ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் பிறை 29
ஜய வருடம் ஆவணி மாதம் 10ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, AUGUST ,26, 2014
வரு. 82  இல. 202
 

போமியுலா-01 கார்பந்தயம்: அவுஸ்திரேலிய வீரர் ரிச்சியர்டோ முதலிடம்

போமியுலா-01 கார்பந்தயம்: அவுஸ்திரேலிய வீரர் ரிச்சியர்டோ முதலிடம்

இந்த ஆண்டுக்கான போமியுலா-01 கார்பந்தயம் 19 சுற்றுகளாக நடக்கிறது. இதன் 12-வது சுற்றான பெல்ஜpயம் கிராண்ட்பிரி அங்குள்ள ஸ்பா ஓடுதளத்தில் நேற்றுமுன்தினம் நடந்தது.

22 வீரர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் 308 கிலோ மீட்டர் கொண்ட பந்தய தூரத்தை அவுஸ்திரேலியாவின் டேனியல் ரிச்சியர்டோ (ரெட்புல் அணி) 1 மணி 24 நிமிடம் 36.556 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார்.

இந்த பருவகாலத்தில் அவரது 3-வது வெற்றி இதுவாகும். முதல்வரிசையில் இருந்து புறப்பட்ட Nஜர்மனியின் நிகோ ராஸ்பர்க் (மெர்சிடஸ் அணி) அவரை விட 3.383 வினாடி பின்தங்கி 2-வது இடத்தை பிடித்தார். முன்னாள் சம்பி யன் லீவிஸ் ஹாமில்டனின் (இங்கிலாந்து) கார் டயர் பஞ்சரானதால் அவர் பாதி யிலேயே விலக நேரிட்டது.

போர்ஸ் இந்தியா அணி வீரர்கள் செர் ஜpயோ பெரேஸ், ஹல்கென்பர்க் முறையே 8 மற்றும் 10-வது இடங்களை பெற்ற னர். 12 சுற்று முடிவில் சாம்பியன்'pப் பட்டத்திற்கான போட்டியில் ராஸ்பர்க் 220 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஹாமில்டன் 191 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும், ரிச்சியர்டோ 156 புள்ளிக ளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். 13-வது சுற்று போட்டி இத்தாலியில் அடுத்த மாதம் 7-ம் திகதி நடக்கிறது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி