிகளைப் பற்றியாகும். ஆனால் இதைவிட பழமையானது எனக் கருதும் கல்லடி ஏடுகள் தானிய வங்கிகளும் நிதி வங்கிகளும் இந்த நாட்டில் நடைமுறையில் இருந்ததை தெளிவுபடுத்துகின்றது. பர்வதத்தின் மேல் இருந்த தாபகங்கள் உடைந்து புதையல்களை தோண்டுவதால் பழுதடைந்து கழுவப்பட்டிருந்தது. இப்போது காணப்படும் மட்டத்துக்கு கட்டிடம் சுமார் 5 அடிகளாக இருக்கும். பர்வதத்தின் வளைவுப் பகுதியில் செங்கற்கள் சரிந்து விழுந்திருப்பதை நன்கு காணலாம்.

புலிகள் கிழக்கு ஒலிபரப்புச் சேவையை கம்பத்தில் உருவாக்கினார்களானால் தூபியும் அகப்பட்டிருக்கும். இக்கம்பம் அமைக்கப்பட்டிருப்பது கல்லை துளைத்து இரும்பு கம்பங்களை பூட்டியாகும். அதிலிருந்து அதை கீழே குளிரூட்டப்பட்ட ஒரு கொன்ரைனரில் அமைக்கப்பட்ட ஒரு அறைக்குக் கொண்டு சென்றிருந்தனர். பர்வதத்தின் மேல் இப்போது இருப்பது பதிக்கப்பட்ட இந்த சில ஏடுகள் மாத்திரமே.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.