புத் 64 இல. 12

கர வருடம் பங்குனி மாதம் 05ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 25

SUNDAY MARCH 18  2012

 
ஏடாகூடமான கேள்விகள்? 49

ஏடாகூடமான கேள்விகள்? 49

ஏடாகூடம் : மொழி

பதில் தருவது: தயாரிப்பாளர், அறிவிப்பாளர்

திருமதி ஜெயந்தி ஜெய்சங்கர்

கேள்வி: சகியே! உன்னோடு கொஞ்ச நேரம் பேச ஆசை. இதற்கு பலியானது என் நரை மீசை. ஒரு கவிஞன் இப்படி ஏடாகூடமான ஒரு கவிதையைக் கேட்டால் உங்கள் பதில் கவிதை எப்படி இருக்கும்?

பதில்: பேச நினைத்ததற்கே நரைத்தது மீசை. ஆசை வைத்திருந்தால் கிடைத்திருக்கும் .......... பூசை......

(ஏன் இந்த ‘கொலைவெறி’ ஓசை சுட்டுத்தரவா சூடாக ஒரு தோசை?)

கேள்: தென்றலுக்குள் நீங்கள் புயலைக் கிளப்பிக் கொண்டிருப்பதாகச் சொல்லுகிறார்களே! உண்மையா?

பதில்: தென்றலுக்குள் புயலா? தென்றல் தான் புயலானது......

(அப்போ அடுத்து சுனாமியோ....?)

கேள்: வானொலிக்கும் வயல் வெளிக்கும் என்ன வித்தியாசம்?

பதில்: வானொலியில் - தென்றல் பேசும் வயல் வெளியில் - தென்றல் வீசும்.

(பதிலைச் சொன்னால் கண்கள் கூசும்)

கேள்: காதலில் சொதப்பிய அனுபவம் உண்டா?

பதில்: நான் என்ன சித்தார்த்தா?

(அப்போ சித்தார்த்துக்கு மட்டும்தான் காதல் வருமோ?)

கேள்: வானொலியில் உங்கள் குரலைக் கேட்டு விட்டு மயங்கிப் போய் நேரில் வந்து உங்களைப் பார்த்த பிறகு யாராவது மயங்கி விழுந்துள்ளார்களா?

பதில்: மயக்கத்தின் பின்பும் மயக்கமா?

(அந்த அதிர்ச்சி இன்னும் தெளியவில்லை போலிருக்கிறதே.....!)

கேள்: எந்த அறிவிப்பாளரைப் பார்த்தால் ‘ஐயோ பாவம்’ என்று உங்களுக்கு’ சொல்லத் தோன்றும்?

பதில்: என்னைத் தான்..... உங்கள் கேள்விக்குப் பதில் சொல்கிறேனே....

(சுத்தம்.......)

கேள்: காதலில் அதிகம் சொதப்புவது ஆண்களா? பெண்களா?

பதில்: காதல் சொதப்பல் என்றால்..... சொதப்புவது ஆணும் பெண்ணும்தான்.

(அடா.... என்ன கண்டுபிடிப்பு..... நீங்கள் இங்கே இருக்க வேண்டியவர் அல்ல!)

கேள்: நீங்கள் கவிதை எழுதும் போது உங்களுக்கு கற்பனை ஊற்றெடுக்குமா? அல்லது மு. மேத்தாவின் கவிதை நூல்கள் பக்கத்தில் இருந்து உதவி செய்யுமா?

பதில்: ஊற்றெடுத்தால் மூழ்கிடுவேன். கற்பனை வரும், உதவிட பேனா... மை தரும்... அப்போ கவிதை... வரும்

(பொய் சொல்லக் கூடாது பாப்பா.....!)

கேள்: உங்கள் குரல் குயிலைப் போல் இருக்கும் என்று சொல்லுகிறார்களே. அதாவது ‘கூஊ’... கூஊ... கூஊ.’ என்று மட்டும் தான் பாடுவீர்களாமே உண்மையா?

பதில்: கூஊ.... கூஊ.... என்று குயிலைப் பார்த்து கூவியது உண்டு. கூவும் குயிலுக்குப் பாடத் தெரியாததால் ஹைகூ பாடியதுண்டு.

(அப்போ... உங்க தோழி சொன்னது சரிதானே....)

கேள்: உங்களுக்கு கோபம் வந்தால் பக்கத்தில் யார் இருந்தாலும் அவர் மூக்கைக் கடித்து விடுவீர்களாமே! அப்படியா?

பதில்: கோபத்துக்கு ஏன் மூக்கின் மேல் கோபம், மூக்கு அது பாவம்...

(ஐயோ பாவம்.... மெடம் நீங்க.......!)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.