ஹிஜ்ரி வருடம் 1435 ஷவ்வால் பிறை 29
ஜய வருடம் ஆவணி மாதம் 10ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, AUGUST ,26, 2014
வரு. 82  இல. 202
 
யாழில் குழப்பத்தை உருவாக்கி செல்வந்த வாழ்வை தக்கவைக்க தமிழ் டயஸ்போராக்கள் பெரு முயற்சி

யாழில் குழப்பத்தை உருவாக்கி செல்வந்த வாழ்வை தக்கவைக்க தமிழ் டயஸ்போராக்கள் பெரு முயற்சி

உள்ளூர் தீவிர அரசியல்வாதிகளூடாக பணப் பரிமாற்றங்கள்

வெளிநாட்டு சுகபோக வாழ்க்கையை தொடர்ந்தும் தக்க வைத்துக்கொள்ள யாழ்ப்பாணத்தில் பதற்ற நிலையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டே தமிழ் டயஸ்போராக்கள் உள்ளூர் தீவிர அரசியல்வாதிகளுக்கு பெருந்தொகை பணத்தை அனுப்பி வருவதாக யாழ். பாதுகாப்புப் படை கொமாண்டர் மேஜர் ஜெனரல் உதய பெரேரா தெரிவித்தார்.

இலங்கையில் நடைபெற்ற நான்காவது பாதுகாப்புச் செயலமர்வில் கலந்துகொள்வதற்காக இந்தியாவை தளமாகக் கொண்டு செயற்படும் அவுஸ்திரேலியா, கானா, செம்பியா.

நெதர்லாந்து உள்ளிட்ட 11 நாடுகளைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் ஓய்வுபெற்ற இந்திய இராணுவ வீரர் மேஜர் ஜெனரல் அசோக் மேத்தா தலைமையில் யாழ்ப்பாணத்திற்கு நேரில் விஜயம் செய்தனர். இக்குழுவினருக்கு யாழ். குடாநாடு குறித்து விளக்கமளிக்கும் போதே மேஜர் ஜெனரல் பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவது முதல் அபிவிருத்தித் திட்டத்தில் இராணுவத்தின் பங்களிப்புக் குறித்தும் அவர் விளக்கமளித்தார். வட மாகாண இராணுவத் தலைமையகம், பிரதேசத்தின் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டிற்காக யாழ். ஹார்மனி நிலையத்திற்கூடாக 17 திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

அத்துடன் பொலிஸ் மற்றும் சிவில் நிர்வாகத்தினர் கோரிக்கை

விடுக்கும் வரை இராணுவம் சிவில் நிர்வாகத்துடன் தொடர்புபடுவதில்லை எனவும் அவர் இக்குழுவினருக்கு விளக்கமளித்தார்.

1118 குடும்பங்கள் குடியமர்த்தப்படவுள்ளனர். இவர்களுள் அநேகமானோர் தற்போது வதியும் சூழலுக்கு ஏற்ப தமது வாழ்க்கை முறையை மாற்றியமைத்துக் கொண்டிருப்பதனால் தொடர்ந்தும் அதே இடங்களிலேயே வாழ விரும்புகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்ததன் பின்னர் அவர்களை பொருத்தமான இடங்களிலேயே குடியமர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்ற போதிலும் சில அரசியல் தலையீடுகளால் இவ் வேலைத்திட்டம் தாமதமடைகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

தேசிய நல்லிணக்கத்தை நோக்கமாகக் கொண்டே செயற்படுத்தப்படுகின்ற அதேவேளை தேசிய பாதுகாப்பினை முன்னிறுத்தியே இராணுவத்தினர் செயற்படுகின்றனர்.

யாழ். குடாநாட்டுக்கு விஜயம் செய்த வெளிநாட்டு இராணுவ குழுவினர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது, புலம்பெயர் அமைப்புக்களும் சில அரசியல் தீவிர போக்குடையவர்களும் இலங்கை இராணுவத்தினரை சர்வதேசம் முன்னிலையில் சிங்கள இராணும் என்றே காட்ட முனைகின்றனர் என கொமாண்டர் பதிலளித்தார்.

இராணுவத்தில் தமிழ் இளைஞர்கள் இணைவது எல். ரீ. ரீ. ஈ. யினரால் முன்னர் தடுக்கப்பட்டது. புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக இராணுவத்தில் உயர் பதவி வகித்தவர்கள் கூட இராணுவத்தை விட்டும் நாட்டை விட்டும் செல்ல நிர்ப்பந்தி க்கப்பட்டனர்.

இராணுவ சேவைக்கு தமிழ் இளைஞர்கள் மீண்டும் சேருவதற்கான கதவு தற்போது திறக்கப்பட்டுள்ளது. எனினும் அவர்கள் இராணுவத்தில் சேராமல் இருப்பதற்காக அவர்களை அச்சுறுத்துவதற்கு புலிகள் சார்பான சக்திகள் பிரசாரங்களைத் தொடங்கின.

இதுபோன்ற அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்ட போதிலும் யாழ்ப்பாணத்தில் 500 இற்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அண்மையில் இலங்கை இராணுவத்தின் தொண்டர் அணியில் இணைந்து கொண்டன ரெனவும் அவர் விளக்கமளித்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி