ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் பிறை 29
ஜய வருடம் ஆவணி மாதம் 10ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, AUGUST ,26, 2014
வரு. 82  இல. 202

இன நல்லிணக்கத்தை வளர்ப்பதில் ஊடகங்களின் பங்கு அளப்பரியது

இன நல்லிணக்கத்தை வளர்ப்பதில் ஊடகங்களின் பங்கு அளப்பரியது

ஊடகங்கள்தான் இன்றைய உலகம் என்று கூறும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. தகவல் தொழில் நுட்பம் இதற்கு வழிகோலியிருக்கிறது.

உறக்கத்திலிருந்து விழித்தெழுந்து மீண்டும் தூக்கத்துக்கு செல்லும் வரை ஒரு மனிதனின் வாழ்வையும் அன்றாட நடவடிக்கைகளையும் தீர்மானிப்பது ஊடகம்தான் என்பதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

கல்வி, கலை. கலாசாரம், அரசியல், பொருளாதாரம். தொழில் நுட்பம். மருத்துவம்.... எதைத் தொட்டாலும் ஊடகங்களின் ஆதிக்கமும் செல்வாக்கும் இரண்டறக் கலந்திருக்கிறது.

சுருங்கச் சொன்னால் உலக இயக்கத்தின் உயிர்நாடி ஊடகம். அதுதான் இன்று மக்களின் வாழ்வையும் இருப்பையும் தீர்மானிக்கிறது. மக்கள் பயன்படக்கூடிய விடயதானங்கள் விரைவில் அவர்களைச் சென்றடைய வேண்டுமென்பதே ஊடகத்துறையின் அடிப்படை. 1920 ஆம் ஆண்டு காலப் பகுதியிலிருந்தே மக்கள் ஊடகம் எனும் கருத்துரு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

என்றாலும் தற்போதைய அபரிமிதமான ஊடகத்துறை வளர்ச்சி யும் இணைய ஊடகங்களின் தோற்றமும் மக்கள் ஊடகம் எனும் கருத்துருவில் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

பத்திரிகைகள், இலத்திரனியல் ஊடகங்கள், மாற்றூடகமாகக் கருதப்படும் இணையத்தளங்கள் ஆகியன இன்று வெளி யிடும் சில செய்திகளும் தகவல்களும் சமூகங்களுக்கிடை யில் சகோதரத்துவம், நட்பு ஆகியவற்றில் விரிசலை ஏற் படுத்துவதாகவே இருக்கிறது.

ஊடகவியலாளர்களைப் பொறுத்தவரைக்கும், அவர்களுக்கு பாரிய சமூகப் பொறுப்பு இருக்கிறது. செய்தி எழுதுகிறார்கள் என்பதை விடவும் சமூக ஆய்வாளர்களாகவும் வழிகாட்டிக ளாகவும் தங்களது பார்வையைச் செலுத்த வேண்டிய கட்டாயக் கடமை ஊடகவியலாளர்களுக்கு இருக்கிறது.

செய்திகளையும், தகவல்களையும் முந்திக் கொடுக்க வேண்டு மென்பதிலும் வாசகரை கவரக்கூடிய வகையிலும் ஊடகங்கள் மத்தியில் போட்டா போட்டி நிலவுகிறது. வர்த்தக நோக்கில் முந்திக் கொடுப்பதில் முனைப்பாக இருக்கும் சில ஊடகங் கள் தங்களது சமூகப் பார்வையை மறந்துவிடுவது இலங்கை யில் மாத்திரமல்ல, உலகில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தி யிருக்கிறது.

பெரும்பாலான ஊடகங்களினதும் ஊடகவியலாளர்களினதும் தேடல்கள் யாவும் முரண்பாடு தொடர்பான விடயங்களைக் கொண்டதாகவே இருக்கின்றன. சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுடன் பிரதேசங்களில் இடம் பெறும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் முறையாக அறிவூட்டுவதிலும் ஊடகவியலாளர்கள் பங்களிப்புச் செய்யலாம். ஆனால் இலங்கையில் இந்த நிலை முற்றாகத் தலைகீழாகவே காணப்படுகிறது.

வட மாகாண அபிவிருத்தி துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. என்றாலும், அபிவிருத்தி தொடர்பான செய்திகளு க்கு பெரும்பாலான ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுப்ப தாகத் தெரியவில்லை. அதற்குப் பதிலாக எதிர்மறையான அரசியல் செய்திகளையே வெளியிடுகின்றன.

ஊடகங்கள் நடுநிலைத் தன்மையை இழந்து அரசியல் சார்புடன் செயற்படுவதே இதற்குக் காரணமாக அமைகின்றது. ஆகவே, முரண்பாடு அல்லது எதிர்மறையான செய்திகளுக்கு முக்கி யத்துவம் கொடுக்கும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் அபிவிருத்தி தொடர்பான செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பது நல்லதொரு களமாக அமையும் என்பதை மறந்து விடக் கூடாது.

ஆகவே, அபிவிருத்தியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் ஊடகப் பயன்பாடே இன்றைய காலகட்டத்தின் மிகப் பெரிய தேவையாகும்.

பல்வேறு சக்திகள் இலங்கையர்களை பிளவுபடுத்த முயல்கின் றன சர்வதேச ரீதியில் பார்க்கும் போது சில ஊடகங்களும் பிரிவினைவாதத்துக்கு உந்துதலாக இருப்பதை காண முடிகிறது. எனினும், கொடிய பயங்கரவாதத்தை நாம் முடிவு க்குக் கொண்டு வந்துள்ளோம்.

ஆகவே, மீண்டும் பிரிவினையையும் பயங்கரவாதத்தையும் உருவாக்க ஊடகங்கள் துணைபோகக் கூடாது. யாழ்ப்பா ணத்தில் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வொன்று கடந்த வாரம் இடம்பெற்றது. தகவல் திணைக்களம் ஏற்பாடு செய்த இந்தக் கருத்தரங்கில் உரையாற்றிய ஊடகத்துறை மேற்பார்வை எம்.பி. ஏ. எச். எம். அஸ்வர் இந்த விடயத்தை தெளிவாகக் கூறினார்.

சமூகங்களுக்கிடையில் சகோதரத்து வமும், நட்பும், அந்நியோன்யமும் ஏற்படுவதற்கு ஊடகங்க ளின் பணி அளப்பரியது என்பதை தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அத்துகல இந்தக் கருத்தரங்கில் கூறினார். இந்த விடயங்கள் வளரும் இளம் ஊடகவியலாளர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி