ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் பிறை 16
விஜய வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 22, 2013
வரு. 81 இல. 251
 

வில்லியம் - கேட் தம்பதிக்கு பிறந்த 3 மாத குழந்தை ஜோர்ஜின் உருவம் பொறித்த தபால் தலை கனடாவில் வெளியீடு

வில்லியம் - கேட் தம்பதிக்கு பிறந்த 3 மாத குழந்தை ஜோர்ஜின் உருவம் பொறித்த தபால் தலை கனடாவில் வெளியீடு

இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேத் மிடில்டனுக்கு கடந்த ஜூலை மாதம் 23ம் திகதி அழகான ஆண்குழந்தை பிறந்தது.

ஜோர் என பெயரிடப்பட்டுள்ள 3 மாத குட்டி இளவரசரின் உருவத்துடன் கூடிய தபால் தலையை வெளியிட்டு கெளரவிக்க கனடா அரசு முடிவு செய்தது.

இதனையடுத்து, அச்சிடப்பட்ட மிக குறைந்த அளவிலான இந்த தபால் தலைகள் இன்று (22ம் திகதி) முதல் கனடாவில் உள்ள தபால் நிலையங்களில் கிடைக்கும் என அந்நாட்டின் தபால்துறை அமைச்சர் லிசா ரயிட் அறிவித்துள்ளார்.

இளவரசர் ஜோர்ஜ் பிறந்த போது சிறப்பு நாணயங்களை கனடா அரசு வெளியிட்டதும், நியூசிலாந்து நாட்டில் ஏற்கனவே இளவரசர் ஜோர்ஜின் உருவம் பொறித்த தபால் தலை வெளியிடப்பட்டதும் நினைவிருக்கலாம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி