புத் 64 இல. 11

கர வருடம் மாசி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 18

SUNDAY MARCH 11,  2012

 
காவத்தை இரட்டைக் கொலை

காவத்தை இரட்டைக் கொலை

இலங்கையில் முதலாவதாக 'கிரீஸ் பூதம்' உருவாகியது காவத்தைப் பகுதி யிலாகும். இதனால் காவத்தையில் சிறு சம்பவங்கள் இடம்பெற்றாலும், அது பாரியளவில் பேசப்படுகின்றது. சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதனைத் தொடர்ந்து நாட்டு மக்களின் பார்வை காவத்தை பற்றியதாகவே காணப்படுகின்றது. காவத்தை (Opata)  ஓபாத்த கொட்டக்கெத்தன பகுதியில் அச்சம் கலந்த வாழ்க்கையையே இப்பகுதிப் பெண்கள் அனுபவித்து வந்தனர்.

இக்காலப் பகுதியில் 9 பெண்கள் கொலை செய்யப்பட்டனர். இது குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வந்த வேளையில், பிரதேசவாசிகள் அதில் நம்பிக் கையின்மை காரணமாக வீதியில் சவப்பெட்டிகளை வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அதன் பின்னர், இந்தக் கொலைகளின் சூத்திரதாரிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இவை இடம்பெற்று பல மாதங்கள் கடந்த நிலையில் இப்பகுதி மக்கள் அமைதி வழிக்குத் திரும்பினர். இதனால் பதற்றம் தணிந்தது. ஆனால் கடந்த ஜனவரி 31ஆம் திகதி, அப்பகுதியில் தனி யாக வசித்து வந்த தாயும் மகளும் கொலை செய்யப்பட்டனர். இதனால் இப்பகுதியில் மீண்டும் பதற்றமும் அச்சமும் கலந்த சூழ்நிலை தொடங்கியது.

வீட்டில் தனியாக இருந்த தாயையும், நயனா நில்மினி (வயது 51), அவரது மகளான காவிந்தியா சத்துரங்கி (வயது 18) இருவரும் கொலை செய்யப்பட்ட னர். இக்கொலை இடம்பெற்று ஒரு மாதம் முடிந்த நிலையில் இதுவரை எவ ரும் கைது செய்யப்படவில்லை. எனினும் பொலிஸாரும், இரகசிய பொலிஸாரும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டதால் கொலை செய்யப் பட்டவர்களின் வீட்டுக்கருகிலுள்ள கணவன், மனைவி மற்றும் ஆட்டோ சாரதி என 3 பேர் கடந்த 7ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர் அமைச்சர் ஒருவரின் பிரத்தியேக செயலாளரும், கொடக்கவலை பிரதேச சபை உறுப்பினர் எல். தர்மஸ்ரீ என்பவரின் சகோதரரான ராஜீ என்பவரும் அவரது மனைவியான அசோகா மற்றும் முச்சக்கரவண்டி சாரதியான சனத் என்பவர்களே கைது செய்யப்பட்டனர்.

இக்கொலையாளிகள் கைது செய்யப் பட வேண்டுமென்று இப்பகுதிப் பெண்கள் பலர் ஒன்று திரண்டு, தேவாலயம் மற்றும் விகாரைகள், கோயில்கள் என்பவற்றுக்குச் சென்று சிதறு தேங்காய் அடித்துள்ளனர். சிதறு தேங்காய் அடித்து 4 நாட்களின் பின்னர் இந்த சந்தேக நபர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனவரி 31ஆம் திகதி செவ்வாய்க் கிழமை மாலை வேளையில், கொலை செய்யப்பட்டவர்களின் வீட்டுக்குச் சென்ற கொலையாளியின் மனைவி வீட்டின் கதவினைத் தட்டிய போது, கதவைத் திறந்த தாய் நயனாவை ஓங்கி வெட்டியுள்ளர். தாய் ஸ்தலத்தி லேயே உயிரிழந்துள்ளார். இவரது சத்தத்தைக் கேட்டு அறையிலிருந்து வெளியே வந்த மகள் காவிந்தியா "மாமா என்ன வேலை செய்தீர்கள்" என்று வினவவே அவரது தலையிலும் பொல்லால் தாக்கவே, அவரும் ஸ்த லத்திலேயே உயிரிழந்தார். அப்போது இரவு வேளை என்பதனால், முச்சக்கர வண்டியின் சாரதி சனத்தின் உதவியுடன் மகளின் சடலத்தை கைவிடப்பட்ட மாணிக்கக்கற்கள் அகழும் குழியில் வீசி எறிந்துள்ளனர்.

இடம்பெற்ற இச்சம்பவத்தை ஏற்கனவே கொலைகளின் சூத்திரதாரிகளின் உதவியாளர் களின் வேலையாக இருக்கலாம் என ஆரம்பத்தில் கூறப்பட்டது.

இது இவ்வாறிருக்க கொலையாளிகள் கைது செய்யப்பட்ட தனை கேள்வியு ற்ற காவத்தை பிரதேச மக்கள், காவத்தை லிகின்யா சந்தியில் டயர்க ளைப் போட்டு எரித்து ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.