புத் 64 இல. 09

கர வருடம் மாசி மாதம் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
ஹிஜ்ரி வருடம் 1429 ர.ஆகிர் பிறை 04

SUNDAY FEBRUARY 26,  2012

 

சினி பஜார் கேள்வி - பதில்

சினி பஜார் கேள்வி - பதில்

வர்ஷினி

எம். சக்தி - (நுவரெலியா)

கேள்வி : ‘நண்பன்’ படத்தில் நடித்த நண்பர்களுக்கு இடையில் பிரிவு ஏற்பட்டிருக்கிறதாமே உண்மையா?

பதில் : உண்மைதான் விஜய் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதால் மற்ற இருவரும் மனவேதனையில் இருக்கிறார்க ளாம்.
 

மாதவன் - (வத்தளை)

கேள்வி : காதலில் சொதப்புவது எப்படி? என்று உங்களுகக்குத் தெரியுமா வர்ஷினி?

பதில் : ச்சீ... இப்படியெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது.நான் இன்னும் ‘சின்னப் பொண்ணு!’
 

எஸ். பானு - (வவுனியா)

கேள்வி : அமலா பால் மீது சூர்யாவுக்குக் காதல் ஏற்பட்டிருக்கிறதாமே? அதனால் தான் இடது கையில் ‘A’ என்று பச்சை குத்தியிருக்கிறாராமே! உண்மையா வர் ஷினி? அப்படியானால் (ஜோ) அம்பேலா?

பதில் : கிழிஞ்சிது போ! ‘மாற்றான்’ படத்துக்காக அவர் இடது கையில் ‘A’ என்று பச்சை குத்தியுள்ளார். எப்படி யெல்லாம் பீதியை கிளப்புறாங்கப்பா!
 

எம். சுகுமார் - (நவகம்புர - 02 கொழும்பு)

கேள்வி : மங்காத்தாவுக்குப் பிரகு வெங் கட் பிரபுவை காணவில்லையே. எங்கே போய் விட்டார்?

பதில் : தன்னுடைய அடுத்த பட கதை விவா தத்திற்காக மலேசியா சென்றுள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபு என்ன... சினிமாக் கதை விவாதத்திற்காக மலேசியா வுக்குத்தான் போக வேண்டுமா? எனக் கேட்கத் தோன்றுகிறதா? சினிமாக்காரர்க ளுடைய வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா!
 

எஸ். அதிசயன் -

(கொழும்பு-08)

கேள்வி : இந்தியாவிலேயே முதன் முத லாக பத்திரிகையாளர்களுக்காக சினி மாக் காட்சி நடத்தியவர் யாரென்று தெரியுமா வர்ஷினி அக்கா?

பதில் : அய்யோ... என்ன இது? என்னை அக்காவாக்கி விட்டீர்களே! நான் இன்னும் பாவாடை தாவணி தான். சரி. உங்கள் கேள்விக்கான பதில் இதோ. பத்திரிகையா ளர்களுக்காக முதன் முறையாக சினிமாக் காட்சி நடத்தியவர் “தாதா சாஹேப் பால்கே” படத்தின் பெயர் “ராஜா ஹரிச்சந்திரா” இடம் “மும்பை” காட் டப்பட்ட இடம் “1913”
 

எஸ்.எம். பாரூக் - (மாவனல்லை)

கேள்வி : சத்தியராஜின் மகன் நடிகர் சிபியின் கார் நம்பரில் ஏதோ வித்தியாசம் இருக்கிறதாமே, அது என்ன வித்தியாசம் வர்ஷினி?

பதில் : அவர் வாங்கியுள்ள காரின் எண் என்ன தெரியுமா? 5161 இதை sibi என்பது பொல் எழுதிக் கொள்ளலாம் என்பதால் இந்தக் காரை அவர் வாங்கி இருக்கிறாராம்.
 

எஸ். மாதவி - (யாழ்ப்பாணம்)

கேள்வி : இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் ஹொலிவூட் திரைப்படம் ஒன்றுக்கு இசை அமைக்கிறாராமே அது என்ன படம்?

பதில் : ஸ்டீபன் ஸ்பீல்பொக் தயாரிப்பில் அமெக்ஸ் கட்ஸ்மன் இயக்கும் “வெல்கம் டூ பீப்பிள்” என்ற ஆங்கில படத்திற்குத் தான் அவர் இசை அமைக்கிறார்.
 

ஆர். மாலதி - (மட்டக்களப்பு)

கேள்வி : எந்த சினிமா நடிகரைப் பார்த்து நீங்கள் மயங்கினீர்கள் வர்ஷினி?

பதில் : நான் பார்த்து மயங்கும் அளவிற்கு எந்த சினிமாநடிகரும் ஹான்ட்சம்மாக இல்லையே மாலதி ஹ... ஹ... ஹ... !

இந்தப் பகுதிக்கு கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி

சினி பஜார், கேள்வி - பதில்
தினகரன் வாரமஞ்சரி
லேக்ஹவுஸ்
கொழும்பு - 10

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்

© 2012 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே

உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.