புத் 64 இல. 11

கர வருடம் மாசி மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 18

SUNDAY MARCH 11,  2012

 

புவி

புவி

* புவி கோளவடிவமானது

* புவி கோளவடிவமானது என்பதற்குரிய சான்றுகள் பல உண்டு.

* புவி கணித ரீதியான கோளமல்ல.

* மாதிரிக் கோளத்தில் உள்ள அகலாங்குகள், நெட்டாங்குகள் என்பன கற்பனைக் கோடுகள் ஆகும். அகலாங்குகள், நொட்டாங்குகள் என்பன நாடுகள், நகரங்களின் அமைவிடங்களை அறிந்து கொள்ள உதவுகின்றன. உலகில் 7 கண்டங்கள், 5 சமுத்திரங்கள் காணப்படுகின்றது.
 

எஸ். டிலக்ஷி,

தரம் -7

கலைமகள் மகா வித்தியாலயம்

மாத்தளை


நிஸங்கமல்லன்

மன்னன் விஜயனின் பிறப் பிடமான கலிங்க தேசத் தில் சிங்கபுரவும் என்ற இடத் தில் நிஸ்ஸங்கமல்லன் பிறந்த தாக கூறப்படுகிறது. இவன் கலிங்க வம்சத்தைச் சேர்ந்தவ னாவான்.

இவருடைய தந்தை சிறி ஜயகோப். தாய் பார்வதிதேவி. தனக்கு அரசாட்சிக்கான உரி த்து இல்லாவிட்டால் கூட நாட்டு மக்களின் அபிமானத்தைப் பெற்றுக்கொள்ள அவன் பலமுயற்சிகளை மேற்கொண்டிருந்தான்.

இலங்கை வரலாற்றை பொறுத்தவரையில் ஆகக்கூடிய கல்வெட்டுக்களை உருவாக்கிய மன்னன் நிஸங்கமல்ல மன்னனாவான். இலங்கையில் இதுவரையில் கண்டு பிடிக்கப்பட்டிருக்கும் மிக நீளமான கல்வெட்டும் இவரின் கல்பொத்த கல்வெட்டாகும்.

இது சுமார் 8 மீற்றர் நீளமும் 4 மீற்றர் அகலமும் கொண்டது. நிஸங்கமல்லன் நாட்டு மக்களை வரிச்சுமையிலிருந்து விடுவித்தான். மேலும் ‘துலாபாரம்’ எனும் பெயரிலான தானத்தினையும் வருடாந்தம் வழங்கிவந்தமை இவர் பணிகளில் சிறப்பானது.

ஆர். லுஷாந்தினி
புனித தோமையார் பெண்கள் பாடசாலை
மாத்தளை


விஞ்ஞானப் பெயர்களும் பிரிவுகளும்

* உளவியல் (சைக்கலோஜி) - மனிதனின் மனத்தைப் பற்றிய கல்வி
* விலங்கியல் (ஜரவாலஜி) - விலங்குகளின் வாழ்க்கை யைப் பற்றிய அறிவியல் கல்வி
* சிப்பியல் (காஞ்சோலாஜி) சிப்பியலைப் பற்றிய கல்வி
* நோய் நுண்மலியன் (லைரொலாஜி) - நோய்க் கிருமிகள் (சாரல்) சம்பந்தப்பட்ட கல்வி
* மேகநோயியல் (வீணிரியோலாஜி) - மேககள் மற்றும் சிகிச்சை முறைகளைப் பற்றிய கல்வி
* சமூகவியல் (டாக்ளிகோலாஜி) மனிதனின் சமூகப் பிரச்சினைகள் மற்றும் குணங்களைப் பற்றிய கல்வி)
* பூகம்பவியல் (நெய்சோமோஜாஜி) - பூகம்பங்கள் விளைவுகள் இவைகளைப் பற்றிய கல்வி
* தேர்தலில் (செபோலாஜி) - தேர்தல்களும் வாக்கப் போடும் முறைகளைப் பற்றிய கல்வி.
* மொழியியல் (பிலோலாஜி) - மொழி அல்லது மொழியியலைப் பற்றிய கல்வி
* செடியில் (பைடோஜெனி) - தாவரங்களின் வளர்ச்சி மற்றும் தோற்றங்களைப் பற்றி கல்வி
* ஆசிரியில் (பேடாகோஜி) - கற்பிக்கும் முறை பற்றிய விஞ்ஞானக் கல்வி
* தாவர மண்ணியல் (நாலோமோமெர்ட்சி) - தாவரங் களின் மண் வகையைப் பற்றிய அறிவியல்.

கே. எஸ். ஹில்மி
சம்மாந்துறை - 10

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.