ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் பிறை 16
விஜய வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 22, 2013
வரு. 81 இல. 251
 

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் குழந்தைக்கு 23ம் திகதி பெயர் சூட்டு விழா

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் குழந்தைக்கு 23ம் திகதி பெயர் சூட்டு விழா

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மனைவி கேத் மிடில்டனுக்கு கடந்த ஜுலை 22ம் திகதி ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ஜோர்ஜ் என பெயர் வைத்தனர். அக்குழந்தைக்கு ஞானஸ்தானம் எனப்படும் பெயர் சூட்டு விழா நாளை (23ம் திகதி) நடக்கிறது.

இவ்விழா இளவரசர் வில்லியம் தம்பதியின் லண்டன் கெசிங்டன் அரண்மனையில் உள்ள சேப்பல் ராயல் என்ற சிறிய கிறிஸ்தவ தேவாலயத்தில் நடக்கிறது.

சர்வதேச செய்தி ஊடகங்களின் பார்வையில் இருந்து தப்பிக்க இந்த விழா மிக எளிமையான முறையில் நடத்துவதாக தெரிகிறது. பெயர் சூட்டு விழாவில் ராணி எலிசபெத், இளவரசர் வில்லியம் தந்தை இளவரசர் சார்லஸ் மற்றும் இளவரசி கேத்மிடில் டனின் பெற்றோர் மைக்கேல் –சுரோல் மிடில்டன் உள்ளிட்ட இரு குடும்பத்தினரும் பங்கேற்கின்றனர். குழந்தைக்கு கேட்ன்பர்ரி ஆர்ச்பிஷப் ஜென்டின் வெல்டா ஞானஸ்தானம் செய்து வைக்கிறார்.

தற்போது பிறந்துள்ள வில்லியமின் மகன் ஜோர்ஜ் இங்கிலாந்து அரச குடும்பத்தின் 3வது தலைமுறை பட்டத்து இளவரசர் ஆவார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி