ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் பிறை 29
ஜய வருடம் ஆவணி மாதம் 10ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, AUGUST ,26, 2014
வரு. 82  இல. 202

இலங்கையின் இறைமையை இந்தியா
மதிக்க வேண்டும்

இந்தியா ஆலோசனை வழங்கலாம்; உத்தரவிட முடியாது

இந்திய பிரிவினைவாதிகளுடன் இலங்கை பேச்சு நடத்தினால் இந்தியாவின் உணர்வு...?

நிபுணத்துவக்குழுவின் உறுப்பினர் பத்மஸ்ரீ அவ்தாஸ் கெளஷால்

இந்தியா இலங்கையுடன் பேச்சுக்களை மேற்கொள்ளலாம் ஆலோசனைகளை வழங்கலாம். ஆனால் அந்த நாடு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என உத்தரவிட முடியாது. இலங்கையின் இறைமையை இந்தியா மதிக்க வேண்டும் என காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கும் நிபுணத்துவ குழுவின் உறுப்பினரான பத்மஸ்ரீ அவ்தாஸ் கெளஷால் தெரிவித்துள்ளார். காணாமற் போனவர்கள் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக் குழுவிற்கு ஆலோசனை வழங்கவென நிபுணத்துவராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இந்திய மனித உரிமை செயற்பாட்டாளர் பத்மஸ்ரீ அவ்தாஸ் கெளஷால் நியமிக்கப்பட்டுள்ளார்.

விவரம்

வாக்காளர்களுக்கு விடுமுறை வழங்க ஆணையர் கோரிக்கை

தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வாக்களிப்பதற்கு விடுமுறை பெற்றுக்கொடுக்குமாறு தொழில் தருநர்களிடம் தேர்தல்கள் ஆணையாளர் கோரியுள்ளார்.

விவரம்


நாட்டின் பல்வேறு பகுதிகளில் விபத்துகள்: நால்வர் உயிரிழப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற வாகன விபத்துகளில் நால்வர் கொல்லப்பட்டனர். கொழும்பு - நீர்கொழும்பு மகாபாகே பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் கொல்லப்பட்டனர்.

விவரம்

யாழில் குழப்பத்தை உருவாக்கி செல்வந்த வாழ்வை தக்கவைக்க தமிழ் டயஸ்போராக்கள் பெரு முயற்சி

உள்ளூர் தீவிர அரசியல்வாதிகளூடாக பணப் பரிமாற்றங்கள்

வெளிநாட்டு சுகபோக வாழ்க்கையை தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்ள யாழ்ப்பாணத்தில் பதற்ற நிலையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டே தமிழ் டயஸ்போராக்கள் உள்ளூர் தீவிர அரசியல்வாதிகளுக்கு பெருந்தொகை பணத்தை அனுப்பி வருவதாக யாழ். பாதுகாப்புப் படை கொமாண்டர் மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்தார்.

விவரம்

~நெனசல நிகழ்ச்சித் திட்டம்'

ரூ.290 மில். பணமும் ~மென் பொருட்களும் பில்கேட்ஸ் நிறுவனத்தினால் அன்பளிப்பு

நெனசல’ நிகழ்ச்சித் திட்டத்திற்கு கிராமிய மக்களுக்கான மிகச் சிறந்த தகவல் தொழில்நுட்பத்திற்காக விருதினையளித்துள்ள பில் மற்றும் மெலின்டா கேட்ஸ் நிறுவனம் இலங்கையின் தகவல் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்காக 2 ஆயிரத்து 900 இலட்சம் ரூபா (290 மில்லியன்) பெறுமதியான நிதி மற்றும் மென் பொருள்களையும் நன்கொடையாக வழங்கியுள்ளதென தொலைத் தொடர்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

விவரம்

பிரதியமைச்சராக பதவியேற்றுக் கொண்ட பீ. திகாம்பரத்தை கெளரவிக்கும் நிகழ்வு பண்டாரவளை கினிகமயில் நடைபெற்றது. பசறை தொகுதி ஸ்ரீல. சு. கட்சி அமைப்பாளர் வடிவேல் சுரேஷ் மற்றும் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பதுளை மாவட்ட வேட்பாளர் ராசமாணிக்கம் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கெளரவிப்பதை படத்தில் காணலாம்.
(படம் : பாயிஸ்)

தென் கொரிய ஜியொல் வெனம்டோ மாகாண ஆளுநர் வென்ங் மென்வாய், பிரதமர் தி.மு ஜெயரத்னவை அவரது உத்தியோக பூர்வ இல்லத்தில் சந்தித்த போது எடுக்கப்பட்ட படம். பிரதமருக்கு தென் கொரிய மாகாண ஆளுநர் நினைவுச் சின்னமொன்றை வழங்குவதைக் காணலாம்.


~~மின்சார வசதி இல்லாத கிராமங்களே நாட்டில் தற்போது இல்லையென்று கூறுமளவுக்கு நூற்றுக்கு 96 சதவீதம் மின்சாரம் வழங்கியுள்ளோம்''

2014 . 08 . 19
¦¸¡கொழும்பில்...