ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் பிறை 16
விஜய வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 22, 2013
வரு. 81 இல. 251
 

அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீ: அவசர நிலை பிரகடனம்

அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீ: அவசர நிலை பிரகடனம்

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் காட்டுத் தீ பரவியுள்ளது. அதை அணைக்க தற்போது தீயணைப்பு வீரர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். எனினும் கட்டுக்கடங்காமல் காட்டுத் தீ பரவி வருவதால் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அவசர நிலை பிரகடனத்தின் மூலம் மக்களை வீடுகளில் இருந்து வெளியேற்ற முடியும்.

தேவைப்பட்டால் மின்சார விநியோகத்தை துண்டிக்கவும் முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அங்கு வெப்பக் கால நிலை மாற்றத்தால் கடுமையான காற்று வீசும் என்றும் வானிலை முன்னறிவிப்புகள் வெளியா கியுள்ளன.

அதனால் அடுத்துவரும் நாட்களிலும் காட்டுத் தீ வேகமாக பரவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 40 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மோசமான இந்தக் காட்டுத் தீயில் 200 க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. தீ இன்னும் கட்டுப்படுத்த முடியாமல் பரவிக் கொண்டே இருக்கிறது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி