புத் 64 இல. 09

கர வருடம் மாசி மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 04

SUNDAY FEBRUARY 26,  2012

 

பிரபல அம்மா நடிகை சோபனா கைது

பிரபல அம்மா நடிகை சோபனா கைது

துணை நடிகைகளை வைத்து விபச்சார தொழிலில் ஈடுபட்ட பிரபல அம்மா நடிகை சென் னையில் கைது செய்யப்பட்டார்.

சென்னை நகரில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விபசார கும்பல் கிண்டி பகுதிக்கு வாடி க்கையாளர்களை வரவழை த்து, பின்னர் அந்த வாடிக்கை யாளர்களின் காரிலேயே சென்று நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து விபசாரத்தில் ஈடுபடுவதாக விபசார தடுப்பு பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பொலிஸார் இதுபற்றி நடத்திய விசாரணையில் பிரபல அம்மா நடிகை சோபனா (40) இந்த விபசார கும்பலுக்கு தலைமை ஏற்று நடத்துவது தெரிய வந்தது.

இதையடுத்து பொலிஸார் நடிகை சோபனாவிடம் கம்ப்யு+ட்டர் என்ஜpனீயர் பேசுவதுபோல பேசினார்கள். பின்னர் உல்லாசமாக இருக்க சோபனா கேட்ட தொகையுடன் சோபனா சொன்ன இடத்துக்கு மாறுவேடத்தில் பொலிஸார் சென்றனர்.

சுமார் 3 மணி நேரம் காத்திருந்த பிறகு நடிகை சோபனா மட்டும் முதலில் காரில் வந்தார். அடுத்து 1 மணி நேரம் கழித்து துணை நடிகைகள் இருவர் வந்தனர். அவர்கள் வந்தவுடன் மாறுவேட பொலிஸார் சோபனாவை கைது செய்தனர். இதையடுத்து சோபனா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் மத்திய nஜயிலில் அடைக்கப்பட்டார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.