ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் பிறை 16
விஜய வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 22, 2013
வரு. 81 இல. 251
 

அபூபக்கர் ஞாபகார்த்த கிண்ணம்; தென்கிழக்கு பல்கலைக்கழக அணி சுவீகரிப்பு

அபூபக்கர் ஞாபகார்த்த கிண்ணம்; தென்கிழக்கு பல்கலைக்கழக அணி சுவீகரிப்பு

மருதமுனை யுனைட்டட் விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையுடன், அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனம் தனது அங்கத்துவ “பி” பிரிவு கழகங் களுக்கிடையே நடாத்திவந்த மர்ஹும் ஈ.எல். அபூபக்கர் ஞாபகார்த்த உதைபந்தாட்டச் சுற்றப் போட்டியின் இறுதிப் போட்டியும், பரிசளிப்பு விழாவும் கடந்த 11ம் திகதி வெள்ளிக்கிழமை, மருதமுனை மஷ¤ர் மெளலானா விளையாட்டுத் தொகுதி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் தென் கிழக்குப் பல்கலைக்கழக உதைபந்தாட்ட அணியினர், தன்னை எதிர் கொண்ட கல்லோயா ஹீட்ஸ் அணியினரை (08-07) கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டு கிண்ணத்தினையும் பணப்பரிசி னையும் சுவீகரித்தனர்.

அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தலைவரும், கல்முனை மாநகரசபை உறுப்பினருமான சட்டத்தரணி ஏ.எம். றகீப் தலைமையில் நடைபெற்ற மேற்படி விழாவில், கல்முனை மாவட்ட நீதிபதி எம்.பி. முகைதீன் பிரதம அதிதியாகவும், கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் காமினி தென்னக் கோன் கெளரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

போட்டியின் போது உடற்கல்வி ஆசிரியர் எம்.பி.எம். றசீத் மத்தியஸ்தராக கடமையாற்றினார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி