ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் பிறை 29
ஜய வருடம் ஆவணி மாதம் 10ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, AUGUST ,26, 2014
வரு. 82  இல. 202
 

காசாவில் புதிய யுத்த நிறுத்தத்திற்கு எகிப்து மத்தியஸ்தர்கள் பரிந்துரை

காசாவில் புதிய யுத்த நிறுத்தத்திற்கு எகிப்து மத்தியஸ்தர்கள் பரிந்துரை

இஸ்ரேலின் புதிய தாக்குதல்களில் மேலும் எட்டு பலஸ்தீனர்கள் பலி: இரு பள்ளிவாசல்கள் தரைமட்டம்

இஸ்ரேல் - பலஸ்தீன் சமரச முயற்சியில் மத்தியஸ்தம் வகிக்கும் எகிப்து காசாவில் புதிய யுத்த நிறுத்தம் ஒன்றை அறிவிக்க வுள்ளதாக இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன தரப்புகள் நேற்று திங்கட்கிழமை உறுதிசெய் தன. இதில் காசாவுக்கான எல்லைக் கட வைகளை திறக்கவும் உதவி மற்றும் கட்டு மானப்பொருட்களை அனுமதிக்கவும் பரிந்து ரைக்கப்பட்டுள்ளதாக பலஸ்தீன சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மறுபுறத்தில் எகிப்து மத்தியஸ்த முயற்சி யில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ள நிலையில் ஒரு மாதகால யுத்த நிறுத்தம் ஒன்றுக்கான அறிவிப்பு வெளியாகவிருப்ப தாக இஸ்ரேல் இராணுவ வட்டாரம் நேற்று உறுதிசெய்திருந்தது. எனினும் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் நேற்றைய தினத்தி லும் தொடர்ந்ததோடு மேலும் பலர் கொல் லப்பட்டனர்.

எகிப்தின் ஹிப்ரூ மொழி இணையதளம் ஒன்று வெளியிட்டிருக்கும் செய்தியில், எகிப்து புதிய யுத்த நிறுத்தத்தை திங்கட்கிழமை (நேற்று) பின்னேரம் அறிவிக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த யுத்த நிறுத்தத் திற்கு ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜpஹாத் அமைப்புகள் இணக்கம் தெரிவித்திருப்பதாக வும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய பரிந்துரைகள் பற்றி பலஸ்தீன் மற் றும் இஸ்ரேல் தரப்புகளுடன் தொடர்பை ஏற் படுத்தியதை எகிப்து அதிகாரி ஒருவர் உறுதிசெய்துள்ளார்.

"எல்லைக்கடவைகளை திறப்பது, உதவிப் பொருட்களுக்கு அனுமதி அளிப்பது மற்றும் கட்டுமானப் பொருட்களுக்கு அனுமதி அளிக் கும் ஒரு தற்காலிக யுத்த நிறுத்தத்திற்கான ஆலோசனை முன்வைக்கப்பட்டிருக்கிறது. இதில் சிக்கலான விடயங்கள் குறித்து ஒரு மாதத்தில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்ப டும்" என்று பலஸ்தீன அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

"நாம் இந்த பரிந்துரைகளை ஏற்க எதிர் பார்த்திருக்கிறோம். ஆனால் இஸ்ரேலின் பதி லுக்காக காத்திருக்கிறோம்" என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய யுத்த நிறுத்தத்தின் முதல் கட்டமாக காசாவுக்கான எகிப்தின் ரபாஹ் எல்லைக் கடவை திறக்கப்படும் என்பதோடு காசாவின் மீன்பிடி எல்லை 12 கடல் மைல் தொலை வாக விரிவுபடுத்தப்படும் என்று இஸ்ரேல் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மற்றுமொரு பலஸ்தீன அதிகாரி நேற்று வெளியிட்ட தகவலில், இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன சமரச பேச்சுவார்த்தையாளர்கள் 48 மணி நேரத்திற்குள் கெய்ரோ திரும்பும் படி எகிப்து கோரவிருப்பதாக குறிப்பிட்டார்.

நீண்டகால யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு காசா மீது இஸ்ரேல் கடந்த எட்டு ஆண்டுக ளாக முன்னெடுத்துவரும் முற்றுகை அகற் றப்பட வேண்டும் என்றும் காசாவில் துறை முகம் மற்றும் விமானநிலையங்கள் திறக்கப் பட வேண்டும் என்றும் ஹமாஸ் உறுதியாக நிற்கிறது. ஆனால் இந்த நிபந்தனைகளுக்கு அனுமதி அளிக்க காசா இராணுவமயமற்ற பகுதியாக மாற்றப்பட வேண்டும் என்று இஸ் ரேல் பதில் நிபந்தனை விதிக்கிறது.

ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் காலித் மி'hல் ஞாயிறன்று குறிப்பிடும்போது, காசா மக்கள் உணவு மற்றும் மருத்துவ தட்டுப் பாட்டால் அவதியுறுவதாலேயே முற்றுகையை தளர்த்துமாறு அழுத்தம் கொடுப்பதாக தெரி வித்தார். ஈரான் தொலைக்காட்சி சேவைக்கு அளித்த பேட்டியில் மி'hல், இஸ்ரேலுட னான பேச்சுவார்த்தை மூலம் எதனையும் எட்ட முடியாது என்றும் அர்த்தமற்றது என் றும் குறிப்பிட்டார். "போராட்டம் மற்றும் அழுத்தத்தைக் கொண்டே இஸ்ரேல் எமது நிலத்தை திருப்பி தருவார்கள்" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

யுத்த நிறுத்தத்திற்கான இராஜதந்திர முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையிலும் காசா மீது இஸ்ரேல் நேற்று திங்கட்கிழமை யும் உயிர்ப்பலி தாக்குதல்களை நடத்தியது. கடந்த ஞாயிறு நள்ளிரவு தொடக்கம் இடம் பெற்ற இஸ்ரேல் வான் தாக்குதல்களில் எட்டு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா மருத்துவ வட்டாரம் உறுதிசெய்துள்ளது.

ஜபலியா அகதி முகாமிற்கு அருகில் இருக் கும் வீடொன்றின் மீது இஸ்ரேல் போட்ட குண்டில் தாய் ஒருவரும் மூன்று குழந்தைக ளும் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இஸ்ரேலின் மற் றொரு தாக்குதலில் மொஹமத் அல் அவுல் என்பவர் கொல் லப்பட்டுள்ளார். இவர் ஹமாஸ{க் காக நிதி சேகரிப்ப வர் என்று இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட் டுள்ளது. எனினும் ஹமாஸ் தரப்பில் இருந்து எந்த விளக் கமும் அளிக்கப்பட வில்லை.

இஸ்ரேல் ஞாயிறு இரவு இரு பள்ளி வாசல்களை தரை மட்டமாக்கியது. பைத் ஹனுன் பகுதியில் இருக்கும் ஒமர் இப்ன் அப்த் அல் அஸிஸ் பள்ளிவாசல் மற்றும் அலி இபுனு அபு+ தாலிப் பள்ளிவாசல் இலக்காகியுள்ளன.

இதன்போது பலருக்கும் காயம் ஏற்பட்டுள் ளது. கடந்த ஜ{லை 8 ஆம் திகதி தொடக கம் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களில் குறைந்தது 100 பள்ளிவாசல்கள் சேத மாக்கப்பட்டுள்ளன.

கடந்த 49 தினங்களாக நீடித்த இஸ் ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கை தற்போது 2,122 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் அதிகப் பெரும்பாலானவர்கள் அப்பாவி பொதுமக்கள் அவர். அதிலும் 478 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தாக்குதல் காரணமாக சுமார் 460,000 பேர் தமது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இது காசாவின் மொத்த சனத்தொகையில் கால்பங்காகும்.

மறுபுறத்தில் இஸ்ரேல்-காசாக்கு இடையி லான எரெஸ் எல்லைக்கடவையை மூடுவ தாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

காசாவில் இருந்து நடத்தப்பட்ட ரொக் கெட் தாக்குதலில் மூன்று இஸ்ரேலியர் காயமடைந்ததை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட் டுள்ளது.

இந்த எல்லைக்கடவையை ஊடகவி யலாளர்கள், உதவி பணியாளர்கள் மற்றும் இஸ்ரேலுக்குள் நுழைய அனுமதி பெற்ற பலஸ்தீனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி