புத் 64 இல. 09

கர வருடம் மாசி மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 04

SUNDAY FEBRUARY 26,  2012

 

கடுமையான உழைப்பே வெற்றிக்கு வழி வகுக்கும்

கடுமையான உழைப்பே வெற்றிக்கு வழி வகுக்கும்

சினிமாவில் கடுமை யாக உழைத்தால் வெற்றியடையலாம் என்று நாயகி காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

திரையுலக முன்னணி நடிகை காஜல் அகர்வால், மாற்றான், துப்பாக்கி போன்ற தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த சில வருடங்களாக சினிமாவில் வெற்றி பெற்றதற்கு தான் கடுமையாக உழைத் துள்ளதாக கூறியுள்ளார்.

இது குறித்து காஜல் அகர்வால் அளித்த பேட்டியில், எனக்கு போராட்ட குணம் அதிகம். பள்ளியில் படிக்கும் போது ஒரு மதிப்பெண் குறைந்தால் கூட பொறுத்துக் கொள்ளமாட்டேன்.

ஒரு வேலையில் தோற்றால் அந்த வேலையில் வெற்றியடையும் வரை தூங்க மாட்டேன். சினிமாவிலும் அப்படித்தான் வெற்றி பெறுவதற்காக தினமும் போராடுகிறேன்.

தோல்வி அடைந்தால் அதற்கான காரணத்தை கண்டுபிடித்து நிவர்த்தி செய்வேன். சினிமாவில் கஷ்டப்பட்டு உழைத்தால் முன்னுக்கு வரலாம்.

நல்ல கதாப்பாத்திரங்களை தெரிவு செய்து நடிக்கிறேன். கதாப்பாத்திரத்தை சிறப்பாக்க முழு ஈடுபாட்டுடன் முழு உழைப்பையும் செலுத்துகிறேன் என்று நாயகி காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.