புத் 64 இல. 12

கர வருடம் பங்குனி மாதம் 05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 25

SUNDAY MARCH 18  2012

 
எத்தகைய சவால்கள் வந்தாலும் எதிர்கொள்ள முழு நாடும் தயார் !

ஜனநாயக நாடொன்றின் மீது ஏன் இந்தக் கொலை வெறி?

எத்தகைய சவால்கள் வந்தாலும் எதிர்கொள்ள முழு நாடும் தயார் !

எட்டப்பன் வேலையை UNP, JVP, TNA கைவிட வேண்டும்; முழு நாட்டு மக்களும் அரசுடன்!

இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டுள்ள யுத்தக் குற்றப் பிரேரணை தொடர்பாக எத்தகைய தீர்வு வந்தாலும் அவை அனைத்திற்கும் முகங்கொடுத்து அவற்றை எதிர்கொண்டு வெற்றி கொள்ள அரசாங்கம் தயாராகவே உள்ளது. அரசாங்கத்துடன் முழுநாட்டு மக்களும் ஒன்றிணைந்துள்ளனர். அதனால் சாவல்களை எதிர்கொள்வது சுலபமானதொரு காரியம் என்று அரசியல் தலைவர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக தினகரன் வாரமஞ்சரிக்குத் தமது எண்ணங்களைத் தெரிவித்த முக்கிய பிரமுகர்களின் கருத்துக்களை இங்கே தருகின்றோம்.

 

லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன
பதில் தகவல் ஊடகத்துறை அமைச்சர்

ஜெனீவாவில் இலங்கை தொடர்பாக எத்தகைய முடிவு எட்டப்பட்டாலும் அதற்கு முகம் கொடுக்க அரசாங்கம் தயார். தருஸ்மன் அறிக்கையை புறந்தள்ளி நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை சகல தரப்பினரும் ஏற்றிருப்பது இலங்கைக்குக் கிடைத்துள்ள வெற்றி என்று கூறிய அவர், அதிலுள்ள சிபார்சுகளை அமுல்படுத்துவது தொடர் பாக உத்தரவு பிறப்பிக்க தயாராவதாலேயே அமெரிக்கா பிரேரணையை எதிர்க்கிறது. ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை சமர்பிக்கப்பட்டுள்ளது. இதில் தருஸ்மன் அறிக்கை பற்றியோ போர்க் குற்றங்கள் தொடர்பாகவோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல் படுத்துமாறும் அது தொடர்பாக கண்காணி க்க குழுவொன்றை நியமிக்குமாறும் அதில் கூறப்பட்டுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சு களை அரசாங்கம் அமுல்படுத்தி வருகிறது. அனைத்து இனங்களுடனும் தொடர்புடைய விடயங்கள் பாராளுமன்ற தெரிவுக்குழு வினூடாகவே முன்னெடுக்கப்பட வேண் டும். எமது உள்ளக விவகாரம் தொடர்பில் பிரேரணை கொண்டு வருவதை ஏற்க முடியாது.

இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய

சகலரினதும் சந்தேகங்களையும் களையும் நோக்கில் ஆவணப்படம் வெளியிடப்படும். பிரித்தானியாவின் செனல் 4 ஊடகத்தின் குற்றச்சாட்டுகளை முறியடிக்கும் நோக்கில் புதிய ஆவணப் படம் வெளியிடப்பட உள்ளது. பிரபாகரனின் மரணம் தொடர்பில் இந்த ஆவணப்படத்தில் விபரிக்கப்படும். இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவதாகவும், உண்மை நிலைமையை எடுத்துக் கூறும் நோக்கில் ஆவணப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

செனல் 4 ஊடகத்தினால் வெளியிடப்பட்ட முதல் ஆவணப்படம் போலியானது என்பதை அரசாங்கம் வெற்றிகரமாக நிரூபித்தது எனவும், அதேபோன்று இரண்டாவது ஆவணப் படம் தொடர்பான பிரசாரங்களும் முறியடிக்கப்படும்.

அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா

எமக்கு உத்தரவு பிறப்பிக்க மேற்குலக தயாராவதாலே நாம் இதனை எதிர்க்கிறோம். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரை களை செயற்படுத்துவது குறித்து கண் காணிப்புக் குழு நியமிப்பது குறித்து நாமே தீர்மானிக்க வேண்டும். வேறு நாடு எப்படி இதனை கூற முடியும். நாட்டு மக்கள் எங்களுடனே உள்ளனர். வேறு நாடொன்று தலையீடு செய்யுமளவு இங்கு அராஜகம் எதுவும் இடம்பெற வில்லை. இலங்கைத் தூதுக்குழு மீண்டும் ஜெனீவா சென்று ஏனைய நாடுகளை அறிவூட்டி வருகிறது. தூதரகங்கள் இல் லாத ஆபிரிக்க நாடுகளை அறிவூட்டவும் விசேட குழுவொன்றை அனுப்பியுள்ளோம். முஸ்லிம் நாடுகளை அறிவூட்டவும் குழுவொன்று அனுப்பப்பட்டுள்ளது.

அமைச்சர் சம்பிக்க ரணவக்க

இலங்கையில் இனங்களுக்கு இடையில் மோதல்களை ஏற்படுத்தவே அமெரிக்கா ஜெனீவாவில் பிரேரணையை சமர்பித் துள்ளது. சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு இராணுவ வீரர்கள் உட்படுத்தப்பட்டால் உள்நாட்டில் இனக்கலவரம் மீண்டும் ஏற்படலாம் என நான் அஞ்சுகின்றேன். இனங்களுக்கு இடையில் முறுகல் நிலையை உருவாக்கும் வகையில் மேற்குலக சமூ கம் செயற்படக்கூடாது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவுடனும் ஏனைய தீய சக்திகளுடனும் இணைந்து இலங் கைக்கு எதிராக செயற்படுவதை உடன் நிறுத்த வேண்டும்.

அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கடுமையாக செயற்பட்டு வருகின்றது. இதில் மேற்குலக நாடுகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து கொண்டு நாட்டை மீண்டும் சீரழிக்கும் பிரேரணையை ஆதரித்து பேசி வருகின்றது. எவ்வாறாயினும் புலிகள் இலங்கையில் ஒழிக்கப்பட்டதன் பின்னர் நாட்டில் இனங்களுக்கு இடையில் ஒற்றுமையும் நிரந்தர சமாதானமும் ஏற்பட்டுள்ளது. புலிகளை அழித்திருக்காவிட்டால் இன்று இலங்கை இவ்வாறான சவால்களை ஒரு போதும் எதிர்கொண்டிருக்காது.

தமரா குணநாயகம்
ஜெனீவாவிற்கான இலங்கை நிரந்தரப் பிரதிநிதி

மனித உரிமை விவகாரம் தொடர்பில் ஜப்பானின் கருத்து வரவேற்கத்தக்கது. மனித உரிமை பாதுகாப்பு தொடர்பில் எந்தவொரு நாடும் முழுமையானதல்ல என ஜப்பான் குறிப்பிட்டுள்ளது. மனித உரிமை பாதுகாப்பு தொடர்பில் ஜப்பானின் கருத்தை உலக நாடுகள் கவனத்திற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாட்டினதும் சமுக, கல்வி, கலாசார மற்றும் ஏனைய காரணி களின் அடிப்படையில் மனித உரிமை விவகாரம் பற்றிய மதிப்பீடுகள் மேற்கொள் ளப்பட வேண்டு மென ஜப்பான் வலியுறுத்தி யுள்ளது. இதேவேளை, உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கையை அமுல் படுத்துவது தொடர்பில் இலங்கை அர சாங்கத்திற்கு காணப்படும் ஆர்வத்தை ஜப்பான் புரிந்து கொண்டுள்ளதாக ஜெனீவாவிற்கான இலங்கை நிரந்தரப் பிரதிநிதி தமரா குணநாயகம் தெரிவித்துள்ள தோடு - மேற்குல நாடுகள் இலங்கையுடன் ஆக்கபூர்வமான தொடர்புகளைப் பேண வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

குணதாச அமரசேகர
தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்

இந்தியாவினதும் அமெரிக்காவினதும் உறவை துண்டித்தால் மாத்திரமே இலங் கையர்கள் நிம்மதியாக வாழ முடியும். நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்து அரசாங்கம் வரலாற்றுத் தவறைச் செய் துள்ளது. இதனால் நாடு சர்வதேச குற்ற வியல் நீதிமன்றில் தண்டனை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மண்டியிடுவதா? எதிர்த்து போராடுவதா? என்ற தீர்மானமே இலங்கை முன் தற்போது உள்ளது.

நாட்டின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அமெரிக்கா மற் றும் இந்தியா ஆகிய நாடுகள் தொடர்ந்தும் செயற்படுகின்றன. உள்நாட்டிலும் ஐ.தே. கட்சியும், ஜே.வி.பி.யும் நாட்டிற்கு எதிரான வகையிலேயே செயற்படுகின்றன. எவ்வாறாயினும் முகத்துடன் கோபித்துக் கொண்டு மூக்கை வெட்டிக் கொள்ள முடியாது. அரசாங்கம் தேசிய பிரச்சினைகளில் மேலும் பொறுப்புடன் செயற்பட வேண் டும் என்பது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் தற்போது நாட்டிற்கு எதிரே உள்ள சவாலை புரிந்து கொள்ள வேண்டும்.

பிரேரணை நிறைவேற்றப்பட்டால் அது ஆபத்தானதாகவே அமையும். அதே போன்று நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை நிறைவேற்றவோ விசேட கண்காணிப்பு குழுவுக்கு அனுமதி வழங்கவோ கூடாது எனக் கூறினார்.

ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்
‘டயஸ்போரா டயலொக்’ அமைப்பின் அங்கத்தவர்

அமெரிக்க அரசாங்கம் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத் தொடரில் மேற்கொண்டு வரும் மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டை புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒன்று திரண்டு எதிர்க்க வேண்டும். இலங்கையில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் இலங்கையில் இருந்து சென்ற புலம்பெயர்ந்த தமிழர்கள் வட பகுதி மக்களுக்கு எந்தவிதமான உதவி களையும் செய்வதற்கு முன்வரவில்லை. புலம்பெயர்ந்த சமூகத்தினரால் திரட்டப்பட்ட மில்லியன் கணக்கான டொலர்களை சுருட்டிக் கொண்டு ஆடம்பரமாக வாழ்ந்து வருகின்றனர்.

யுத்தத்தினால் வடபகுதி மக்கள் வீடுகளையும், சொத்துக்களையும் இழந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கையில் அவர்களுக்காக அமெரிக்க அரசாங்கமோ, புலம்பெயர்ந்தவர்களோ உதவிகளை செய்வதற்கு முன்வரவில்லை. இவர்கள் தற்போது தமிழினத்திற்காக குரல் கொடுக் கிறோம் என்று முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்க அரசாங்கம் தனது அரசியல் செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்வதற் காகவே இலங்கை அரசாங்கத்தின் மீது போலியான குற்றச்சாட்டுகளை முன்வைத் துள்ளது. அமெரிக்காவின் அரசியல் விளையாட்டில் நாம் அகப்பட்டுவிடக் கூடாது. இலங்கையின் ஐக்கியத்தையும், ஒருமைப்பாட்டையும் நிலை நிறுத்துவதற்காக புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒன்றுபட வேண்டிய தருணம் தற்போது ஏற்பட்டுள்ளது. சர்வதேச அழுத்தத்தில் இருந்து இலங்கையை விடுவிப்பதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு அமெரிக்காவுக்கு எதிராக செயற்பட வேண்டும் என்றார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.