ஹிஜ்ரி வருடம் 1434 ரபீஉனில் அவ்வல் மாதம் பிறை 25
விஜய வருடம் தை மாதம் 14ம் நாள் திங்கட்கிழமை
MONDAY, JANUARY , 27 2014
வரு. 82  இல. 23
 

அவுஸ்திரேலிய ஓபன் லீ நா வசம்

அவுஸ்திரேலிய ஓபன் லீ நா வசம்

அவுஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் சீனாவின் லீ நா, ஸ்லோவேகியாவின் டொமினிகா சிபுல்கோவாவை வீழ்த்தி பட்டம் வென்றார். இது அவருக்கு இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். இதற்கு முன் 2011 இல் பிரெஞ்ச் ஓபன் பட்டம் வென்றிருந்தார்.

இந்த வெற்றியின் மூலம் மகளிர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் வென்ற வயதான வீராங்கனை என்ற பெருடையும் லீ நா பெற்றுள்ளார். இதற்கு முன் 1973ஆம் ஆண்டு மார்க்ரெட் கோர்ட் தன் 30வது வயதில் கிராண்ட்ஸ்லாம் வென்றிருந்தார். தவிர, இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் வென்ற லீ நா தரவரிசையிலும் முன்னேற்றம் அடைந்துள்ளார். இன்று திங்கட்கிழமை வெளியாக உள்ள தரவரிசைப் பட்டியலில் அவர் 3வது இடத்துக்கு முன்னேறுவார்.

டை பிரேக்கர் வரை சென்ற முதல் செட்டை லீ நா 7-6 (7/3) கைப்பற்றினார். இந்த செட் 70 நிமிடங்கள் நீடித்தன. 2வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய லீ நா 6-0 என அந்த செட்டை எளிதாக வென்றார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி