ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் பிறை 29
ஜய வருடம் ஆவணி மாதம் 10ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, AUGUST ,26, 2014
வரு. 82  இல. 202
 

உசேன் போல்ட் உலக சாதனை

உசேன் போல்ட் உலக சாதனை

உலகின் அதிவேக ஓட்ட வீரரான உசேன் போல்ட் மூடிய அரங்கில் வேகமாக ஓடி புதிய உலக சாதனையை நிலை நாட்டியுள்ளார்.

நபிபியா வீரர் பிராங்கி பிரெட்ரிக்ஸ் 1996 ஆம் ஆண்டு 10.05 செக்கன்களில் 100 மீட்டர் தூரத்தை ஓடி நிலை நாட்டிய சாதனையை உசேன் போல்ட் 9.58 செக்கன்களில் ஓடி முறியடித்துள்ளார்.

போலாந்தில் உள்ள வார்ஸ்வவ் தேசிய காற்ப்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்ற ஓட்டப் பந்தயத்திலே இந்த சாதனையை நிலை நாட்டியுள்ளார்.

உபாதைகளில் இருந்த மீண்ட பின்னர் உசேன் போல்ட் பங்குபற்றிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். இனி தனக்கு உபாதை வராது என நம்புவதாகவும், உபாதை காரணமாக தான் பட்ட கஷ்டங்கள் போதும் எனவும் உசேன் போல்ட் கூறியுள்ளார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி